புங்குடுதீவு அமரர்.சொக்கர் அவர்களின் பிறந்த தினத்தில், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ, படங்கள்)
புங்குடுதீவு அமரர்.சொக்கர் அவர்களின் பிறந்த தினத்தில், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ, படங்கள்)
புங்குடுதீவு மண்ணை பூர்வீகமாகக் கொண்டவரும், கொழும்பு மருதானை “ஆனந்தா புத்தகசாலை, ஆனந்தா அச்சகம்” உரிமையாளரான பிரபல வர்த்தகரும், லண்டனில் அமரத்துவமடைந்தவருமான சொக்கர் என அன்புடன் அழைக்கப்படும் அமரர் முருகேசு சொக்கலிங்கம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாலைநேர வகுப்புக்கு செல்லும் மாணவமாணவிகளுக்கு கற்றல் உபகரணங்களாக அப்பியாசக் கொப்பிகள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது.
அந்தவகையில் இன்றைய நாளில் பிறந்த அமரர் சொக்கலிங்கம் அவர்களது பிறந்தநாள் நினைவையொட்டி வவுனியா எல்லைக் கிராமத்தில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” வழங்கி வைக்கப்பட்டது.
அமரர் சொக்கலிங்கம் அவர்களின் பிறந்தநாள் வவுனியாவில் உள்ள கிராமம் ஒன்றில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு. பெருமாள் சஞ்சீவன் அவர்களின் சிறப்பான ஒழுங்கமைப்பில் கோலாகலாமாக கொண்டாடப்பட்டது..
நிகழ்வில் மாணவ,மாணவிகளுடன் அவர்களது பெற்றோர்கள் எனப் பலரும் ஒன்றுகூடி இவரது பிறந்தநாளை உணர்வுடன் பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக்வெட்டி கொண்டாடினார்கள். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. அத்துடன் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு கற்றல் அப்பியாசக் கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து தங்கள் நிதி பங்களிப்பின் மூலம் சமூகப் பங்காற்றி வரும் அமரர் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை (நாகேஷ்) குடும்பத்தினருக்கு உதவி பெற்றவர்களது சார்பாகவும், தாயக உறவுகள் சார்பாகவும், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சார்பாகவும் மனமார்ந்த நான்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு அமரர் சொக்கலிங்கம் (சொக்கர்) அவர்களின் ஆத்மசாந்திக்காக இறைவனை வேண்டுகிறோம்.
இதேவேளை தனது தந்தையாரின் பிறந்ததினமான இன்று சனிக்கிழமை 15.10.2022 அன்று மாலை ஐந்து மணிக்கு தனது மணிவிழா பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு சுவிஸ் நாட்டில் பற்றர்கிண்டன் எனும் பிரதேசத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெறும் அவரது மணிவிழா பிறந்தநாள் நிகழ்வும், திருமணநாள் நிகழ்வும் சிறப்புற எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
15.10 2022.
புங்குடுதீவு அமரர்.சொக்கர் அவர்களின் பிறந்த தினத்தில், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos