தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 23வது நினைவு நாளில், அவரது உறவுகளால் பல்வேறு நிகழ்வுகள்.. (வீடியோ படங்கள்)
தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 23வது நினைவு நாளில், அவரது உறவுகளால் பல்வேறு நிகழ்வுகள்.. (வீடியோ படங்கள்)
################################
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உப தலைவருமான “கண்ணாடி அன்றில் தாஸ்அண்ணா” என அன்புடன் அழைக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் மகத்தான தளபதி தோழர் மாணிக்கதாசன் மற்றும் அவரோடு மரணித்த தோழர் இளங்கோ, தோழர் வினோ ஆகியோரின் இருபத்திமூன்றாவது நினைவாண்டு தாயகத்திலே உணர்ச்சிபூர்வமாக நினைவு கூறப்பட்டது.
“வீரமக்களாகிய” இவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, “தண்ணீர்ப் பந்தல், சிறுவர் இல்லமொன்றுக்கு உணவு வழங்குதல்” போன்ற பல சமூக நடவடிக்கைகளுக்கான முழுமையான நிதி உதவியை தோழர் மாணிக்கதாசன் அவர்களின் உறவுகள், நண்பர்கள் வழங்கி வைக்க, வவுனியா மாவட்ட புளொட் முக்கியஸ்தர்களில் ஒருவரான தோழர்.சிவாவின் ஒழுங்கமைப்பிலும், தலைமையிலும் நடைபெற்றது.
மேற்படி “தண்ணீர்ப் பந்தல்” நிகழ்வில் புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்களான தோழர்.கேசவன் (உபதலைவர்), தோழர்.பீற்றர் (தேசிய அமைப்பாளர்) தோழர்.மோகன், தோழர்.சிவம், தோழர்.விசு, தோழர்.கொன்ஸால்ட், தோழர்.மூர்த்தி, உட்பட கழகத் தோழர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதேவேளை புளொட் உபதலைவர் தோழர் மாணிக்கதாசன் மற்றும் அவரோடு மரணித்த தோழர் இளங்கோ, தோழர் வினோ ஆகியோரின் இருபத்திமூன்றாவது நினைவாண்டு அஞ்சலி சுவரொட்டிகள் வவுனியா நகரெங்கும் பரவலாக ஒட்டப்பட்டு காணப்பட்டு உள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக.. புங்கையூரான்.