வீரமக்கள் தினத்தை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக, உதவிகள் வழங்கிய புலம்பெயர் புளொட் தோழர்கள்.. (படங்கள், வீடியோ)
வீரமக்கள் தினத்தை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக, உதவிகள் வழங்கிய புலம்பெயர் புளொட் தோழர்கள்.. (படங்கள், வீடியோ)
இன்றையதினம் நடைபெறும் முப்பத்திமூன்றாவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் புளொட் உறுப்பினர்கள் சிலரின் நிதிப் பங்களிப்பில் பல்வேறு வகையான உதவிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக, இன்றையதினம் நடைபெற்றது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளருமான கௌரவ திரு.தர்மலிங்கம் யோகராஜா (தோழர்.யோகன்) அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இதன் முதல்நிகழ்வாக வவுனியா தம்பனைச்சோலை பாரதி முன்பள்ளி மாணவ,மாணவிகளுக்கான கற்றல் உபகரணங்களும், அவர்களின் பெற்றோர்கள் உட்பட அக்கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் பயன்தரு தென்னைமரக் கன்றுகளும், கலந்து கொண்டோருக்கான சிற்றுண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வானது வவுனியா தம்பனைச்சோலை பாரதி முன்பள்ளி ஆசிரியை திருமதி. அன்ரன் வரதா, மற்றும் அக்கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு.ஆனந் பாலசுப்ரமணியம் ஆகியோரின் சிறப்பான ஏற்பாட்டில், மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களின் ஒழுங்கமைப்பில் சிறப்பாக நடைபெற்றது.
இதன் முதல்நிகழ்வாக “ஆகுதியாகிய அனைவருக்குமான” தீபச்சுடரேற்றல் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த அனைவரையும் நினைவு கூர்ந்து மலரஞ்சலி நிகழ்வை கலந்து கொண்டோர் நடத்தினர்.
நிகழ்வில் முதலில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளருமான கௌரவ திரு.தர்மலிங்கம் யோகராஜா (தோழர்.யோகன்) அவர்கள் நிகழ்வுக்கு தலைமை தாங்கி, வந்தவர்களை வரவேற்று உரையாற்றியதுடன், வீரமக்கள் தினம் தொடர்பாகவும், வீரமக்கள் தின நினைவாக வழங்கப்படும் பயன்தரு தென்னைமரக் கன்றுகள் தொடர்பாகவும் விரிவாக உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளருமான கௌரவ திரு.தர்மலிங்கம் யோகராஜா (தோழர்.யோகன்), தம்பனைச்சோலை பாரதி முன்பள்ளி ஆசிரியை திருமதி. அன்ரன் வரதா, அக்கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு.ஆனந்த் பாலசுப்ரமணியம் மற்றும் மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் ஆகியோரினால் முன்பள்ளி மாணவ மாணவிகளுக்கான கற்றல் உபகரணங்கள் இனிப்பு வகைகளுடன் வழங்கப்பட்ட அதேவேளை அவர்களின் பெற்றோர்கள் உட்பட அக்கிரமத்தை சேர்ந்த சிலருக்கும் பயன்தரு தென்னைமரக் கன்றுகளும், கலந்து கொண்டோருக்கான சிற்றுண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வுகளுக்கான நிதிப் பங்களிப்பை கழகத்தின் (புளொட்) புலம்பெயர் தோழர்களான தோழர். கோபு எனும் ஸ்ரீ (கனடா), சுவிஸ் தோழர்களான தோழர்.ரமணன், தோழர்.பாபு, தோழர்.அசோக், தோழர்.சித்தா, தோழர்.செல்வபாலன், தோழர்.தேவண்ணர், தோழர்.புவி உட்பட சிலர் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக வழங்கி வைத்தனர்.
மேற்படி நிகழ்வில் கௌரவ திரு.தர்மலிங்கம் யோகராஜா (தோழர்.யோகன்), மற்றும் தம்பனைச்சோலை பாரதி முன்பள்ளி ஆசிரியை திருமதி. அன்ரன் வரதா ஆகியோரினால் மேற்படி நிகழ்வுக்கு நிதிப் பங்களிப்பு வழங்கிய புளொட் புலம்பெயர் தோழர்களுக்கும், இதனை முன்னின்று நடாத்திய மாணிக்கதாசன் நற்பணி மன்றத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதேபோல் கலந்து கொண்ட மாணவமாணவிகள் பெற்றோர்கள், பொதுமக்களும் நன்றிகளை தெரிவித்து சென்றனர்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
16.07.2022
வீரமக்கள் தினத்தை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக, உதவிகள் வழங்கிய புலம்பெயர் புளொட் தோழர்கள்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos