அச்சுவேலி சுவிஸ் கேமேஸ்வரி அவர்களின் பிறந்த தினத்தில், சிறு கடைக்குரிய உதவி வழங்கல்.. (படங்கள், வீடியோ)
அச்சுவேலி சுவிஸ் கேமேஸ்வரி அவர்களின் பிறந்த தினத்தில், சிறு கடைக்குரிய உதவி வழங்கல்.. (படங்கள், வீடியோ)
யாழ் அச்சுவேலியில் பிறந்து சுவிஸ் நாட்டில் பேர்ண் மாநில தூண் பிரதேசத்தில் வதியும் திருமதி. கேமேஸ்வரி சுபாஸ்கரன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கற்பகபுரம் பிரதேசத்தில் வாழ்வாதாரக் கஷ்ரமான சூழ்நிலையில் வாழும் குடும்பங்கள் சிலவற்றுக்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டதுடன், அப்பிரதேசத்தில் மாலைநேர வகுப்புக்கு செல்லும் சில மாணவ மாணவிகளுக்கான கற்றல் உபகாரணமாக அப்பியாசக் கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.
யாழ் அச்சுவேலியில் பிறந்து சுவிஸ் நாட்டில் பேர்ண் மாநில தூண் பிரதேசத்தில் வதியும் திருமதி. கேமேஸ்வரி சுபாஸ்கரன் (ராஜு) அவர்கள் அவரது குடும்ப உறுப்பினர்களால் “ராசா” எனவும்; நண்பர்கள், உறவினர்களால் “கேமேஷ்” எனவும் அன்புடன் அழைக்கப்படும் இவர் சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய தீவிர தொண்டரும் ஆவார்.
இவரது நேற்றுமுன்தின பிறந்ததினத்தை முன்னிட்டு, அவரது குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில், “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக முதல் நிகழ்வாக கற்பகபுரம் கிராமத்தில் பிறந்தநாள் கேக் வெட்டி, வாழ்த்துப்பா பாடிக் கொண்டாடப்பட்டதுடன், அக்கிராமத்தில் வாழ்வாதாரக் கஷ்ரமான சூழ்நிலையில் வாழும் குடும்பங்கள் சிலவற்றுக்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டதுடன், அப்பிரதேசத்தில் மாலைநேர வகுப்புக்கு செல்லும் சில மாணவ மாணவிகளுக்கான கற்றல் உபகாரணமாக அப்பியாசக் கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டதும் நீங்கள் அறிந்ததே.
இதனைத் தொடர்ந்து அடுத்த நிகழ்வாக இன்றையதினம் ஈச்சங்குளம் பிரதேசத்தில் உள்ள தரணிக்குளம் பகுதியில் மிகவும் வறிய நிலையில் சிறுமுதலில் தரப்பாள் நிழலில், பெட்டிக்கடை மூலம் வியாபாரம் செய்யும் நான்கு பெண்கள் உட்பட ஐந்து பிள்ளைகளைக் கொண்ட கணவரை இழந்த பெண் தலைமைத்துவ பெண்மணி திருமதி.சந்திரநாகராணி மணியம் என்பவருக்கு அவரது தொழிலை மேம்படுத்தும் வகையில் கடையின் கூரைக்கான தகரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி வேண்டுகோளானது பயனாளிகள் சார்பில், “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” பிரதேச செயற்பாட்டளர்களான திரு.இராசையா ராகுலன் மற்றும் திருமதி.வில்வராசா ஜெயந்தினி ஆகியோரினால் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” முன்வைக்கப்பட்டது. இதனை பிறந்தநாளைக் கொண்டாடும் திருமதி.கேமேஸ்வரி சுபாஸ்கரன் அவர்களிடம் தெரிவித்ததும், அதுக்குரிய நிதிப் பங்களிப்பை வழங்கி, மேற்படி உதவி வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில், திருமதி.வில்வராசா ஜெயந்தினி (சமுர்த்தி வங்கிச் சங்க உபதலைவர்) தலைமை வகிக்க.. கௌரவ திரு.ஆறுமுகம் ஜெயரூபன் (மதபோதகர், புதியநகர் சமுர்த்தி பொருளாளர்), திரு.இராசையா ராகுலன் (புதியநகர் சமுர்த்தித் தலைவர், கோயில் உபதலைவர்), திரு.இராசரெத்தினம் ராஜகுமார் (ஆலய செயலாளர்), திருமதி.சிவராகினி நிர்மலச்சந்திரன் (தரணிக்குள சமுர்த்தி உபதலைவர்) திருமதி.சிந்து ஜெயகரன் (சமுர்த்தி செயலாளர்), திரு.இராஜகோபால் திலீபன், மற்றும் “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட பொறுப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன், ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் பயனாளிகளும் அப்பிரதேச பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.
தாயக சொந்தங்களின் தற்போதைய வாழ்வியல் சூழ்நிலையில், அவர்களின் வாழ்வியல் ஆதாரமாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தொடர்ந்து தனது பங்களிப்பினை செய்து வருகிறது.
அந்தவகையில் இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி கேமேஸ்வரி சுபாஸ்கரன் அவர்களை தாயக உறவுகளோடு இணைந்து, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் “தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி சந்தோஷமடைவதுடன், நிதிப்பங்களிப்பு வழங்கிய சுவிஸில் வசிக்கும் திரு.திருமதி.சுபாஸ்கரன் (ராஜு) குடும்பத்துக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்,
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
02.06.2022
அச்சுவேலி சுவிஸ் கேமேஸ்வரி அவர்களின் பிறந்த தினத்தில், சிறு கடைக்குரிய உதவி வழங்கல்.. (வீடியோ)
அச்சுவேலி சுவிஸ் கேமேஸ்வரி அவர்களின் பிறந்த தினத்தில், உலருணவுப் பொருட்கள், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ)
“நாட்டுப் பற்றாளர்” அமரர்.மாதர் செல்லத்துரை அவர்களின் நினைவாக வாழ்வாதார உதவிகள்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos