முன்னாள் போராளியின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த கனடா வாழ் புங்குடுதீவு அமரர்.குணராஜா குடும்பம். (படங்கள் வீடியோ)
முன்னாள் போராளியின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த கனடா வாழ் புங்குடுதீவு அமரர்.குணராஜா குடும்பம். (படங்கள் வீடியோ)
புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குணராஜா சற்குணராஜாவின் அகவை தினத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு – இந்துபுரம் பகுதியில் வசிக்கும் முன்னாள் போராளி திரு.திருநாவுக்கரசு மணிசேகரன் வாழ்வாதார மேம்பாட்டிற்காக நன்னீர் மீன் குஞ்சுகள் உற்பத்தி கேணி அமைக்கப்பட்டு இன்று பயனாளியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு இந்துபுரம் 154 ஆம் கட்டை பகுதியில் அமைக்கப்பட்ட, இந்த நன்னீர் மீன் குஞ்சுகள் உற்பத்தி கேணி அமைப்பு திட்டமானது, கனடாவாழ் திரு.குணராசா சற்குணராசாவின் அகவை தினத்தை முன்னிட்டு அவரது முதற்கட்ட நிதிப்பங்களிப்பில், அமரர் குணராஜாவின் குடும்பத்தின் சார்பில், நம் தாயகம் நிறுவன உரிமையாளர்களில் ஒருவரும், மாணிக்கதாசன் நற்பணி மன்ற சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான திரு.குணராசா உதயராஜாவின் நெறிப்படுத்தலில், விழுப்புண் அடைந்த முன்னாள் போராளியும் அவரது பாடசாலை நண்பனுமான திரு.திருநாவுக்கரசு மணிசேகரன் அவர்களுக்கு சுமார் 4 மில்லியன் நிதி உதவியில் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டது.
முன்னாள் போராளி திரு.திருநாவுக்கரசு மணிசேகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த திறப்பு விழா நிகழ்வில் மாணிக்கதாசன் நற்பணி மன்ற தலைவரும், நயினாதீவு புங்குடுதீவு பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவரும், சமாதான நீதவானும், புங்குடுதீவு மண்ணின் மைந்தருமான திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திரு.சிவமோகன், முன்னாள் கிராம சேவகரும், புங்குடுதீவு மண்ணின் மைந்தருமான திரு.சந்திரன் விதானை, மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் பொருளாளர் செல்வி.ரம்மியா செல்வராஜா, மன்ற வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன், மன்ற முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி.பவளராணி நவரெட்ணம், கட்டிடக் கலைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குறித்த திறப்பு விழா நிகழ்வில் சிறப்புரையாற்றிய மாணிக்கதாசன் நற்பணி மன்ற தலைவரும், நயினாதீவு புங்குடுதீவு பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவரும், சமாதான நீதவானும், புங்குடுதீவு மண்ணின் மைந்தருமான திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் அவர்கள், பயனாளி குறித்தும் இதுக்காக முழுமையாக செயல்பட்ட புங்குடுதீவு அமரர்.குணராஜா குடும்பத்தின் பெருமைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை நிகழ்த்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கருத்து தெரிவிக்கையில்,
இங்கு, மணிசேகரன் அவர்களின் அழைப்பை ஏற்று வருகை தந்திருந்தேன், ஆனால் இங்கு வருகை தந்ததன் பின்பு, தெரிந்து கொண்ட விடயம் என்னவென்றால், உதயராசா என்னும் உண்மையான, நாட்டை நேசிக்கும் விசுவாசி ஒருவர் கனடாவில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கின்றார் என்பதை முதல் முதல் அறிந்து கொண்டுள்ளேன்,
அவருக்கு வாழ்த்துக்கள், அவரது சேவைகள் தொடர வேண்டும். இது வெறுமனே ஒரு விடயம் அல்ல. இங்கே மீன்களை வளர்த்து பெருமளவான வருமானத்தை ஈட்டும் ஒரு தொழில் ஆகும். இதை எப்படி தொடர்சியாக கொண்டு செல்வது என்பது தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு பயனாளிகள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றார்.
இதனைத்தொடர்ந்து, நன்னீர் மீன் குஞ்சுகள் உற்பத்தி கேணிக்குள் விருந்தினராகக் கலந்து கொண்ட அனைவராலும் நன்னீர் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு நடைபெற்றது.
இறுதியாக குறித்த திட்டத்தை பெற்றுக்கொண்ட பயனாளி திரு.திருநாவுக்கரசு மணிசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர், இந்த உதவியை செய்த கொடையாளருக்கு பெரும் நன்றியை தெரிவித்ததுடன், இத்திட்டத்தை மென்மேலும் அபிவிருத்தி செய்வதாகவும் தெரிவித்தனர்.
முன்னாள் போராளியின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த கனடா வாழ் புங்குடுதீவு அமரர்.குணராஜா குடும்பம். (வீடியோ)