;
Athirady Tamil News

தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 23வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்.. (வீடியோ படங்கள்)

0

தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 23வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்.. (வீடியோ படங்கள்)
################################

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உப தலைவருமான “கண்ணாடி அன்றில் தாசன் அண்ணா” என அன்புடன் அழைக்கப்பட்ட “மக்கள் போராட்டத்தின் மகத்தான தளபதி” தோழர் மாணிக்கதாசன் மற்றும் அவரோடு மரணித்த தோழர் இளங்கோ, தோழர் வினோ ஆகியோரின் இருபத்திமூன்றாவது  நினைவாண்டு தாயகத்திலே உணர்ச்சிபூர்வமாக நினைவு கூறப்பட்டது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் புலம்பெயர்ந்து வாழும் தோழர்கள் சிலரின் கூட்டுநிதிப் பங்களிப்பில் தாயக உறவுகளுக்கு அமரர் தோழர் மாணிக்கதாசன் நினைவாக உலருணவுப் பொதிகளும், பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் இன்றைய நாளில் பல்வேறு கிராமங்களில் வாழும் குடும்பங்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வின் ஆரம்பத்தில், சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட புளொட் முக்கியஸ்தர்களில் ஒருவரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளருமான தோழர் யோகன் எனும் கௌரவ திரு.தர்மலிங்கம் யோகராஜா, புளொட் முக்கியஸ்தர்களில் ஒருவரான தோழர்.கிளிநொச்சி ராஜா எனும் திரு.மகேந்திரம் ஆகியோர் மண்ணுக்காக மரணித்த தோழர் மாணிக்கதாசனின் சிறப்புகளை எடுத்துரைத்தனர்.

ஈழமண் விடுதலைக்காக ஈழ வரலாற்றில் தொடக்ககால போராளியாக போராட்ட தலைமைகளின் நம்பிக்கைக்குரிய போராளியாக, பயமே தெரியாத தளபதியாக, இளைஞர்கள் பலர் இவரின் மந்திரப் புன்னகைக்கு கட்டுப்பட்டு அணிஅணியாக தாயக மண்மீட்பு போராட்டத்தில் இணைந்து மாபெரும் இயக்கத்தின் படையினை வழிப்படுத்தும் தளபதியாக மண் விடுதலைக்காக வாழ்ந்த வேளையில்,

இந்திய இலங்கை உடன்படிக்கை ஒப்பந்தத்தை ஏற்று ஆயுத ஒப்படைப்பு செய்து யாருக்காக போராட புறப்பட்டோமோ அந்த மக்களின் நல்வாழ்வுக்காக அரசியல் களப்மணியில் காத்திரமான பங்குபணிகளை மேற்கொண்டிருந்த போது நயவஞ்சகமாக உயிர் பறிக்கப்பட்டதின் இருபத்திமூன்றாம் ஆண்டினை அவரோடு வாழ்ந்த தோழர்கள் இன்று இடம்பெயர்ந்து புலம்பெயர் நாடுகளில் வசித்தாலும் தளபதி மாணிக்கதாசன் அவர்களின் நினைவு நாளில் அவரையும் அவருடன் மரணித்த தோழர் இளங்கோ, தோழர் வினோ ஆகியோரின் நினைவுதினத்தை தமது பங்களிப்புடன் தாயக மக்களின் துயர்துடைக்கும் நல்ல பணியினை ஆண்டுதோறும் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் இன்றைய நாளில் வவுனியா சிதம்பரபுரநகர் கிராமத்தில் வசதியற்ற நிலையில் வாழும் குடும்பங்களை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் கிராமிய இணைப்பாளர்கள் தெரிவு செய்து அவர்களுக்கு “தளபதி மாணிக்கதாசன், தோழர்.இளங்கோ, தோழர்.வினோ ஆகியோரின் நினைவாக” உலருணவுப் பொதிகளும், பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

வாழ்வாதார நிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையோர், வயோதிபர்கள், நாளாந்த வருமானத்தை இழந்து தனித்து வாழ்வோர் என பலதரப்பட்ட சூழ்நிலையில் வாழ்வோருக்கு உலருணவுப் பொதிகளும், பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் இந்நிகழ்வில் கலந்து கொண்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த கிராமமக்கள் அனைவருக்கும் தோழர் மாணிக்கதாசன் மற்றும் அவரோடு மரணித்த தோழர் இளங்கோ, தோழர் வினோ ஆகியோரின் இருபத்திமூன்றாவது  நினைவாண்டை முன்னிட்டு “நினைவுக் கஞ்சியும்” விசேடமாக வழங்கப்பட்டது.

இதைவிட வாழ்வாதார நிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையோர், வயோதிபர்கள், நாளாந்த வருமானத்தை இழந்து தனித்து வாழ்வோர் என பலதரப்பட்ட சூழ்நிலையில் வாழ்வோர் சிலருக்கு அவர்களின் வாசல் தேடிச் சென்று உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், புளொட் முக்கியஸ்தர்களில் ஒருவரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளருமான தோழர் யோகன் எனும் கௌரவ திரு.தர்மலிங்கம் யோகராஜா, புளொட் முக்கியஸ்தர்களில் ஒருவரான தோழர்.கிளிநொச்சி ராஜா எனும் திரு.மகேந்திரம் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள சிறப்பாக நடைபெற்றது.

நாட்டில் காணப்படும் பொருளாதார, அரசியல் நெருக்கடியான சூழ்நிலை காரணமாகவும் நாளாந்த சாதாரண வாழ்வுநிலை மாற்றமடைந்து அடுத்தவேளை உணவுக்கு அங்கலாய்க்கும் நிலமை விரைவில் உருவாகும் சாத்தியக்கூறு காணப்படும் நிலையில் அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களது நினைவு நாளினை முன்னிட்டு வழங்கப்பட்ட உலருணவுப் பொதி மிகவும் முன்னேற்றகரமான செயல்வடிவமாகும். இதேவேளை மேற்படித் தோழர்களின் நினைவாக மேலும் சில செயற்பாடுகளும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

“வீரமக்களாகிய” இவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, “வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்விக்கான உதவிகள்” போன்ற பல சமூக நடவடிக்கைகளுக்கான முழுமையான நிதி உதவியை புளொட் சுவிஸ் தோழர்களான செல்வபாலன் (சொலத்தூண்), பாபு (சூரிச்), புவி (சூரிச்), குணசீலன் எனும் குணா (சூரிச்), பிரபா (சூரிச்), குழந்தை (பேர்ண்), சிவா (பேர்ண்), தயா (பேர்ண்), தேவண்ணர் (கிளாரூஷ்), அசோக் (செங்காளன்), சித்தா (செங்காளன்), ரமணன் (ரப்பேர்ஸ்வில்) சுவிஸ் சூரிச் சபையில் மூப்பராக இறைபணி செய்பவருமான திருலோகன் (தோழர்.அன்ரன்), தோழர். சுவிஸ்ரஞ்சன் ஆகியோருடன், தோழர்.ஸ்ரீ எனும் கோபு (கனடா), தோழர்.கோபி (அமெரிக்கா), தோழர்.நிரோஷன் (லண்டன்), தோழர்.ஸ்கந்தா (லண்டன்), ஆகியோர் பங்களித்து இருந்தனர்.

இதற்கு நிதிப்பங்களிப்பு செய்த புலம்பெயர்ந்து வாழும் புளொட் தோழர்களுக்கு தாயக உறவுகளோடு இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றம் மதிப்புமிகு நன்றியினையும் வாழ்த்தினையும் பெருமதிப்புடன் தெரிவித்துக் கொள்கிறது.

அதேவேளை அமரத்துவமடைந்த தளபதி தோழர் மாணிக்கதாசன்.. மற்றும் தோழர் இளங்கோ தோழர் வினோஆகிய கழக கண்மணிகளுக்கு வீரவணக்க அஞ்சலிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

02.09.2022

தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 23வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்.. (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.