செல்வி.கீர்த்திகாவின் ருதுஷோபன நன்னாள் விழா, தாயகத்தில் விசேட மதிய உணவு, வாழ்வாதார உதவிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)
செல்வி.கீர்த்திகாவின் ருதுஷோபன நன்னாள் விழா, தாயகத்தில் விசேட மதிய உணவு, வாழ்வாதார உதவிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)
############################
திரு.திருமதி.வாகீசன் துஜானந்தி தம்பதியினரின் செல்வப்புதல்வி திருநிறைச்செல்வி செல்வி.கீர்த்திகா “ருதுஷோபன நன்னாள் விழா”
சிப்பியைத் திறந்து வந்த முத்துக்களாய்…
சிறகுகள் முளைத்த சின்ன தேவதையாய்…
அன்றலர்ந்த ரோஜாவின் மதுக்குமிழாய்…
விண்மீன்களின் நடுவே வெண்ணிலவாய்…
புதுவாழ்வு பெற தரணிக்கு வந்த
தலைமகளே..
வாழ்க பல்லாண்டு பாரதி கண்ட
புதுமைப்பெண்ணாய்….!!!
கனடா நாட்டில் வசிக்கும் புங்குடுதீவைச் சேர்ந்த திரு.திருமதி.வாகீசன் துஜானந்தி தம்பதியினரின் செல்வப்புதல்வி திருநிறைச்செல்வி செல்வி.கீர்த்திகாவின் “மங்கல மஞ்சள் நன்னீராட்டு” (ருதுசோபன) நிகழ்வை மேலும் சிறப்பாக கொண்டாடும் முகமாக தாயகத்தில் பல்வேறு சமூகப் பணிகள் செய்துள்ளனர் செல்வி.கீர்த்திகாவின் பெற்றோர்.
திரு.திருமதி.வாகீசன் துஜானந்தி தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில் தமது செல்வியின் மங்கல மஞ்சள் நன்னீராட்டு விழாவின் சிறப்பான மகிழ்வுக்காக, முதல் நிகழ்வாக நாட்டின் இன்றைய இக்கட்டான பொருளாதார சூழ்நிலையால் அவதியுறும் மக்களுக்கு வவுனியா எல்லைக் கிராமமொன்றின் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க விசேட மதிய உணவு வழங்கப்பட்டது.
தமது பிள்ளையின் சந்தோசமான தருணத்தில் அதைக் கொண்டாடும் வகையில் வன்னி எல்லைக் கிராமத்தில் விசேட மதிய உணவு வழங்கி வைத்துள்ளனர். மேற்படி நிகழ்வானது மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் ஒழுங்கமைப்பில் சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி நிகழ்வுக்கான முழுமையான ஏற்பாடுகளை “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பாளர் உதயன் அன்றில் ராஜா எனும் கனடா திரு.குணராஜா உதயராஜா அவர்கள் மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, இன்றுமாலை வன்னி எல்லைப்புறக் கிராமமான பிறிதொரு கிராமத்தில் மாணவ மாணவிகள், கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொள்ள மாணவ மாணவிகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், அக்கிராமத்தில் வாழும் தேவையுடைய மக்களுக்கு பயன்தரு தென்னை மரக்கன்றுகளும், உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது..
மேற்படி நிகழ்வில் அக்கிராம மக்கள் கலந்து கொண்டதுடன் செல்வி.கீர்த்திகா சீரும் சிறப்புமாக பல்கலையும் கற்று பல்லாண்டு வாழ வேண்டுமென வாழ்த்தினர்.
மேற்படி உதவிகளுக்காக நிதிப் பங்களிப்பு வழங்கிய திரு.திருமதி. வாகீசன் துஜானந்தி தம்பதிகளை மனதார பாராட்டுவதுடன், மஞ்சள் நன்னீராட்டு விழாவின் நாயகி திருநிறைச்செல்வி செல்வி.கீர்த்திகா அவர்களின் எதிர்காலம் சிறப்புற அமைய “தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” இறைவனை வேண்டுகிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா.
10.07.2022
செல்வி.கீர்த்திகாவின் ருதுஷோபன நன்னாள் விழா, தாயகத்தில் விசேட மதிய உணவு, வாழ்வாதார உதவிகள் வழங்கல்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos