உடுப்பிட்டி “அமரர் சுவிஸ் வை.விஜயநாதன் அவர்களின் நினைவாக” கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)
உடுப்பிட்டி “அமரர் சுவிஸ் வை.விஜயநாதன் அவர்களின் நினைவாக” கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)
“ஆறாமாண்டு நினைவு தினம்”..
அமரர் திரு.வைத்திலிங்கம் விஜயநாதன்
“புகழோடு வாழ்ந்த பெருவள்ளல்,
புன்னகை பூவிதழ் தவழ்ந்தாடும்..
இறையோடு சேர்ந்த இந்நாளில் என்றும்,
எளியோர்க்கு ஈதலே இவர் தொண்டாகும்..
மலர் தூவி கரம் கூப்பி வணங்குகிறோம்.. அப்பா
ஆண்டு தோறும் உங்கள் நினைவில்..,
ஆற்றுவோம், உங்கள் நிதிப் பங்களிப்பில் நற்பணிகள்..
யாழ். உடுப்பிட்டியை சேர்ந்தவரும் சுவிஸில் அமரத்துவம் அடைந்தவருமான அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஆறாமாண்டு நினைவாக கடந்தவாரம் மரக்காரப்பளை கிராமத்தில் “அம்பிகைபாலன் கோட்டத்தில்” உள்ள ஸ்ரீ பத்திரகாளி கோயில் முன்றலில் “முதல் நிகழ்வாக” நிகழ்வில் கலந்து கொண்ட கிராம மக்களுக்கு விசேட உணவு வழங்கப்பட்டது.
அதேபோல் கடந்தவாரம், வவுனியா சமலங்குளம் அறநெறிப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான அப்பியாசக் கொப்பிகள் “இரண்டாவது நிகழ்வாக” வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் பயன்தரு தென்னைமரக் கன்றுகளும் மாணவ மாணவிகளின் சில பெற்றோருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
அதேபோல் இறுதினத்துக்கு முன்னர் “கொட்டும் அடைமழைக்கு மத்தியிலும்” மேற்படி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது, வவுனியா கூமாங்குளம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மேற்படி கூமாங்குளப் பிரதேசத்தைச் சேர்ந்த, சமூகசேவகர் திரு.கிட்ணர் பத்மநாதன் அவர்கள், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் கௌரவ தர்மலிங்கம் யோகராஜா அவர்கள் ஊடாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” விடுத்த வேண்டுகோளுக்கு அமைய மேற்படி “கற்றல் உபகரணங்கள்” வழங்கப்படுகிறது.
மேற்படி நிகழ்வில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளருமான கௌரவ தர்மலிங்கம் யோகராஜா அவர்களும், கூமாங்குள பிரதேச கிராம சேவகர் திரு.தவராசா, சமூகசேவகர் திரு.கிட்ணர் பத்மநாதன் ஆகியோருடன், “மாணிக்கதாசன் நற்பணி மன்ற முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் உறுப்பினர்களில் ஒருவரும், சமய, சமூக தொண்டரும், பொதுசேவையாளருமான “குமாரண்ணர்” என அன்புடன் அழைக்கப்படும், திரு. விஜயநாதன் இரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஆறாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக அக்குடும்பத்தினர் வழங்கிய நிதியில் இவ்வுதவி வழங்கப்பட்டது. வருடாவருடம் இவர்களின் நிதிப் பங்களிப்பில் பல்வேறு உதவிகள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக வழங்கப்படுவது தெரிந்ததே.
அமரத்துவமடைந்த அமரர்.திரு.வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களுக்கு தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு அஞ்சலி செலுத்துவதோடு அமரர் திரு.வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஆறாமாண்டு நினைவாக அனுஸ்டிக்கப்பட்டு, ஆறாமாண்டு நினைவு நிகழ்வுக்கு நிதிப்பங்களிப்பினை வழங்கிய அன்னாரது மகனான சுவிஸில் வதியும் திரு.திருமதி குமாரண்ணர் குடும்பத்தினருக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தனது மேலான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
10.05 2022
உடுப்பிட்டி “அமரர் சுவிஸ் வை.விஜயநாதன் அவர்களின் நினைவாக” கற்றல் உபகரணங்கள் வழங்கல்..(வீடியோ)
சுவிஸ் அமரர் வை.விஜயநாதன் அவர்களின் ஆறாமாண்டு நினைவாக, விசேட உணவு வழங்கல்.. (படங்கள் வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1