கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் செல்வி கௌசி (படங்கள் & வீடியோ)
கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் செல்வி கௌசி (படங்கள் & வீடியோ)
#################################
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் உள்ளங்கள் வரிசையில் பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்சில் வசிக்கும் செல்வி கௌசி சஸ்பாநிதி அவர்கள்.
புங்குடுதீவு வழித்தோன்றலாய் லண்டனில் வாழ்ந்து அமரத்துவமடைந்த அமரர்களான சொக்கலிங்கம் நாகேஷ் தம்பதிகளின் இரண்டாவது மகள் ஜெயா என அழைக்கப்படும் பிரான்சில் வசிக்கும் திரு திருமதி சஸ்பாநிதி ஜெயக்குமாரி தம்பதிகளின் செல்வப் புதல்வி கௌசி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வன்னிக் கிராமமொன்றில் கொண்டாடினார்.
வழமைபோலவே தனது பிறந்தநாளில் உதவி வழங்குவதோடு மற்றவர்களை மகிழ்ச்சியடைய வைத்து மகிழும் உள்ளமான செல்வி.கௌசி சஸ்பாநிதி அவர்கள், எப்போதும் போலவே கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் நல்நோக்கில் மாணவ மாணவிகளான மாலைநேர வகுப்புக்கு செல்பவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்குமாறு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் கேட்டுக் கொண்டு தனது நிதிப் பங்களிப்பை தந்துள்ளார்..
செல்வி கௌசி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கமைய செல்வி கௌசியின் பிறந்தநாளான இன்று வன்னி எல்லைக் கிராமமொன்றில் அப்பிரதேச மாணவமாணவிகள் சிலரும் அவரது பெற்றோர்களும் இணைந்து பிறந்தநாள் கேக் வெட்டி, வாழ்த்துப் பாடி சந்தோஷமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வானது, “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” முக்கியஸ்தர்களில் ஒருவரான மன்றத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களின் ஒழுங்கமைப்பில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு செல்வி கௌசி சஸ்பாநிதி அவர்களது நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது. அதேபோல் மிகவும் கஷ்ரமான சூழ்நிலையில் வாழும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்ட்து.
மிக ஏழ்மையான நிலையில் வாழும் இக்குடும்பங்களின் வாழ்விடங்களே இக்குடும்பங்களின் வாழ்வியலின் அடையாளமாக இருக்கிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களை நோக்கிய மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் தேடல்களே, புலம்பெயர் சமூகத்தின் நம்பிக்கையான நற்பணிகளின் தொடர் செய்ற்பாடாகும்.
அந்தவகையில் இன்றைய நாளில் தாயக உறவுகளான சிறுவர் சிறுமியர்களோடு பிறந்த நாள் பாட்டுப்பாடி கேக் வெட்டி மற்றவர்களை மகிழ வைத்து தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடிய செல்வி கௌசி இன்றைய நாளில் பிரான்சில் இருந்தும், வன்னிக் கிராமத்தில் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வி கௌசி சஸ்பாநிதி அவர்கள் சகல கலையும் கற்று தேக ஆரோக்கியத்துடன் நோய்நொடியின்றி எல்லா வளமும் பெற்று சந்தோசமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழகவென தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாழ்த்தும் அதேவேளை,
தனது பிறந்த நாளை முன்னிட்டு தாயக உறவுகளின் பாடசாலை மாணவச் செல்வங்களுக்கு தமது நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணங்களான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைத்தமைக்காகவும், உலருணவுப் பொதிகள் வழங்கியமைக்காகவும் மதிப்புமிகு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
24.06 2022.
கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்ஸ் கௌசி . (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos