கனடா அமரர்.திருமதி.சி.ஜீவரஞ்சினி அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக வாழ்வாதார உதவிகள், கற்றல் உபகரணங்கள் வழங்கல்..(படங்கள், வீடியோ)
கனடா அமரர்.திருமதி.சி.ஜீவரஞ்சினி அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக வாழ்வாதார உதவிகள், கற்றல் உபகரணங்கள் வழங்கல்..(படங்கள், வீடியோ)
முப்பத்தியொராம் நாள் நினைவுடன் விழிநீர் அஞ்சலி..
புங்குடுதீவை சேர்ந்தவரும் கனடாவில் அமரத்துவமடைந்தவருமான அமரர்.திருமதி.சிவநாதன் ஜீவரஞ்சினி
நேற்றுவரை சிரித்தபடி நிஜமாய் இருந்தவரே!
கண்மூடி விழிப்பதற்குள்
கதை முடிந்து போனதெங்கே
ஈவிரக்கமில்லா காலனவன்..
ஊதிய பலூனில் ஊசி துளைத்தது போல்
உங்கள் மறைவுச் செய்தி கேட்டு உதிரமே உறைந்தது
நின்றவர் அழுகின்றனர்,
நினைத்துமே அழுகின்றனர்..
உள்ளத்தால் நாமெல்லாம்
எண்ணி எண்ணி அழுகின்றோம்
நித்தமும் உம் உருவம்
நினைவில் வருகையிலே
நீராண்ட மனம் எல்லாம் நிஜம்தானா???
வையகம் தன்னில் வாழ்வாங்கு வாழ்ந்து
வழிகாட்டிய எங்கள் அன்பு அம்மா
உங்கள் அன்பு நினைவுகள்
எங்கள் நெஞ்சங்களிலிருந்து
என்றென்றும் மாறாது மறையாது
பாசத்தை ஊட்டி பாதிவழியில்
கைவிட்டு மீளாத்துயில் கொண்டதேனோ?
நீங்கள் மறைந்து போனாலும் உங்கள்
நினைவுகள் அழிந்து போகாது…
புங்குடுதீவை சேர்ந்தவரும் கனடாவில் அமரத்துவமடைந்தவருமான அமரர்.திருமதி சிவநாதன் ஜீவரஞ்சினி அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவை முன்னிட்டு அன்னாரின் கணவர், மக்கள், மருமக்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் சார்பாக அன்னாரின் குடும்பத்தினர் வழங்கிய நிதிப் பங்களிப்பில்.. முதல் நிகழ்வாக வன்னி எல்லைக் கிராமமொன்றில் அன்னதான நிகழ்வு பல நூற்றுக்கணக்கான பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து கலந்து கொண்டோரின், அஞ்சலி நிகழ்வுடன் நடைபெற்றது நீங்கள் அறிந்ததே..
மேற்படி நிகழ்வானது, வன்னி எல்லைக் கிராமமொன்றில் அமைந்துள்ள திருமண மண்டப முன்றலில் பல்வேறு கிராம முதியோர், மாணவ மாணவிகள், தேவையுடையோர் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்ள, நிகழ்வில் கலந்து கொண்ட அக்கிராம பொதுமக்களுக்கு விசேட சைவ உணவு வழங்கப்பட்டு நினைவு கூறப்பட்டது நீங்கள் அறிந்ததே.
இதனைத் தொடர்ந்து வன்னி எல்லைக் கிராமமொன்றில் இரண்டாவது நிகழ்வாக பல்வேறு தேவையுடையோர், வாழ்வாதார கஸ்ரத்தில் உள்ளோர், இன்றைய நாட்டு நிலைமையில் பொருளாதார கஸ்ரத்தில் உள்ளோர், பெண் தலைமைத்துவக் குடும்பத்தை சேர்ந்தோர், பாடசாலைக்கு செல்வதுக்கு தேவையுடைய மாணவ மாணவிகள் என்று பல்வேறு கிராமங்களில் இருந்து கலந்து கொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு பெறுமதியான உலருணவுப் பொதிகள், மாணவ மாணவிகளுக்கான அப்பியாசக் கொப்பிகளான கற்றல் உபகரணங்கள், பயன்தரு தென்னை மரக்கன்றுகள், பெறுமதியான அரிசிப் பொதிகளென பல்வேறு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்தியகுழு உறுப்பினர் மற்றும் கிளிநொச்சி மாவட்டப் பொறுப்பாளர் மகேந்திரன் எனும் தோழர். ராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன், முன்னிலை வகிக்க “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” கிராமிய இணைப்பாளர்கள் ஆகியோரும் கலந்து கொள்ள நடைபெற்றது.
முப்பத்தியொராம் நாள் அந்தியேட்டி நிகழ்வுக்கு பல்வேறு கிராம மக்கள் கலந்து அமரர்.திருமதி.சிவநாதன் ஜீவரஞ்சினி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தீபாரதனை காட்டப்பட்டு தேவார பாராயணம் பாடப்பட்டு அந்தியேட்டிக் கிரியைகள் நிறைவு பெற்றதுடன், கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பல்வேறு விதமான வாழ்வாதார உதவிகளும் வழங்கி வழங்கப்பட்டது.
அமரத்துவமடைந்த அமரர்.திருமதி.சிவநாதன் ஜீவரஞ்சினி அவர்களுக்கு தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு அஞ்சலி செலுத்துவதோடு, அமரர்.திருமதி.சிவநாதன் ஜீவரஞ்சினி அவர்களது 31 ஆம் நாள் நினைவாக அனுஸ்டிக்கப்பட்டு, 31 ஆம் நாள் அந்தியேட்டி நிகழ்வுக்கு நிதிப் பங்களிப்பினை வழங்கிய அன்னாரது குடும்பத்தினருக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்,
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
25.05.2022
கனடா அமரர்.திருமதி.சி.ஜீவரஞ்சினி அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக வாழ்வாதார உதவிகள், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ)
கனடா அமரர்.திருமதி.சி.ஜீவரஞ்சினி அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos