அகவை நாளில் உதவிகள் வழங்கிய, சுவிஸ் திருமதி.செல்வி சுதாகரன்.. (வீடியோ, படங்கள்)
அகவை நாளில் உதவிகள் வழங்கிய, சுவிஸ் திருமதி.செல்வி சுதாகரன்.. (வீடியோ, படங்கள்)
######################
இன்றைய நாளில் சுவிஸ் நாட்டில் பிறந்தநாள் காணும் செல்வி என அன்பாக எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி. சுதாகரன் கிருபாதேவி அவர்கள் தனது நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” வவுனியா கற்குளம் நான்கு பிரிவில் உள்ள முன்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களுக்கு கற்றல் அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்ட்துடன் பயன்தரு தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கே வாழும் அநேக குடும்பங்கள் வறிய நிலையிலே தான் உள்ளார்கள். இவ்வாறான சூழ்நிலையில் வாழும் கிராமத்து மாணவ மானிகளுக்கு திருமதி.செல்வி சுதாகரன் அவர்களின் பிறந்தநாளான இன்று அவருடைய நிதிப்பங்களிப்பில் மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் அக்கிராம பெரியோர்கள் சிலருக்கு பயன்தரு தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
மிக நேர்த்தியாய் குறித்த கிராமத்தின் மத்தியில் உள்ள பொது இடத்தில் முன்பள்ளி ஆசிரியை திருமதி.சிவச்சந்திரன் திவாஹரணி அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமதி.செல்வி சுதாகரன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வில் “மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவடட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் உடன் அவ்வூர் பெரியோர் சிலரும் கலந்து கொண்டதுடன், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கயும் வழங்கி வைத்தனர். அத்துடன் பெருந்தொகையான மாணவர்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பொதுமக்கள் சிலருக்கு பயன்தரு தென்னை மரக்கன்றுகளை வழங்கி வைக்கப்பட்டது.
இறுதியாக கற்றல் உபகரணங்கள் பெற்றுக் கொண்ட மாணவர்கள் சார்பாக பிறந்தநாளைக் காணும் திருமதி.செல்வி சுதாகரன் குடும்பத்தினருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதுடன், திருமதி.செல்வி சுதாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டனர்.
திருமதி சுதாகரன் செல்வி அவர்களுக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ச்சியாக தாயக உறவுகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக நிதிப்பங்களிப்பினை வழங்கி வருவதற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி மன்றம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
01.04 2022.
அகவை நாளில் உதவிகள் வழங்கிய, சுவிஸ் திருமதி.செல்வி சுதாகரன்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1