சரவணை சுவிஸ் சிவாவின் “பொன்விழா” பிறந்தநாளை முன்னிட்டு, தாயகத்தில் பல்வேறு உதவிகள்.. (வீடியோ, படங்கள்)
சரவணை சுவிஸ் சிவாவின் “பொன்விழா” பிறந்தநாளை முன்னிட்டு, தாயகத்தில் பல்வேறு உதவிகள்.. (வீடியோ, படங்கள்)
திரு. ‘அம்பிகாபதி கலைச்செல்வம்’
அகவை ஐம்பது கண்டுவிட்டீர்..
மனதில் இன்னும் குழந்தை தான்
இன்னும் ஐம்பது ஆனாலும்
சிரிப்பில் நீங்கள் மழலை தான்
பச்சைப்பிள்ளை பாசம் உண்டு
உதவி செய்யும் நேசம் உண்டு
முதல் பாதியைப் போலவே
உங்கள் வாழ்க்கையின்
அடுத்த அரை நூற்றாண்டும்
அற்புதமாக இருக்கட்டும்..
இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்.
யாழ்.சரவணையைச் சேர்ந்தவரும், சுவிஸ் பேர்னில் வசிப்பவருமான சிவா என அன்புடன் அழைக்கப்படும் திரு.அம்பிகாபதி கலைச்செல்வம் அவர்களின் ஐம்பதாவது “பொன்விழா” பிறந்த தினம் தாயகத்தில் இன்று பிறந்தநாள் வாழ்த்துப் பாடி, கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.
யாழ்.சரவணையைச் சேர்ந்த “டெக்ரார்காரர் சின்னத்தம்பி” என அன்புடன் அழைக்கப்படும் அமரர்.திரு.கார்த்திகேசு அம்பிகாபதி திருமதி.அம்பிகாபதி தயாநிதி தம்பதிகளின் மூத்த புதல்வரும், சுவிஸில் வசிக்கும் “சிவா” என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும், திரு.அம்பிகாபதி கலைச்செல்வம் அவர்களின் ஐம்பதாவது “பொன்விழா” பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது மனைவி தர்ஜினி அவரது மகன் சரண், அவரது மகள் யஷ்ணவி ஆகியோரினால் வழங்கப்பட்ட நிதியில் தாயக உறவுகளுக்கான உதவி வழங்களுடன் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் சிறப்பான ஒழுங்கமைப்பில் கொண்டாடப்பட்டது.
முதலில் திரு.சிவாவின் பொன்விழா பிறந்தநாள் கொண்டாட்டம் சிறுவர்களால் கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப் பாடி விமர்சையாக கொண்டாடப்பட்டது. பல சிறுவர் சிறுமியர்கள், அவர்களின் பெற்றோர், அக்கிராமத்தவர்களென பலரும் கலந்து கொண்டு திரு.சிவாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார்கள்.
நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்களுக்கு உட்பட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. அத்துடன் கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகளும் பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இன்றையதினம் மாணவ மாணவிகள், கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொள்ள மாணவ மாணவிகளுக்கான மாலைநேர வகுப்புக்கு செல்வோருக்கான கற்றல் உபகரணங்களாக அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டதுடன், அக்கிராமத்தில் வாழும் தேவையுடைய மக்களுக்கு பயன்தரு தென்னை மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வானது மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களின் தலைமையில், மாணிக்கதாசன் நற்பணி மன்ற கிராமிய இணைப்பாளர்களின் ஒழுங்கமைப்பில் சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் வவுனியா சமலங்குளம் ஆனந்தபுரம் “அபூர்வ ஆஞ்சநேயர்” ஆலயத் தலைவர் திரு. சங்கையா நமசிவாயம், எல்லப்பர் மருதங்குளம் விவசாய கிராம சிவில் அமைப்பின் உறுப்பினர் திருமதி.முருகராஜ் செல்வராணி, எல்லப்பர் மருதங்குளம் மகளிர் கமநல அமைப்பின் தலைவி திருமதி.லோகேஸ்வரன் சசிகலா ஆகியோர் விருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் இன்றையதினம் பிறந்தநாளைக் கொண்டாடும் திரு.சிவா “கல்விக்கு முன்னுரிமை” கொடுத்து வாழ்பவர் என்பதினால் அவரது விருப்பத்துக்கு இணங்க, மட்டக்களப்பு மாவட்ட செங்கலடியைச் சேர்ந்த வெள்ளை எனும் திரு.கிருஷ்ணபிள்ளை வியஜேந்திரன் அவர்களின் மூத்த புதல்வியின் தொழில் முறைக் கல்விக்கான செலவுக்கென ஒருதொகை நிதியும் வழங்கப்பட உள்ளது. (அதுகுறித்த செய்திகள் தொடரும்)
இன்றைய நாளில் சுவிஸில் தனது ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடும் “சிவா” என அன்புடன் அழைக்கப்படும் திரு.அம்பிகாபதி கலைச்செல்வம் அவர்கள் தேக ஆரோக்கியத்துடன் நோய்நொடியின்றி சந்தோசமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழகவென தாயக உறவுகளோடு இணைந்து, மாணிக்கதாசன் நற்பணி மன்றம் வாழ்த்தும் அதேவேளை,
அவரது பிறந்த நாளை முன்னிட்டு தாயக உறவுகளின் பாடசாலை மாணவச் செல்வங்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தமைக்காகவும், பயன்தரு தென்னைமரக் கன்றுகள் வழங்கி வைத்தமைக்காகவும், நிதிப் பங்களிப்பை வழங்கிய அவரது பிள்ளைகள், மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கும் மதிப்புமிகு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
02.09 2022.
சரவணை சுவிஸ் சிவாவின் “பொன்விழா” பிறந்தநாளை முன்னிட்டு, தாயகத்தில் பல்வேறு உதவிகள்.. (வீடியோ)
சுவிஸ் “செல்வன்.சரணின்” பிறந்தநாள் நிகழ்வில் வாழ்வாதார உதவிகள் வழங்கிய தங்கை யஷ்ணவி.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos