சுவிஸ் அமரர் வை.விஜயநாதன் அவர்களின் ஆறாமாண்டு நினைவாக, விசேட உணவு வழங்கல்.. (படங்கள் வீடியோ)
சுவிஸ் அமரர் வை.விஜயநாதன் அவர்களின் ஆறாமாண்டு நினைவாக விசேட உணவு வழங்கல்.. (படங்கள் வீடியோ)
யாழ். உடுப்பிட்டியை சேர்ந்தவரும் சுவிஸில் அமரத்துவமடைந்தவருமான அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஆறாமாண்டு நினைவாக கணேசபுரம் கிராமத்தில் உள்ள காளி கோயில் முன்றலில் “முதல் நிகழ்வாக” நிகழ்வில் கலந்து கொண்ட கிராம மக்களுக்கு விசேட உணவு வழங்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் அக்கிராம மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சமுர்த்தி தலைவி திருமதி.ஜெயதேவி, சமுர்த்தி தலைவி திருமதி.நி.விசிர்ரேஷன், மாதர் சங்க தலைவி திருமதி.செ.சிவசோதி, சமுர்த்தி தலைவி திருமதி.மு ராஜினி, சமுர்த்தி செயலாளர் திருமதி.த.சிந்துஜா, சமுர்த்தி செயலாளர் திருமதி.ஏ.குமுதினி, இவர்களுடன் அறநெறி ஆசிரியையும், சிவசேனைத் தொண்டரும், சிவில் சமூகப் பாதுகாப்பு உறுப்பினரும், மாதர் சங்கப் பொருளாளருமான திருமதி.க.இந்திரகுமாரி ஆகியோருடன்..
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன், “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி.நவரத்தினம் பவளராணி, ஆகியோருடன் மாணவ,மாணவிகளும் அவ்வூர் பெரியோரும், பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் உறுப்பினர்களில் ஒருவரும், சமய, சமூக தொண்டரும், பொதுசேவையாளருமான “குமாரண்ணர்” என அன்புடன் அழைக்கப்படும், திரு. விஜயநாதன் இரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஆறாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக அக்குடும்பத்தினர் வழங்கிய நிதியில் இந்நிகழ்வு நடைபெற்றது.
வருடாவருடம் இவர்களின் நிதிப் பங்களிப்பில் பல்வேறு உதவிகள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக வழங்கப்படுவது தெரிந்ததே. அதேபோல் இவ்வருடமும் முதல் நிகழ்வாக இந்நிகழ்வு நடைபெற்று ஏனைய நிகழ்வுகளும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமரத்துவமடைந்த அமரர்.திரு.வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களுக்கு தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு அஞ்சலி செலுத்துவதோடு அமரர் திரு.வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஆறாமாண்டு நினைவாக அனுஸ்டிக்கப்பட்டு, ஆறாமாண்டு நினைவு நிகழ்வுக்கு நிதிப்பங்களிப்பினை வழங்கிய அன்னாரது மகனான சுவிஸில் வதியும் திரு.திருமதி குமாரண்ணர் குடும்பத்தினருக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
05.04 2022.
சுவிஸ் அமரர் வை.விஜயநாதன் அவர்களின் ஆறாமாண்டு நினைவாக.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1