புங்குடுதீவு வீராமலை அமரர்.க.மீனாம்பாள் (சுவிஸ்) அவர்களின் நாற்பத்தைந்தாம் நாள் நினைவாக.. (படங்கள், வீடியோ)
புங்குடுதீவு வீராமலை அமரர்.க.மீனாம்பாள் (சுவிஸ்) அவர்களின் நாற்பத்தைந்தாம் நாள் நினைவாக.. (படங்கள், வீடியோ)
புங்குடுதீவு வீராமலையை சேர்ந்தவரும், சுவிஸில் பாசெல் நகரில் வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான அமரர்.கனகசபை மீனாம்பாள் அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவாக அவரது மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவுகள் சார்பாக அன்னாரின் அன்புப்பேரன் செல்வன்.விதுஷன் (உரிமையாளர் “ஜெரு” றெஸ்ரூரென்ட் -சொலத்தூண்) வழங்கிய நிதிப் பங்களிப்பில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை “சக்தி இல்ல மாணவிகள்” அனைவரினதும் குடி தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு, பெரிய அளவிலான இரண்டு தண்ணீர் கொள்கலன்கள் வழங்கி வைக்கப்பட்டதும்,
அத்துடன் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை “சக்தி இல்ல மாணவிகள்” அனைவருக்கும் விசேட மதிய உணவு வழங்கப்பட்டதும். குறிப்பாக மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை “சக்தி இல்ல மாணவிகள்” அனைவருக்கும் விசேட மதிய உணவு வழங்கப்பட்டதுடன், சித்திரை வருடப் பிறப்பை முன்னிட்டு மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை “சக்தி இல்ல மாணவிகள்” அனைவருக்கும் “கைவிஷேச” காசும் வழங்கப்பட்டதும்,
அதேபோல் வவுனியா எல்லைக் கிராமமொன்றில் விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டதும் மேற்படி நிகழ்வில் அக்கிராமத்தில் உள்ள பெருமளவானோர் கலந்து சிறப்பித்ததுடன், முப்பத்தியொராம் நாள் அந்தியேட்டி நிகழ்வில் அமரர் கனகசபை மீனாம்பாள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி தொடர்ந்து தீபாரதனை காட்டப்பட்டு தேவாரபாராயணம் பாடப்பட்டு அந்தியேட்டிக் கிரியைகள் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து விசேட மதிய உணவும் வழங்கப்பட்டதும்.நீங்கள் அறிந்ததே..
இதேவேளை இன்றையதினம் புங்குடுதீவு வீராமலையை சேர்ந்தவரும், சுவிஸில் பாசெல் நகரில் வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான அமரர்.கனகசபை மீனாம்பாள் அவர்களின் நாற்பத்தைந்தாம் நாள் நினைவாக அவரது மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவுகள் சார்பாக அன்னாரின் அன்புப்பேரன் செல்வன்.விதுஷன் (உரிமையாளர் “ஜெரு” றெஸ்ரூரென்ட் -சொலத்தூண்) வழங்கிய நிதிப் பங்களிப்பில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை “சக்தி இல்ல மாணவிகள்” அனைவருக்கும் விசேட மதிய உணவு வழங்கப்பட்டது.
மேற்படி நிகழ்வானது மேற்படி “சக்தி மகளிர்” இல்ல தலைமைப் பொறுப்பாளரும், மண்முனை தென்மேற்கு பிரதேசசபை (கொக்கட்டிச்சோலை) தவிசாளருமான திரு.புஷ்பலிங்கம் அவர்களின் தலைமையில், மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச தவிசாளர் திரு.சண்முகராஜா விருந்தினராகக் கலந்து சிறப்பிக்க நடைபெற்றது.
இவர்களுடன் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சார்பில், மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச உபதவிசாளரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் பிரிவான “ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்” மத்தியகுழு உறுப்பினரும், உபதலைவர்களில் ஒருவருமான திரு.பொன் செல்லத்துரை எனும் (தோழர்.கேசவன்) அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
அமரத்துவமடைந்த அமரர்.திருமதி. கனகசபை மீனாம்பாள் அவர்களுக்கு தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு அஞ்சலி செலுத்துவதோடு அமரர் திருமதி. கனகசபை மீனாம்பாள் அவர்களது 45ஆம் நாள் நினைவாக அனுஸ்டிக்கப்பட்டு, 45 ஆம் நாள் அந்தியேட்டி நிகழ்வுக்கு நிதிப்பங்களிப்பினை வழங்கிய அன்னாரது பேரனான சுவிஸில் வதியும் செல்வன்.விதுஷன் (உரிமையாளர் “ஜெரு” றெஸ்ரூரென்ட் -சொலத்தூண்) மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
28.04 2022.
புங்குடுதீவு வீராமலை அமரர்.க.மீனாம்பாள் அவர்களின் நாற்பத்தைந்தாம் நாள் நினைவாக.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
புங்குடுதீவு வீராமலை “அமரர்.மீனாம்பாள் அவர்களின்” நினைவுநாள் நிகழ்வு வவுனியாவில்.. (வீடியோ, படங்கள்)