;
Athirady Tamil News

சுவிஸ் சாரோனின் இருபத்தைந்தாவது பிறந்தநாள் பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்..(படங்கள், வீடியோ)

0

சுவிஸ் சாரோனின் இருபத்தைந்தாவது பிறந்தநாள் பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்..(படங்கள், வீடியோ)
#############################

சுவிஸ் சூறிச்சில் வசிக்கும் திரு.சாரோன் லோகராஜா அவர்களின் இருபத்தைந்தாவது பிறந்தநாள் கொண்டாட்டம் தாயகத்தில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒழுங்கமைப்பில் பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க, வவுனியா மகாறம்பைக்குளம், ஆலடி ஸ்ரீ சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலை அதிபரும், பொறுப்பாசிரியையுமான திருமதி. ஜெயகலாதேவி நாகராஜா, அவர்களின் சிறப்பான ஏற்பாட்டில் பெருமளவான தாயக உறவுகள் கலந்து கொண்டு மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

யாழ் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர்களும் சுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிப்பவர்களும், சூரிச் சபையின் மூப்பராக இறைபணி செய்பவருமான திரு.திருமதி லோகராஜா ஸ்ரீரஞ்சினி தம்பதிகளின் இளையமகனான செல்வப் புதல்வன் சாரோன் லோகராஜா தனது இருபத்தைந்தாவது பிறந்த நாளினை, மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில், வவுனியா மகாறம்பைக்குளம், ஆலடி ஸ்ரீ சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள், அக்கிராமத்து மக்களோடு பிறந்தநாள் கேக் வெட்டி, அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கி மகிழ்ச்சியோடு கொண்டாடினார்.

அத்துடன் கலந்து கொண்டவர்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் சிலவற்றுக்கு பெறுமதியான உலருணவுப் பொதிகளும், பயன்தரு நல்லினத் தென்னை மரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்ட்து.

இன்றைய நாட்டின் பொருளாதார இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இன்று பிறந்தநாள் காணும் செல்வன் சாரோனின் பெற்றோரின் விருப்பத்துக்கு இணங்க, வவுனியா மகாறம்பைக்குளம், ஆலடி ஸ்ரீ சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலை சமூகத்தில் இருந்து கலந்து கொண்டவர்களில், வயோதிபர்கள், நோய்வாய்க்கு உள்பட்டோர், வறுமைக் கோட்டில் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என தெரிவு செய்யப்பட்டோருக்கு வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் இன்று பிறந்தநாள் காணும் செல்வன் சாரோனின் பெற்றோரின் விருப்பத்துக்கு இணங்க கலந்து கொண்டவர்களில், சிலருக்கு பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது வவுனியா மகாறம்பைக்குளம், ஆலடி ஸ்ரீ சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலை அதிபரும், பொறுப்பாசிரியையுமான திருமதி. ஜெயகலாதேவி நாகராஜா, அவர்களின் தலைமையில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் மகாறம்பைக்குளம் பிரதேச பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி.ஷர்மிளா சாந்தகுமார், மகாறம்பைக்குளம் பிரதேச குடும்பநல உத்தியோகஸ்தர் திருமதி.நிஷாந்தினி விஜயதாஸ், ஆலடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய செயலாளர் திரு.பெரியசாமி பத்மநாதன், நிர்வாகசபை உறுப்பினர் திரு.நடராஜா உதயகுமார், மகாறம்பைக்குளம் பிரதேச முதியோர் சங்கத் தலைவர் திரு.குப்பு நாராயணன் ஆகியோரும் விருந்தினராகக் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

இதேவேளை இருவாரத்துக்கு முன்னர் இவரது பிறந்தநாள் கண்ட போதும், புதுவருட தினத்தன்று கொண்டாட வேண்டுமெனும் நோக்கில் தனது பெற்றோர், மற்றும் அண்ணன் திரு.ஆரோன், அண்ணி திருமதி.கோபினா ஆரோன், ஒரே தங்கையான செல்வி.ஒமேகா அவர்களின் வாழ்த்துக்களுடன் பிறந்ததினத்தை கொண்டாடி பெறுமதியான உலருணவுப் பொதிகளும், பயன்தரு நல்லினத் தென்னை மரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இன்றைய நாளில் திரு.திருமதி லோகராஜா ஸ்ரீரஞ்சினி மண இணையரின் செல்வப் புதல்வனான சாரோன் அவர்களது பிறந்தநாள் இன்று தாயகத்தில் பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகளுடன், தாயக உறவுகளின் குழந்தைகளின் பங்குபற்றலோடு இனிதாக நிறைவடைந்தது.

செல்வன்.சாரோன் அவர்களது பிறந்த நாளில் கலந்து சிறப்பித்த சிறார்கள் தங்களின் வாழ்த்துக்களை செல்வன்.சாரோன் அவர்களுக்கு தெரிவித்ததுடன் “நாட்டின் பொருளாதார இடர்மிகு காலத்தில் இவ்வாறான நிகழ்வுகளாலும், அவர்களின் உதவிகளாலும் மகிழ்ச்சியாக உள்ளதாக” தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.

இவ்வாறான பல்வேறுபட்ட சமூகப்பங்களிப்புடன் செல்வன்.சாரோன் அவர்களுடைய பிறந்த நாளை “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தாயகத்து உறவுகளோடு அர்த்தமுள்ள அறப்பணிகளோடு கொண்டாடும் வகையில் ஏற்பாடுகளை முன்னெடுத்து செய்துள்ளது.

இதேவேளை மேற்படி நற்காரியங்களுக்கு நிதி உதவி வழங்கிய செல்வன்.சாரோனின் பெற்றோருக்கு தாயக உறவுகள், பயனாளிகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” மனதார நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

அத்துடன் இன்றைய நாளில் இனிய பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வன்.சாரோன் அவர்களை “பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் சீறும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென” மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தாயகத்து உறவுகளோடு இணைந்து வாழ்த்துகிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
01.01.2023

சுவிஸ் சாரோனின் இருபத்தைந்தாவது பிறந்தநாள் பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்..(வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.