கனடா செல்வி.சிந்தூரியின் பெற்றோர் வழங்கிய, கோழிக்கூட்டுடன் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)
கனடா செல்வி.சிந்தூரியின் பெற்றோர் வழங்கிய, கோழிக்கூட்டுடன் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)
“சிந்தூரியின்” ருதுஷோபன நன்னாள் விழாவில்,
விருட்ஷங்கள் நிலத்தில் வேரோடி பரவட்டும்..
பூ மலர்ந்த புனிதத்தில், பெற்றோர்களின் பூரிப்பில்,
புண்ணிய சேவைகளில், இதயங்கள் மகிழ எண்ணி..
பெற்றோர் வழங்கும் உதவிக்கு, மனதார வாழ்த்துகிறோம்.
யாழ்.அளவெட்டியை சேர்ந்தவர்களும், கனடாவில் வசிப்பவர்களுமான திரு.திருமதி சிவமயம் புஷ்பாஞ்சலி தம்பதிகளின் புதல்வி செல்வி.சிந்தூரி அவர்களின் இன்றைய “ருதுஷோபன விழா” நன்னாளில், அவரது பெற்றோரின் நிதிப் பங்களிப்பில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பம் ஒன்றுக்கு பெறுமதியான கோழிக்கூடும், கோழிகளும், கோலிக் குஞ்ச்சுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி குடும்பம் இருவருமே வாய்பேச முடியாதவர்கள் என்பதுடன், எந்தவொரு தொழில் வாய்ப்பும் இன்றி, இரண்டு பெண் பிள்ளைகளுடன் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருபவர்கள் என்பதும், இவர்கள் “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு தமக்கு வாழ்வாதார உதவியாக இதனை வைக்குமாறும் கோரி இருந்தனர். இதனையறிந்த சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளரான திரு.குணராஜா உதயராஜா இதுக்கான ஏற்பாட்டை உடன் மேற்கொண்டு தந்திருந்தார். திரு.திருமதி சிவமயம் புஷ்பாஞ்சலி தம்பதிகளின் புதல்வி செல்வி.சிந்தூரி அவர்களின் இன்றைய “ருதுஷோபன விழா” நன்னாளில், அவரது பெற்றோரின் நிதிப் பங்களிப்பில் மேற்படி வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் ஆர் டி எஸ் தலைவர் திரு.முருகையா முகுந்தா குமார், கோயில் தலைவர் திரு.மலையாண்டி சசிகரன், கிராமிய சங்க உறுப்பினர் திருமதி.அருமைராஜா சத்யா,”மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செயற்பாடடாலர்களில் ஒருவரான மன்னார் தோழர்.ஜேம்ஸ், ஆகியோருடன் “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட பொறுப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன், “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி.பவளராணி நவரெட்ணம் ஆகியோரும் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்து இருந்தனர்.
இன்றையதினம் வாழ்வாதார உதவியாக கோழிக்கூட்டையும், கோழிகளையும் பெற்றுக் கொண்டவர்களில் சார்பில், அம்மாக்களில் ஒருவர் இது குறித்துக் குறிப்பிடுகையில், “எங்களுக்கான உதவும் அமைப்பாக மாணிக்கதாசன் நற்பணி மன்றம் உள்ளது. அவர்களின் மூலம் நடைபெற்ற இந்நிகழ்வை வரவேற்பதுடன், இதனை செய்துதந்த திரு.திருமதி சிவமயம் புஷ்பாஞ்சலி தம்பதிகளை மனதார பாராட்டுவதுடன், மஞ்சள் நன்னீராட்டு விழாவின் பிள்ளை செல்வி.சிந்தூரி அவர்களின் எதிர்காலம் சிறப்புற அமைய இறைவனை வேண்டுகிறோம்” என்றார். தாயக உறவுகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
13.04 2022.
கனடா செல்வி.சிந்தூரியின் பெற்றோர் வழங்கிய, கோழிக்கூட்டுடன் வாழ்வாதார உதவிகள்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1