;
Athirady Tamil News

சுவிஸ் பிரம்மஸ்ரீ ப.பாஸ்கரசர்மா அவர்கள் “ஆச்சார்யராக அபிஷேகம்” நிகழ்வதனையிட்டு அன்னதான நிகழ்வு.. (வீடியோ, படங்கள்)

0

சுவிஸ் பிரம்மஸ்ரீ ப.பாஸ்கரசர்மா அவர்கள் “ஆச்சார்யராக அபிஷேகம்” நிகழ்வதனையிட்டு அன்னதான நிகழ்வு.. (வீடியோ, படங்கள்)

பிரம்மஸ்ரீ பத்மநாபசர்மா பாஸ்கரசர்மா (பாஸ்கரன் ஐயா) அவர்கள் குருவருள் மற்றும் இறையருள் முன்னிற்க விஷேட தீட்ஷை, நிர்வாண தீட்ஷை நிறைவு செய்து ஆச்சார்யராக அபிஷேகம் நிகழ்வதனையிட்டு (அதாவது குருக்கள் ஆகுவதையிட்டு) வாழ்த்தி வணங்கி நடைபெறும் நிகழ்வு..

அன்பிலே இறையை ஒத்தவர்
அமைதியில் ஆழியை மிக்கவர்
சாயலில் கருணையே கொண்டவர்
அந்த பெருமானின் ஆசிகள் பல பெற்றவர்

பக்தர்கள் வேண்டுதல் எத்தனை – அதை
நீர் இறைவனின் பாதத்தில் வைத்தனை
சித்தர்கள் போலவே பாவனை
அழகு சிவாச்சாரியாரின் தோரணை

வேதங்கள் எல்லாம் விரல் நுனியில்
ஆகம அறிவோ நாநுனியில்
சரியைகள் பழக்கும் வகை இலகு
இவர் கிரியைகள் நேர்த்தியில் தனி அழகு

மந்திரங்கள் மனதால் வெளிப்படுமே
உச்சாடன உச்சரிப்பும் இனித்திடுமே
பாராயணத்தில் பாவமும் கலந்திடுமே
பண்பட்ட பாடல்கள் நிறைத்திடுமே

குமார சர்மா தேர்ந்த குருக்களாகும் காலமிது
ஒரு பிறையொன்று முழு நிலவாகும் நேரமிது…
வாழ்க பல்லாண்டு… வாழ்க உம் அறப்பணி…
இப்புவி தனில் தொடரட்டும் உம் சிவப்பணி…

யாழ்.சுழிபுரம் பிரதேசத்தில் பிறந்து, பண்ணாகம் விசவத்தனை முருகன் கோயிலில் வாழ்ந்து, தனது ஒன்பது வயதில் உபநயனம் பெற்று, பிராமண குலத்தின் இரு பிறப்பாளாரான “சர்மாவாக” தன்னுடைய இறைசேவையைத் தொடங்கினார்.

பின்னர் காலச் சூழ்நிலையின் காரணமாக தனது இருபத்தொரு வயதில் வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்ததுடன், சுவிஸ் பேர்ண் மாநில தூண் சீரடி சாயிபாபா ஆலயத்தில் பிரதம குருவாக சேவை புரிந்து வருவதுடன், சுவிஸ் சுக் மாநில ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலும் கடமையாற்றி வருகிறார்.

இதேவேளை இம்மாதம் இருபதாம் திகதி, தன் ஆத்மீக இறைபணியை செவ்வனே செய்யும் பொருட்டு, ஆச்சார்யராக அபிஷேகம் (குருக்கள்) நிகழ்வதனையிட்டு வாழ்த்தி வணங்கி சிவகுமார் குடும்பம் (தூண்), குமார் குடும்பம் (ஒபேர்புர்க்), ரஞ்சன் குடும்பம் (ஒபேர்புர்க்) ஆகியோர் வழங்கிய நிதிப் பங்களிப்பில்..மேற்படி அன்னதான நிகழ்வானது ஈச்சங்குளம் பிரதேசத்தில் உள்ள தரணிக்குளம் பால விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது.

ஈச்சங்குளம் பிரதேசத்தில் உள்ள தரணிக்குளம் பால விநாயகர் ஆலயத்தில் தற்போது நடைபெற்று வரும் உற்சவ காலத்தில் ஆலய நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, மேற்படி அன்னதான நிகழ்வு நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் கௌரவ கமல் ஐயாக் குருக்கள் (ஆலய குரு, தரணிக்குளம்), திரு.இராசையா ராகுலன் (புதியநகர் சமூர்த்தித்த தலைவர், கோயில் உபதலைவர்), திரு.இராசரெத்தினம் ராஜகுமார் (ஆலய செயலாளர்), திரு.இராஜகோபால் திலீபன் ஆகியோருடன் மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் ஆகியோரும் முன்னிலை வகித்தனர்.

பிரம்மஸ்ரீ பத்மநாபசர்மா பாஸ்கரசர்மா (பாஸ்கரன் ஐயா) அவர்கள் சிவப்பணியில் மென்மேலும் பல பட்டங்களைப் பெற்று சைவத்திற்கும், தமிழுக்கும் சேவையாற்றி மனைவி, மக்களுடன் நிறைந்த ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ “தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” வாழ்த்தி வணங்குகின்றோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

15.05 2022.

சுவிஸ் பிரம்மஸ்ரீ ப.பாஸ்கரசர்மா அவர்கள் “ஆச்சார்யராக அபிஷேகம்” நிகழ்வதனையிட்டு அன்னதான நிகழ்வு.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.