;
Athirady Tamil News

புங்குடுதீவு “அமரர் சி.சரவணபவன்“ அவர்களின் முதலாமாண்டு திதிநாள் நினைவாக “வாழ்வாதார உதவிகள்” வழங்கல்.. -படங்கள், வீடியோ-

0

புங்குடுதீவு “அமரர் சி.சரவணபவன்“ அவர்களின் முதலாமாண்டு திதிநாள் நினைவாக “வாழ்வாதார உதவிகள்” வழங்கல்.. -படங்கள், வீடியோ-

அமரர். சிவராஜா சரவணபவன்

அனைவரையும் வசீகரிக்கும் அன்புமுகம்
எல்லோர்க்கும் ஏற்புடைய இனியகுணம்..

பாரிலுள்ளோர் போற்றவரும் பண்புடமை
பகையாக வருவோரும் உன்புன்சிரிப்பை
பார்த்தாலே பாகாகி உன்வசமாவார்..

நேற்றுவரை எம்மோடு நீங்கள் இருந்தீர்கள்,
இன்று நீங்கள் இல்லையென எண்ணும் போது
எம்மிதயம் பதைபதைத்து நிற்குதையா
எங்குற்றீர் ஐயா, நீங்கள் எங்குற்றீர்?

மண்ணுலகில் பிறந்தோர் மாய்வது
இயற்கையே என்றாலும்
உங்கள் உறவு என்பது
தனித்துவமான ஒன்றுதானே!..

ஏழுலகம் ஓடியும் எங்களால்
உம்மைப் போல் ஓர் உறவை
தேடிப்பெறுவது இயலுமான காரியமோ?

ஓராண்டு அல்ல, எத்தனை ஆண்டுகள்
ஆனாலும், உலகுள்ளவரை
எம்மிதயத்தில் வாழ்வீர்கள்..

என்ன செய்வோம் நாங்கள்
கனத்த உள்ளத்தோடு
உங்களை வழி அனுப்பி
தூய்மையான உங்கள்
ஆன்மா சாந்திபெற
கரம் கூப்பி இறைவனை
கண்ணீர்மல்க
பிரார்த்திக்கின்றோம்.

புங்குடுதீவைச் சேர்ந்தவரும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான அமரர். சரவணபவன் சின்னத்துரை அவர்களின் முதலாமாண்டு திதி நாள் நினைவாக; அவரது மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவுகள் சார்பாக அன்னாரின் அன்புத்தம்பி குடும்பமான திரு.திருமதி. சி. இலக்ஸ்மணன் லலிதா மற்றும் பெறாமக்கள் லாவண்யா, லக்சனா, லவன் ஆகியோர் வழங்கிய நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக இன்றையதினம் முதல் நிகழ்வாக வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொதிகளும், பயன்தரு தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

அமரர். சரவணபவன் சின்னத்துரை அவர்கள் வீட்டின் தலைமகனாக பிறப்பால் மட்டுமல்ல கடமையாலும், தந்தையின் மறைவுக்கு பின்னர் தந்தையாகக் குடும்பத்தை வழிநடத்தியவர், பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றி குடும்ப பொறுப்புகளை சிரமேற் கொண்டவர், குடும்ப தலைவனாக குடும்பத்தில் எல்லோரையும் வழிநடத்தியவர், ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளதினால் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை, திடகாத்திரமான தன்னம்பிக்கையுள்ள பெரியண்ணன்.ஆக எப்போதும் புன்முறுவலுடன் அன்பாக அனைவருக்கும் உதவி செய்யும் மனதோடு வாழ்ந்து அனைவரின் மனங்களிலும் இடம் பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமரர். சரவணபவன் சின்னத்துரை அவர்களின் முதலாமாண்டு திதிநாள் நினைவாக; வவுனியா சமலங்குல பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட அயல்கிராமத்தைச் சேந்தவர்களுக்கான உதவியாக மேற்படி நிகழ்வு நடத்தப்பட்டது.

அமரத்துவமடைந்த அமரர். சரவணபவன் சின்னத்துரை அவர்களின் நினைவாகவும், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் முதலில் அன்னாரின் திருவுருவப் படத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு, தேவாரபாராயணம் பாடப்பட்டு பொதுமக்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்றைய அமரர் சரவணபவனின் முதலாமாண்டு திதிநாள் அந்தியேட்டி நிகழ்வில் அக்கிராம அறநெறிப பாடசாலை மாணவ,மாணவிகள் ஆகியோருடன் சிறுவர், சிறுமியர் அவர்களின் பெற்றோர்கள், அக்கிராமப் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இருந்தனர். இன்றைய மேற்படி நிகழ்வில் பெருமளவான கிராம மக்கள் கலந்து கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நாட்டின் இன்றைய இக்கட்டான பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உடனடி அத்தியாவசியத் தேவையான பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் அமரத்துவமடைந்த அமரர். சரவணபவன் சின்னத்துரை அவர்களின் நினைவாக பயன்தரு தென்னைமரக் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதும் சிறப்பம்சமாகும்.

இதனைத் தொடர்ந்து அமரர். சரவணபவன் சின்னத்துரை அவர்களின் நினைவாக, இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் “நினைவுக் கஞ்சியும்” வழங்கி வைக்கப்பட்டதுடன், அவர்களின் குடும்பத்தினர், உறவுகளுக்கென வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது..

நாளாந்த வருமானத்தை இழந்து அடுத்தவேளை உணவுக்காக அந்தரப்படும் உறவுகளுக்கு குறிப்பாக பல்வேறு நிலைகளில் நலிவுற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கும், வறுமைக் கோட்டில் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை சேர்ந்த சிலருக்கும் வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொதிகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக வழங்கி வைத்தனர்.

அமரர். சரவணபவன் சின்னத்துரை அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு மேற்படி நிகழ்வானது “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களின் ஒழுங்கமைப்பில், சமலன்குளம் அறநெறிப் பாடசாலை ஆசிரியை திருமதி.க.வசந்தமலர், சமலன்குளம் கிராம சமூக ஆர்வலர் திரு.செல்லக்குமார், முன்பள்ளி ஆசிரியை திருமதி.வி.பேபி சர்மிளா, ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத் தலைவர் திரு.தி.தியாகராசா, எல்லப்பர் மருதங்குளம் விவசாய கிராம ஆர்வலர் திருமதி.செல்வராணி ஆகியோர் விருந்தினராகக் கலந்து சிறப்பிக்க நடைபெற்றது.

இதேவேளை இன்றுகாலை அமரர்.திரு.சரவணபவன் சின்னத்துரை அவர்களின் சகோதரரான அமரர் திரு.சிவராஜா சின்னத்துரை அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவுதின நிகழ்வும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அமரர்.திரு.சிவராஜா சின்னத்துரை அவர்களின் முப்பத்தியொராம் நாள் ஆகிய இன்றே அமரர் திரு.சரவணபவன் சின்னத்துரை அவர்களின் முதலாமாண்டு திதி நாளும் இன்றையதினம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமரத்துவமடைந்த அமரர்.திரு.அமரர். சரவணபவன் சின்னத்துரை அவர்களுக்கு தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு “அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி” அஞ்சலி செலுத்துவதோடு

அமரர் திரு. சரவணபவன் சின்னத்துரை அவர்களது முதலாமாண்டு திதிநாள் நினைவாக அனுஸ்டிக்கப்பட்டு, முதலாமாண்டு அந்தியேட்டி நிகழ்வுக்கு நிதிப்பங்களிப்பினை வழங்கிய அன்னாரின் அன்புத்தம்பி குடும்பமான திரு.திருமதி. சி. இலக்ஸ்மணன் லலிதா மற்றும் பெறாமக்கள் லாவண்யா, லக்சனா, லவன் ஆகியோருக்கு பயனாளிகள் மற்றும் தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

21.09 2022.

புங்குடுதீவு “அமரர் சி.சரவணபவன்“ அவர்களின் முதலாமாண்டு திதிநாள் நினைவாக “வாழ்வாதார உதவிகள்” வழங்கல்.. -வீடியோ-

புங்குடுதீவு “அமரர் சி.சிவராஜா“ அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவாக “வாழ்வாதார உதவிகள்” வழங்கல்.. -வீடியோ-

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.