சரவணை அம்பிகாபதி அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவுதினம்.. (படங்கள், வீடியோ)
சரவணை அம்பிகாபதி அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவுதினம்.. (படங்கள், வீடியோ)
யாழ்.சரவணையில் பிறந்து வவுனியாவில் அமரத்துவமடைந்த “ரைக்கர்கார சின்னத்தம்பி” என அன்புடன் அழைக்கப்படும், திரு.கார்த்திகேசு அம்பிகாபதி அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவை முன்னிட்டு, அவரது மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவுகள் சார்பாக அவரது குடும்பத்தினர்” வழங்கிய நிதிப் பங்களிப்பில், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஏற்பாட்டில்,
சிவபுரம் ஐயனார் கோவிலடி முன்றலில் அக்கிராம முதியோர், மாணவ மாணவிகள், தேவையுடையோர் உட்பட நிகழ்வில் கலந்து கொண்ட அக்கிராம பொது மக்களுக்கு விசேட சைவ உணவு வழங்கப்பட்ட்து.
மேற்படி நிகழ்வில், முதியோர் தலைவர்: திரு.குமாரசாமி, முன்பள்ளி ஆசிரியை திருமதி. ஜெ. கோமதிதேவி, Rds தலைவர்: திரு.ஜெ. முகுந்தகுமார், அறனெறி பாடசாலை ஆசிரியை திருமதி. சுஜிவா ஆகியோருடன் “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன், “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி.பவலராணி நவரெத்தினம் ஆகியோரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
அந்தியேட்டி நிகழ்வுக்கு கிராம மக்கள் கலந்து அமரர் திரு.கார்த்திகேசு அம்பிகாபதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தீபாரதனை காட்டப்பட்டு தேவார பாராயணம் பாடப்பட்டு அந்தியேட்டிக் கிரியைகள் நிறைவு பெற்றதுடன், கலந்து கொண்ட பொதுமக்களுக்கு விசேட சைவ உணவுகள் வழங்கப்பட்டது.
அமரத்துவமடைந்த அமரர்.திரு.கார்த்திகேசு அம்பிகாபதி அவர்களுக்கு தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு அஞ்சலி செலுத்துவதோடு, அமரர் திரு.கார்த்திகேசு அம்பிகாபதி அவர்களது 31 ஆம் நாள் நினைவாக அனுஸ்டிக்கப்பட்டு, 31 ஆம் நாள் அந்தியேட்டி நிகழ்வுக்கு நிதிப்பங்களிப்பினை வழங்கிய அன்னாரது குடும்பத்தினருக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
07.04.2022.
சரவணை அம்பிகாபதி அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவுதினம்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1