சுவிஸ் பிரம்மஸ்ரீ ப.பாஸ்கரசர்மா அவர்கள் “ஆச்சார்யராக அபிஷேகம்” நிகழ்வதனையிட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)
சுவிஸ் பிரம்மஸ்ரீ ப.பாஸ்கரசர்மா அவர்கள் “ஆச்சார்யராக அபிஷேகம்” நிகழ்வதனையிட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)
பிரம்மஸ்ரீ பத்மநாபசர்மா பாஸ்கரசர்மா (பாஸ்கரன் ஐயா) அவர்கள் குருவருள் மற்றும் இறையருள் முன்னிற்க விஷேட தீட்ஷை, நிர்வாண தீட்ஷை நிறைவு செய்து ஆச்சார்யராக அபிஷேகம் நிகழ்வதனையிட்டு (அதாவது குருக்கள் ஆகுவதையிட்டு) வாழ்த்தி வணங்கி, கற்றல் உபகரணங்கள் வழங்கி நடைபெறும் நிகழ்வு..
அன்பிலே இறையை ஒத்தவர்
அமைதியில் ஆழியை மிக்கவர்
சாயலில் கருணையே கொண்டவர்
அந்த பெருமானின் ஆசிகள் பல பெற்றவர்
பக்தர்கள் வேண்டுதல் எத்தனை – அதை
நீர் இறைவனின் பாதத்தில் வைத்தனை
சித்தர்கள் போலவே பாவனை
அழகு சிவாச்சாரியாரின் தோரணை
வேதங்கள் எல்லாம் விரல் நுனியில்
ஆகம அறிவோ நாநுனியில்
சரியைகள் பழக்கும் வகை இலகு
இவர் கிரியைகள் நேர்த்தியில் தனி அழகு
மந்திரங்கள் மனதால் வெளிப்படுமே
உச்சாடன உச்சரிப்பும் இனித்திடுமே
பாராயணத்தில் பாவமும் கலந்திடுமே
பண்பட்ட பாடல்கள் நிறைத்திடுமே
குமார சர்மா தேர்ந்த குருக்களாகும் காலமிது
ஒரு பிறையொன்று முழு நிலவாகும் நேரமிது…
வாழ்க பல்லாண்டு… வாழ்க உம் அறப்பணி…
இப்புவி தனில் தொடரட்டும் உம் சிவப்பணி…
யாழ்.சுழிபுரம் பிரதேசத்தில் பிறந்து, பண்ணாகம் விசவத்தனை முருகன் கோயிலில் வாழ்ந்து, தனது ஒன்பது வயதில் உபநயனம் பெற்று, பிராமண குலத்தின் இரு பிறப்பாளாரான “சர்மாவாக” தன்னுடைய இறைசேவையைத் தொடங்கினார்.
பின்னர் காலச் சூழ்நிலையின் காரணமாக தனது இருபத்தொரு வயதில் வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்ததுடன், சுவிஸ் பேர்ண் மாநில தூண் சீரடி சாயிபாபா ஆலயத்தில் பிரதம குருவாக சேவை புரிந்து வருவதுடன், சுவிஸ் சுக் மாநில ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலும் கடமையாற்றி வருகிறார்.
இதேவேளை இம்மாதம் இருபதாம் திகதி, தன் ஆத்மீக இறைபணியை செவ்வனே செய்யும் பொருட்டு, ஆச்சார்யராக அபிஷேகம் (குருக்கள்) நிகழ்வதனையிட்டு வாழ்த்தி வணங்கி சிவகுமார் குடும்பம் (தூண்), குமார் குடும்பம் (ஒபேர்புர்க்), ரஞ்சன் குடும்பம் (ஒபேர்புர்க்) ஆகியோர் வழங்கிய நிதிப் பங்களிப்பில்..முன்னதாக அன்னதான நிகழ்வானது ஈச்சங்குளம் பிரதேசத்தில் உள்ள தரணிக்குளம் பால விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது நீங்கள் அறிந்ததே.
இதனைத் தொடர்ந்து இன்றையதினம் ஈச்சங்குளம் பிரதேசத்தில் உள்ள தரணிக்குளம் பகுதியில் மிகவும் வறிய நிலையில் உள்ள மாணவ மாணவிகளின் நிலையினையை எடுத்துக் கூறி, சமூகத் தொண்டரான திருமதி.வில்வராசா ஜெயந்தினி (சமுர்த்தி வங்கிச் சங்க உபதலைவர்) அவர்கள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் முன்வைத்த கோரிக்கையை மேற்கொண்டு, மேற்படி மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இரண்டாவது நிகழ்வாக நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் கௌரவ திரு.ஆறுமுகம் ஜெயரூபன் (பாஸ்ரர், புதியநகர் சமுர்த்தி பொருளாளர்), திரு.இராசையா ராகுலன் (புதியநகர் சமுர்த்தித் தலைவர், கோயில் உபதலைவர்), திரு.இராசரெத்தினம் ராஜகுமார் (ஆலய செயலாளர்), திரு.இராஜகோபால் திலீபன், திருமதி.வில்வராசா ஜெயந்தினி (சமுர்த்தி வங்கிச் சங்க உபதலைவர்) ஆகியோருடன் “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் ஆகியோரும் முன்னிலை வகித்தனர்.
பிரம்மஸ்ரீ பத்மநாபசர்மா பாஸ்கரசர்மா (பாஸ்கரன் ஐயா) அவர்கள் சிவப்பணியில் மென்மேலும் பல பட்டங்களைப் பெற்று சைவத்திற்கும், தமிழுக்கும் சேவையாற்றி மனைவி, மக்களுடன் நிறைந்த ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ “தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” வாழ்த்தி வணங்குகின்றோம்.. அத்துடன் மேற்படி நிகழ்வுகளுக்கு நிதிப் பங்களித்த திரு.சிவகுமார் குடும்பம் (தூண்), திரு.குமார் குடும்பம் (ஒபேர்புர்க்), திரு.ரஞ்சன் குடும்பம் (ஒபேர்புர்க்) ஆகியோருக்கும் “தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
17.05 2022.
சுவிஸ் பிரம்மஸ்ரீ ப.பாஸ்கரசர்மா அவர்கள் “ஆச்சார்யராக அபிஷேகம்” நிகழ்வதனையிட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ)
சுவிஸ் பிரம்மஸ்ரீ ப.பாஸ்கரசர்மா அவர்கள் “ஆச்சார்யராக அபிஷேகம்” நிகழ்வதனையிட்டு அன்னதான நிகழ்வு.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos