;
Athirady Tamil News

வவுனியா எல்லைக் கிராமத்தில், கனடா மாதுலனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)

0

வவுனியா எல்லைக் கிராமத்தில், கனடா மாதுலனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)

புங்குடுதீவின் வழித் தோன்றலும், கனடாவில் வதியும் திரு.திருமதி. ரதீஸ்வரன் ஜெயந்தினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் “செல்வன்.மாதுலன் ரதீஸ்வரன்” அவர்களின் பன்னிரெண்டாவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் பெற்றோரின் நிதிப் பங்களிப்பில் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவியாக தையல் மிசின் மற்றும் தையலுக்கான துணி வகைகள் வழங்கி வைக்கப்பட்டது..

வவுனியா கற்பகபுரம் கிராமத்தில் வசிக்கும் வாய்பேச முடியாத, விசேட தேவைக்கு உட்பட்ட தம்பதிகள் மிகவும் ஏழ்மை நிலையில் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில், அக்குடும்பத்தின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, புங்குடுதீவின் வழித் தோன்றலும், கனடாவில் வதியும் திரு.திருமதி. ரதீஸ்வரன் ஜெயந்தினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் “செல்வன்.மாதுலன் ரதீஸ்வரன்” அவர்களின் பன்னிரெண்டாவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் பெற்றோரின் நிதிப் பங்களிப்பில் மேற்படி உதவி முதலாவதாக வழங்கப்பட்டது. இதுக்குரிய ஏற்பாட்டினை “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் திரு.குணராஜா உதயராஜா அவர்கள் மேகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வில் வவுனியா கற்பகபுரம் சமூக சேவையாளரான கிராமிய சங்க உறுப்பினர் திருமதி.அருமைராஜா சத்யா, “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” பொருளாளர் செல்வி.ரம்மியா செல்வராஜா, “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட பொறுப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன்,  “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” முக்கியஸ்தர்களான திருமதி.பவளராணி நவரெட்ணம், திரு.குணநீதன் ஆகியோரும் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்து இருந்தனர்.

இதனையடுத்து “செல்வன். மாதுலன் ரதீஸ்வரன்” அவர்களின் பன்னிரெண்டாவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது பெற்றோரின் நிதிப் பங்களிப்பில், வவுனியா எல்லைக் கிராமமொன்றில் கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்துப் பாடி கொண்டாடப்பட்டதுடன், கலந்து கொண்ட சிறுவர், சிறுமிகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் இனிப்பு வகைகளும் வழங்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செயலாளர் திரு.மாணிக்கம் ஜெகன், “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” பொருளாளர் செல்வி.ரம்மியா செல்வராஜா, “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட பொறுப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன்,  “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” முக்கியஸ்தர்களில் ஒருவரான திரு.குணநீதன் ஆகியோரும் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்து இருந்தனர்.

இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வன்.மாதுலன் ரதீஸ்வரன் அவர்களுக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு, நிதிப்பங்களிப்பினை வழங்கியதற்கும் அவரது பெற்றோருக்கு மேலான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

13.04 2022.

வவுனியா எல்லைக் கிராமத்தில், கனடா மாதுலனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. (வீடியோ)


“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.