ஐம்பதாவது அகவை நாளில், வாழ்வாதார உதவிகளை அள்ளிக் கொடுத்தார் கனடா திருமதி.சந்திரா அவர்கள்.. (படங்கள், வீடியோ)
ஐம்பதாவது அகவை நாளில், வாழ்வாதார உதவிகளை அள்ளிக் கொடுத்தார் கனடா திருமதி.சந்திரா அவர்கள்.. (படங்கள், வீடியோ)
##############################
திருமதி. சந்திரா அன்பழகன்
சிரிப்புடன் நீர் சிரமத்தை கடக்கணும்..
சிறப்புடன் நீர் நூறு வருஷம் வாழனும்..
குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீர் வாழ்ந்திட வேண்டும்..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின்றோம்..
இன்றைய நாளில் புங்குடுதீவில் பிறந்து, கனடா நாட்டில் ஐம்பதாவது பிறந்தநாள் பொன்விழா காணும் சந்திரா என அன்பாக எல்லோராலும் அழைக்கப்படும் திருமதி. சந்திரா அன்பழகன் அவர்கள், தனது குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” வவுனியா தரணிக்குளம் பிரதேசக் கிராமங்களில் வாழும் தேவையுடைய கிராம மக்களுக்கு வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொதிகளும், பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைத்தனர்.
தான் பிறந்து வளர்ந்த ஊரான புங்குடுதீவின் மண் மீதும், புங்குடுதீவு மக்கள் மீதும் தீராத அன்பு கொண்டவரான இவர் கனடா நாட்டில் ஊர் சங்கத்தில் தன்னை இணைத்து பல தொண்டுகளை செய்து வருபவர் என்பதுடன், பல சமூக,சமய அமைப்புக்களில் பங்கெடுத்து சமுதாயப் பணிகளை தொடர்ந்து ஆர்வத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் திரு.திருமதி சந்திரா அன்பழகன் குடும்பத்தினர் திருமதி சந்திரா அவர்களின் பொன்விழா பிறந்தநாளை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஊடாக கேட்டுக் கொண்டதுக்கு இணங்க, இன்றையதினம் வன்னி கிராமமொன்றில் வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தனர்.
திருமதி சந்திரா அவர்களின் பொன்விழா பிறந்தநாளை முன்னிட்டு அவரது கணவர் அன்பழகன், மகன் அஜந்தன், மகள் மதுஷா ஆகியோர் வழங்கிய நிதிப் பங்களிப்பில் மேற்படி நிகழ்வு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக நடைபெற்றது.
மேற்படி நிகழ்வுக்கான ஏற்பாட்டை மாணிக்கதாசன் நற்பணி மன்ற சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளரான கனடாவில் வதியும் திரு.குணராஜா உதயராஜா ஏற்பாடு செய்திருந்தார். அதேவேளை இந்நிகழ்வை மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் ஆகியோருடன், விருந்தினரின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.
திருமதி சந்திரா அன்பழகன் தனது ஐம்பதாவது பொன்விழா பிறந்தநாளினை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒழுங்கமைப்பில் வவுனியா கிராமத்தில் வாழ் சிறுவர், சிறுமிகளோடு கேக் வெட்டி “பெறுமதியான உலருணவுப் பொதிகள், பயன்தரு தென்னைமரக் கன்றுகள்” எனப் பல்வேறு உதவிகள் வழங்கி மகிழ்ச்சியோடு கொண்டாடினார்.
திருமதி சந்திரா அன்பழகன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வினை அவரது குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் தாயக உறவுகளுக்கான வாழ்வாதார உதவி வழங்களுடன் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் சிறப்பான ஒழுங்கமைப்பில் கொண்டாடப்பட்டது. திருமதி சந்திரா அன்பழகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் சிறுவர்களால் கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப் பாடி விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பல சிறுவர் சிறுமியர்கள், அவர்களின் பெற்றோர், அக் கிராமத்தவர்களென பலரும் கலந்து கொண்டு திருமதி.சந்திராவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார்கள். நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்களுக்கு உட்பட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. அத்துடன் பெறுமதியான உலருணவுப் பொதிகளும், பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வானது மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் தலைமையில், திருமதி. வி.ஜெயந்தினி (வவுனியா தரணிக்குளம் பிரதேச சமூர்த்தி வங்கித் தலைவி) திரு.ஆறுமுகம் ஜெயரூபன் (வவுனியா தரணிக்குளம் பிரதேச சமூர்த்தி பொருளாளர்) திரு. இராசையா பாக்கியராசா (வவுனியா தரணிக்குளம் பிரதேச சமூர்த்தி தலைவர்) திரு. நா.தில்லைநாதன் (வவுனியா தரணிக்குளம் பிரதேச சமூர்த்தி தலைவர்) ஆகியோர் விருந்தினராகக் கலந்து கொள்ள கிராம மக்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.
அந்தவகையில் இன்றைய நாளில் திருமதி சந்திரா அன்பழகன் அவர்களது பிறந்தநாள் ஆகிய இன்றையதினம் பிறந்த நாள் கொண்டாட்டத்தோடு பிறந்தநாளை நிறைவு செய்யாமல் வாழ்வாதார நிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையோர், வயோதிபர்கள், நாளாந்த வருமானத்தை இழந்து தனித்து வாழ்வோர் என பலதரப்பட்ட சூழ்நிலையில் வாழ்வோருக்கு திருமதி சந்திராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கணவர் அன்பழகன், மகன் அஜந்தன், மகள் மதுஷா ஆகியோர் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு” வழங்கிய நிதிப்பங்களிப்பில் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது..
இதேவேளை இன்றுமதியம் திருமதி.சந்திரா அவர்களுடைய பொன்விழா பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது நிகழ்வாக கூமாங்குளம் “முதியோர் சங்கத் கட்டிடத்தில்” விசேட விருந்துபசாரம் வழங்கி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான பல்வேறுபட்ட சமூகப்பங்களிப்புடன் திருமதி.சந்திரா அவர்களுடைய பொன்விழா பிறந்தநாளை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயகத்து உறவுகளோடு அர்த்தமுள்ள அறப்பணிகளோடு கொண்டாட ஏற்பாடுகளை முன்னெடுத்து செய்துள்ளது.
இன்றைய நாளில் இனிய பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி.சந்திரா அவர்களை “சமூக சேவையில் சிறந்து விளங்கி, மற்றவர்களின் நலனை தன்னலமாக கொண்டு, பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென” மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயகத்து உறவுகளோடு இணைந்து வாழ்த்துகிறது.
அத்தோடு மேற்படி வாழ்வாதார உதவிகளுக்கு நிதிப் பங்களிப்பு வழங்கிய திருமதி சந்திராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கணவர் அன்பழகன், மகன் அஜந்தன், மகள் மதுஷா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளையும் பயனாளர்களுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
23.09 2022.
ஐம்பதாவது அகவை நாளில், வாழ்வாதார உதவிகளை அள்ளிக் கொடுத்தார் கனடா திருமதி.சந்திரா அவர்கள்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos