“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தில், நிர்வாகசபை “அதிரடி” மாற்றம்..
“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தில், நிர்வாகசபை “அதிரடி” மாற்றம்..
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்
தலைமையகம்,
வவுனியா,
இலங்கை.
18.05.2022
மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான அமைப்பாளர் திரு.குணராஜா உதயராஜா அவர்கள் கடந்த வாரம் இங்கு (இலங்கைக்கு) விஜயம் மேற்கொண்ட போது, “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” நிர்வாக இயக்குனர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் உட்பட நிர்வாகசபையில் உள்ள திரு.கோபி (அமெரிக்கா), திரு.ரமணன் (சுவிஸ்) ஆகிய மூவரையும் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டதையும், இப்பொறுப்பில் அவர்கள் இருப்பதால், அவர்கள் இருக்கும் அரசியல் அமைப்புக்கு சங்கடங்கள் ஏற்படுவதாகவும் அவ்வமைப்பின் தலைவர் அவர்கள் சுட்டிக் காட்டியதை அறிந்து,
கடந்த 15.05.2022 கூடிய மாணிக்கதாசன் நற்பணி மன்ற நிர்வாகசபைக் கூட்டத்தில் நடைபெற்ற நீண்ட உரையாடலுக்கு மத்தியில் அதனை ஏற்றுக் கொண்டு அவர்கள் மூவரையும் மாணிக்கதாசன் நற்பணி மன்ற நிர்வாக சபையின் சகல பொறுப்புகளில் இருந்து விடுவிப்பதுடன், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாக இயக்குனராக திரு.கி.வேலுப்பிள்ளை (சுவிஸ்) அவர்களை நியமிப்பதெனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
மேற்படி முடிவு குறித்து, மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏனைய நிர்வாகசபை உறுப்பினர்களுக்கு மாற்றுக் கருத்து இருப்பின், அவர்கள் ஒருவாரத்துக்குள் நிர்வாகசபைக்கு என்னூடாகவோ, பொருளாளர் செல்வி.ரம்மியா செல்வராஜா அவர்கள் ஊடாகவோ அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.இல்லாவிடில் இம்முடிவு 25.05.2022 முதல் அமுலுக்கு வரும்.
நிர்வாகசபை உறுப்பினர்களுக்கு இதனை இன்றே தெரியப்படுத்துவதுடன், அதிரடி இணையத்திலும் பிரசுரிக்குமாறு மாணிக்கதாசன் நற்பணி மன்ற பொருளாளரும், “அதிரடி” இணைய முகாமையாளருமான செல்வி.ரம்மியா செல்வராஜா அவர்களிடம் வேண்டிக் கொள்கிறோம்.
நிர்வாகசபை சார்பாக,
திரு.பெருமாள் சஞ்சீவன்,
வவுனியா மாவட்ட இணைப்பாளர்,
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
(செய்தித் திருத்தம்)
கடந்த 18.05.2022 அன்று பிரசுரிக்கப்பட்ட மேற்படி செய்தியில் மேலதிக தகவல் இன்று இணைக்கப்படுகிறது..
“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” நிர்வாகக்குழுவில் திரு.தர்மலிங்கம் சுபாஸ்கரன் (சுவிஸ்) இன்றுமுதல் (25.08.2022) மேலதிகமாக இணைக்கப்பட்டு உள்ளார் என்பதை அனைவருக்கும் அறியத் தருகிறோம்.
நிர்வாகசபை சார்பாக,
திரு.பெருமாள் சஞ்சீவன்,
வவுனியா மாவட்ட இணைப்பாளர்,
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
25.08.2022