புங்குடுதீவு அமரர்.செல்லமுத்து அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக விசேட உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ)
புங்குடுதீவு அமரர்.செல்லமுத்து அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக விசேட உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ)
அழியா நினைவுடன் எட்டாவது ஆண்டு விழிநீர் அஞ்சலி..
அமரர்.திருமதி கந்தையா செல்லமுத்து
புங்குடுதீவில் பிறந்து, புங்குடுதீவு, யாழ்ப்பாணம், லண்டன், கனடா ஆகிய இடங்களில் வாழ்ந்து கனடாவில் அமரத்துவடைந்த அமரர். கந்தையா செல்லமுத்து அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக இன்று மதியம் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை “சக்தி இல்ல மாணவிகள்” அனைவருக்கும் விசேட சைவ மதிய உணவு வழங்கி நினைவு கூறப்பட்டது.
புங்குடுதீவில் பிறந்து புங்குடுதீவு கிழக்கூர் பகுதியில் சமூக, சமய பற்றுடன் வாழ்ந்த திரு.திருமதி. கந்தையா செல்லமுத்து தம்பதிகளின் பிள்ளைகள் அனைவருமே கொழும்பு மருதானையில் மிகவும் பிரபல்யமான வர்த்தகர்களாக வாழ்ந்தவர்கள் என்பதுடன், இன்றும் அனைவரையும் அன்புடன் நேசித்து வாழ்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமரத்துவமடைந்த அமரர். கந்தையா செல்லமுத்து அவர்களின் நினைவாகவும், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் முதலில் அன்னாரின் திருவுருவப் படத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு, தேவாரபாராயணம் பாடப்பட்டு கொக்கட்டிச்சோலை “சக்தி இல்ல மாணவிகளினால்” அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமரர். கந்தையா செல்லமுத்து அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக, இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் “விசேட சைவ மதிய உணவும்” வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது..
மேற்படி நிகழ்வானது மேற்படி “சக்தி மகளிர்” இல்ல தலைமைப் பொறுப்பாளரும், மண்முனை தென்மேற்கு பிரதேசசபை (கொக்கட்டிச்சோலை) தவிசாளருமான திரு.புஷ்பலிங்கம் அவர்களின் தலைமையில், மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச தவிசாளர் திரு.சண்முகராஜா விருந்தினராகக் கலந்து சிறப்பிக்க நடைபெற்றது.
இவர்களுடன் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சார்பில், மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச உபதவிசாளரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும், உபதலைவர்களில் ஒருவருமான தோழர்.கேசவன் எனும் திரு.பொன் செல்லத்துரை அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
இதேவேளை நாளையதினம் அமரர். கந்தையா செல்லமுத்து அவர்களின் நினைவாகவும், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் இரண்டாவது நிகழ்வாக மிகவும் கஷ்ரமான சூழ்நிலையில் மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் குடும்பஸ்தரான ரமேஷ் எனும் திரு.இராஜசிங்கம் என்பவருக்கு “மீன்பிடிக்கான வலைகள்” வழங்கி வைக்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற மதிய விசேட உணவு வழங்கும் நிகழ்வும் நாளை வாழ்வாதார உதவியாக “மீன்பிடிக்கான வலைகள்” வழங்கி வைக்கப்பட உள்ளதும், அன்னாரின் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவுகள் சார்பாக அன்னாரின் மகனான சுவிஸில் வதியும் திரு.பேரின்பம் அமரத்துவமடைந்த திருமதி.சாரதா பேரின்பம் ஆகியோரின் குடும்பத்தின் சார்பில் வழங்கப்பட்ட நிதிப் பங்களிப்பில் நடைபெற்றது.
அமரத்துவமடைந்த அமரர். கந்தையா செல்லமுத்து அவர்களுக்கு தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு “அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி” அஞ்சலி செலுத்துவதோடு
அமரர் அமரர். கந்தையா செல்லமுத்து அவர்களது எட்டாமாண்டு திதிநாள் நினைவாக அனுஸ்டிக்கப்பட்டு, எட்டாமாண்டு அந்தியேட்டி நிகழ்வுக்கு நிதிப்பங்களிப்பினை வழங்கிய அன்னாரின் அன்புமகன் குடும்பமான திரு.திருமதி. பேரின்பம் சாரதா குடும்பத்துக்கு பயனாளிகள் மற்றும் தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
13.11 2022.
புங்குடுதீவு அமரர்.செல்லமுத்து அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக விசேட உணவு வழங்கல்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos