மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களுடன், சந்திப்பும் கலந்துரையாடலும்.. (வீடியோ, படங்கள்)
மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களுடன், சந்திப்பும் கலந்துரையாடலும்.. (வீடியோ, படங்கள்)
#################################
சுமார் இரண்டு மாதத்துக்கு முன்னர் கனடா நாட்டிலிருந்து வருகை தந்திருந்த மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சர்வதேச இணைப்பாளர்களில் ஒருவரும், கனடா நாட்டுக்கான இணைப்பாளர்களின் ஒருவருமான திரு.குணராஜா உதயராஜா அவர்கள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” நிர்வாக சபை உறுப்பினர்களை உத்தியோக பூர்வமான சந்திப்பினையும், மன்றத்தின் செயற்பாடுகள், பதிவுகள், பயனாளிகள், எதிர்கால நடவடிக்கைகள், நடைமுறையில் ஏற்படும் சவால்கள், அதனை நிவர்த்தி செய்யும் வழிவகைகள் என மிக நீண்ட காத்திரமான கலந்துரையாடலை நடாத்தியிருந்தார்.
மிகவும் குறுகிய கால இடைவெளியில் ஒழுங்குபடுத்திய இக்கலந்துரையாடலில் தலைவர் திரு எஸ் கே. சண்முகலிங்கம், செயலாளர் திரு.மாணிக்கம் ஜெகன், பொருளாளர் செல்வி றம்மியா செல்வராஜா, யாழ் மாவட்ட இணைப்பாளர்களில் ஒருவரான திரு.விமல் வவுனியா மாவட்ட முன்னாள் இணைப்பாளர் மற்றும் நிர்வாகசபை முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி ந.பவளராணி, மாணிக்கதாசன் இலவச மறுமலர்ச்சி கல்விக் கூடத்தின் பொறுப்பாசிரியை திருமதி வேஜினி, தற்போதைய வவுனியா மாவட்ட இணைப்பாளர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினரான திரு.பெருமாள் சஞ்சீவன், நிர்வாக சபை உறுப்பினர் திரு.குணநீதன்.ஆகியோர் கலந்து கொண்டனர்..
நிகழ்வின் தொடக்கமாக வரவேற்பு நடைபெற்றது,.தலைவர் சர்வதேச இணைப்பாளர் பொருளாளர் யாழ் மாவட்ட இணைப்பாளர் என அனைவருக்கும் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சர்வதேச இணைப்பாளரினால் ஏனையோர் மாலை அணிவித்து மதிப்பளிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்துஒரு நிமிட அமைதிவணக்கம் செலுத்தப்படபடது. பின்னர் செயலாளரினால் இன்றைய கூட்டத்தின் நோக்கம் மற்றும் மன்றம் உருவாகிய விதம், தற்போது செயற்படும் வடிவம் என்பதை விளக்கமாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து தலைவர் உரை நிகழ்த்தினார். குறிப்பாக “இன்று அனைவரையும் சந்திக்க கூடியதாக இருந்தது.மகிழ்ச்சி. இந்த மன்றத்தின் தோற்றம் தம்பி சுவிஸ்ரஞ்சன் அவர்களது சிந்தனை. அவர் கதைக்கும் நேரமெல்லாம் இதைப் பற்றியே பேசுவார். அவரது எண்ணத்தை ஈடேற்றும் வகையில் இன்றைய கலந்துரையாடல் அமைய வேண்டும். எல்லோரும் பொதுப் பணிக்கு வருவது இல்லை.. ஒருசிலரே இவ்வாறு வருவார்கள், .அப்படி வந்தவர்களுக்கு நன்றி” என்றார்.
இதனைத் தொடர்ந்து பொருளாளர் தனது கருத்துரையில் “மன்றத்து முக்கிய விடயமே கணக்கினை ஓழுங்காக வைத்திருத்தல் தான், அது உடனுக்குடன் தமக்கு அனுப்ப வேண்டும் .இருப்பினும் மன்றத்துக்கென தனியான கணக்கினைப் பேண மன்றம் பதிவு செய்ய வேண்டும் அதனை துரிதப்படுத்த நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்” என்றார்
இதனிடையே மாணிக்கதாசன் இலவச மறுமலர்ச்சி கல்விக் கூடத்தின் பொறுப்பாசிரியை திருமதி வேஜினி அவர்கள் “கல்விக் கூடத்தின் தொடக்கம் பற்றியும், எதிர்கால செயற்பாடுகளின் விபரம் பற்றியும் எடுத்துக் கூறினார். நாட்டின் சூழ்நிலை சீராகும் சந்தர்ப்பத்தில் உடனடியாக கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதாகவும்” தெரிவித்தார்.
அதன் பின்னர் சர்வதேச இணைப்பாளர் உரையாற்றினார். அவர் தனதுரையில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக சமுகப்பணி செய்யும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நல்ல முயற்சி, சுவிஸ் ரஞ்சண்ணா அவர்களின் இடைவிடாத முயற்சியே இவ்வனைத்துக்கும் காரணம், இருப்பினும் உடனுக்குடன் நிகழ்வுகளை செய்து முடிப்பதிலே தான் தொடர்ந்து மன்றத்தை கட்டியெழுப்பலாம், எங்களை நம்பித் தான் காசு தருகின்றார்கள் அதற்கு நாம் விசுவாசமாக, நேர்மையாக நடந்தால் போதும் இது ஒரு மிகவும் சிரம்மான விசயம், கணக்கு விபரங்களை உடனுக்குடன் அனுப்ப வேண்டும் அப்போது தான் சகலவிதமான விடயங்களும் சீராக இயங்கும் மிக முக்கியமாக மன்றத்தை பதிவு செய்யும் விசயத்தை துரிதப்படுத்தவும்”.என்றார்.
இதன் பின்னரான குழுநிலை கலந்துரையாடல் இடம் பெற்றது அதனைத் தொடர்ந்து பிரதான ஒருங்கிணைப்பு இயக்குனர் சுவிஸ்ரஞ்சன் அண்ண அவர்கள் எல்லோருக்கும் வணக்கத்தினை தெரிவித்து மன்றம் தொடர்பான சகல விடயங்களையும் தெளிவுபடுத்தினார். “உதவி என்பது எமக்கு தாராளமாக் கிடைக்கும் ஆனால நாம் அதை எப்படி செய்கிறோம் என்பதிலே தான் கவனம் செலுத்த வேண்டும்.. பயனாளி தெரிவு என்பது மிக முக்கியமான விடயம், அதிக கவனம் செலுத்தியே பயனாளியை இனங்காண வேண்டும். எதையும் எந்நேரத்திலும் என்னோடு தாராளமாக கதைக்கலாம். உங்கள்ஒவ்வொருவரின் பாதுகாப்பு முக்கியம்.. பதிவு நடவடிக்கை முக்கியமானது.. நான் உங்கள் ஒவ்வொருவரோடும் கதைப்பேன்.. சமூக நோக்கத்தோடு இணைந்து பணி செய்ய அழைக்கின்றேன்.. நன்றி” என கூறி கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து பலவிதமான மன்றத்து எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக செயலாளரினால் எடுத்துக் கூறப்பட்டு இரவு உணவுடன் செயலாளரின் நன்றியுரையோடு கூட்டம் இரவு 9 மணியளவில் நிறைவு பெற்றது
சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் நடைபெற்ற கலந்.துரையாடலில் ஆக்கப்பூர்வமான தீர்மானங்கள் எடுக்கக் கூடியநாகவும் பலதரப்பட்ட விமர்சனங்களுக்கான தீர்வினையும் காணக் கூடியதாகவும் .
முடிவாக சகல உறவுகளோடு இரவு உணவை முடித்துக் கொண்டு கலந்துரையாடலை நிறைவு செய்தோம். நன்றி
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
25.01.2022
மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களுடன், சந்திப்பும் கலந்துரையாடலும்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1