அச்சுவேலி சுவிஸ் கேமேஸ்வரி அவர்களின் பிறந்த தினத்தில், உலருணவுப் பொருட்கள், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)
அச்சுவேலி சுவிஸ் கேமேஸ்வரி அவர்களின் பிறந்த தினத்தில், உலருணவுப் பொருட்கள், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)
யாழ் அச்சுவேலியில் பிறந்து சுவிஸ் நாட்டில் பேர்ண் மாநில தூண் பிரதேசத்தில் வதியும் திருமதி. கேமேஸ்வரி சுபாஸ்கரன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கற்பகபுரம் பிரதேசத்தில் வாழ்வாதாரக் கஷ்ரமான சூழ்நிலையில் வாழும் குடும்பங்கள் சிலவற்றுக்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டதுடன், அப்பிரதேசத்தில் மாலைநேர வகுப்புக்கு செல்லும் சில மாணவ மாணவிகளுக்கான கற்றல் உபகாரணமாக அப்பியாசக் கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
யாழ் அச்சுவேலியில் பிறந்து சுவிஸ் நாட்டில் பேர்ண் மாநில தூண் பிரதேசத்தில் வதியும் திருமதி. கேமேஸ்வரி சுபாஸ்கரன் (ராஜு) அவர்கள் அவரது குடும்ப உறுப்பினர்களால் “ராசா” எனவும்; நண்பர்கள், உறவினர்களால் “கேமேஷ்” எனவும் அன்புடன் அழைக்கப்படும் இவர் சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய தீவிர தொண்டரும் ஆவார்.
இவரது இன்றைய பிறந்ததினத்தை முன்னிட்டு, அவரது குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில், “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக முதல் நிகழ்வாக கற்பகபுரம் கிராமத்தில் பிறந்தநாள் கேக் வெட்டி, வாழ்த்துப்பா பாடிக் கொண்டாடப்பட்டதுடன், அக்கிராமத்தில் வாழ்வாதாரக் கஷ்ரமான சூழ்நிலையில் வாழும் குடும்பங்கள் சிலவற்றுக்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டதுடன், அப்பிரதேசத்தில் மாலைநேர வகுப்புக்கு செல்லும் சில மாணவ மாணவிகளுக்கான கற்றல் உபகாரணமாக அப்பியாசக் கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அடுத்த நிகழ்வாக சிறுமுதலில் வியாபாரம் (தரப்பாள் நிழலில், பெட்டிக்கடை மூலம்) செய்யும் வயோதிபப் பெண்மணி ஒருவருக்கு, அவரது தொழிலை மேம்படுத்தும் வகையில் கடையை மேம்படுத்தும் வகையில் கடைக்கான தகரங்கள் வழங்கி சிறு உதவியும் வழங்கப்பட உள்ளது.
தொடர்ந்து இன்றைய பிறந்தநாளை முன்னிட்டு கொரோனா தொற்றுநோய் மற்றும் நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் ஏற்படட பொருளாதாரக் கஷ்டங்கள் காரணமாக வருமானமிழந்து செய்வதறியாது, அடுத்தவேளை உணவுக்கு என்ன செய்வது எனத் தெரியாமல், திகைத்து நிற்கும் நிலையில் உள்ள குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
கற்பகபுரம் போன்ற கிராமங்களில் வசிக்கும் கணவரை இழந்த குடும்பம்.. தனித்து வாழும் வயோதிபக் குடும்பம், குழந்தைத் தாய்மார் குடும்பங்களுக்கு திரு.கேமேஸ்வரி குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில், வவுனியா கற்பகபுரம் சமூக சேவையாளரான கிராமிய சங்க உறுப்பினர் திருமதி.அருமைராஜா சத்யா, ஆசிரியை திருமதி வினோத் சர்மினி, “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட பொறுப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன், “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி.பவளராணி நவரெட்ணம் ஆகியோரும் விருந்தினர்களாகவும் கலந்து கொள்ள, மற்றும் அக்கிராம முக்கியஸ்தர்கள் ஆகியோருடன் அக்கிராமப் பொதுமக்கள் பலரும், கலந்து சிறப்பித்தனர்.
தாயக சொந்தங்களின் தற்போதைய வாழ்வியல் சூழ்நிலையில், அவர்களின் வாழ்வியல் ஆதாரமாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தொடர்ந்து தனது பங்களிப்பினை செய்து வருகிறது.
அந்தவகையில் இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி கேமேஸ்வரி சுபாஸ்கரன் அவர்களை தாயக உறவுகளோடு இணைந்து, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் “தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி சந்தோஷமடைவதுடன், நிதிப்பங்களிப்பு வழங்கிய சுவிஸில் வசிக்கும் திரு.திருமதி.சுபாஸ்கரன் (ராஜு) குடும்பத்துக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்,
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
25.05.2022
அச்சுவேலி சுவிஸ் கேமேஸ்வரி அவர்களின் பிறந்த தினத்தில், உலருணவுப் பொருட்கள், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos