செல்வி.யஷ்ணவியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கடற்புலிகளின் முன்னாள் படகோட்டிக்கு வழங்கிய வாழ்வாதார உதவி..
செல்வி.யஷ்ணவியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கடற்புலிகளின் முன்னாள் படகோட்டிக்கு வழங்கிய வாழ்வாதார உதவி.. (படங்கள் வீடியோ)
யாழ்.சரவணையைச் சேர்ந்தவர்களும், சுவிஸ் பெர்னில் வசிப்பவர்களுமான திரு.திருமதி கலைச்செல்வன் (சிவா) தர்ஜினி தம்பதிகளின் செல்வப் புதல்வி யஷ்ணவி தனது பிறந்தநாளை, மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் தாயக சிறுவர் சிறுமிகளோடு மிக விமர்சையாக கொண்டாடினார் என்பது நீங்கள் அறிந்ததே.
செல்வி யஷ்ணவியின் பிறந்த நாளை முன்னிட்டு தாயக உறவுகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க வேண்டும் என்ற விருப்பத்தினை கேட்டுக் கொண்டதற்கிணங்க செல்வி யஸ்ணவியின் பிறந்தநாளை முன்னிட்டு தாயகத்தில் வவுனியா சிதம்பரபுரம் கிராமத்தில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாகசபை உறுப்பினர் பெருமாள் சஞ்சீவன் அவர்களது நேர்த்தியான ஒழுங்கமைப்பில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு மிகமிக சிறப்பாக கொண்டாடப்பட்டதுடன், செல்வி யஷ்ணவியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் வசதிக்காக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதும் நீங்கள் அறிந்ததே.
இதனைத் தொடர்ந்து இன்றையதினமான தைப்பொங்கல் மற்றும் அமரர்.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்த தினமாகிய இன்று, செல்வி.யஸ்ணவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பெற்றோரின் முழுமையான நிதிப் பங்களிப்பில் முல்லைத்தீவு சிலாவத்தையில் வசிக்கும் திரு.திருமதி அன்ரனிக்கர்ணன் ஜெயவதனா குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவியாக “கோழிக்கூடும், கோழிகளும்” வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி பயனாளியான திரு.அன்ரனிக்கர்ணன் சுனாமியால் தனது மனைவியையும், நான்கு பிள்ளைகளையும் இழந்த நிலையில் சிலவருடங்களின் பின்னர் புலிகள் அமைப்பில் இருந்து போராளி வீரச்சாவடைந்த காரணத்தினால் கைம்பெண் ஆன பெண் ஒருவரை மறுதிருமணம் புரிந்து தற்போது இரண்டு பெண்பிள்ளைகள் உள்ளனர்.
மேற்படி பயனாளியான திரு.அன்ரனிக்கர்ணன் கடற்புலிகள் அணியில் “படகோட்டியாக”இருந்தவர்களில் ஒருவராகத் திகழ்ந்து, கடலில் நடந்த சமரில் முழங்காலில் விழுப்புண் அடைந்து பாரமான தொழில்கள் செய்ய முடியாமல் குடும்ப சூழ்நிலையால் கஷ்ரப்படுபவர் எனும் காரணத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்படி வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது.
இன்றைய மேற்படி நிகழ்வில், முல்லைத்தீவு தீர்த்தக்கரை கடற்தொழில் சமாசனப் பொருளாளர் திரு.சிவா அவர்கள் தலைமை தாங்கி கோழிக்கூட்டின் பெயர்ப்பலகையை திறந்து வைக்க அப்பிரதேச கிராம அபிவிருத்தி சங்கப் பொருளாளர் திரு.பாலகிருஷ்ணன் தலைமையில் கோழிகளை வழங்கி வைக்க, “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்”, வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.சஞ்சீவன், முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் திரு.விஜிதரன் ஆகியோர் முன்னிலை வகிக்க பயனாளிகளுக்கு “கோழிகளும், கோழிக்கூடும்” வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வி யஸ்ணவிக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் நல்வாழ்த்தினையும் மகிழ்ச்சினையும் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, இவற்றுக்கான நிதிப்பங்களிப்பினை வழங்கிய செல்வி. யஸ்ணவியின் பெற்றோர்களுக்கும் தாயக சொந்தங்களோடு இணைந்து மாணிக்கதாசன் நற்பனி மன்றம் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
14.01.2022
செல்வி.யஷ்ணவியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கடற்புலிகளின் முன்னாள் படகோட்டிக்கு வழங்கிய வாழ்வாதார உதவி.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1