சுவிஸில் அரசியல் தஞ்சம் கோரி, நிர்க்கதியாக வாழும் இலங்கையருக்கு ஓர் நற்செய்தி..
சுவிஸில் அரசியல் தஞ்ச்ம கோரி, நிர்க்கதியாக வாழும் இலங்கையருக்கு ஓர் நற்செய்தி..
இலங்கை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலை காரணமாக சுவிஸ் அரசானது சுவிஸில் வாழும் இலங்கை அகதிகள் சார்ந்து எடுத்துள்ள திடீர் முடிவானது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாகத் தெரிய வருகிறது.
சர்வதேச மன்னிப்பு சபை, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையம் ஆகியவற்றின் “இலங்கை அகதிகளை தற்போதைய சூழ்நிலையில் திருப்பி இலங்கைக்கு அனுப்புவது உகந்ததல்ல” எனும் மனிதாபிமான கோரிக்கைக்கு அமைய சுவிஸ் அரசு இம்முடிவை எடுத்துள்ளதாகத் தெரிய வருகிறது.
இம்முடிவின் பிரகாரம் சுவிஸில் அரசியல் தஞ்ச்ம கோரி நிராகரிக்கப்பட்ட இலங்கை விண்ணப்பதாரர்களுக்கு மீண்டும் “தர்காலிக வதிவிட உரிமை” வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கான அதிகாரிகளுடன் அன்றில் எம்மிடமோ மேலதிக விபரங்களுக்கும் சட்ட ஆலோசனைகளுக்குமாகத் தொடர்பு கொள்ளுமாறு சுவிஸ் சூரிச் “பலமேறா” சட்ட ஆலோசனை மையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்ரீர்கள்.. .
மேலதிக விபரங்களுக்கும், சட்ட ஆலோசனைகளுக்குமாக..
“பல்மேரா” 044.4516222 அன்றில் 079.6691106