“புளொட்” அமரர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்தநாளில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)
“புளொட்” அமரர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்தநாளில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)
######################################
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான தாஸ் அண்ணர் அன்றில் கண்ணாடி என அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்தநாள் நிகழ்வினை முன்னிட்டு, புளொட் அமைப்பின் புலம்பெயர் தோழர்களின் நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தாயக கிராமத்தில் பலவேறு சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
அதன் முதல் நிகழ்வாக இன்றையதினம் வவுனியா செட்டிக்குளம் நித்தியநகர் கிராமத்தில் இன்றைய நாட்டின் பொருளாதார இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, விசேட தேவைக்கு உட்பட்ட, மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும், மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் ஒரு தொகையினருக்கு என அனைவருக்குமான, பெறுமதியான உலருணவுகள் அடங்கிய பொதி வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் அந்நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு தொகையினருக்கு பயன்தரு நல்லின தென்னை மரக்கன்றுகளும் அதனுடன் அரிசிப் பொதிகளும், உலருணவுப் பொருட்களும் வழங்கி வழங்கப்பட்டது.
இன்றையதினம் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வவுனியா மாவடட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் முன்னிலையில், வவுனியா மகாறம்பைக்குளம், ஆலடி ஸ்ரீ சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலை அதிபரும், பொறுப்பாசிரியையுமான திருமதி. ஜெயகலாதேவி நாகராஜா, அவர்களின் தலைமையில் நிகழ்வு நடக்க, நித்தியநகர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.சண்முகம் பரமசிவம், நித்தியநகர் மகளிர் அமைப்புத் தலைவி திருமதி.ரணேஷ் கலைமதி, நித்தியநகர் மகளிர் அமைப்பு உறுப்பினர் திருமதி.சுதாகர் விஜிகலா, நித்தியநகர் கோயில் நிர்வாகத் தலைவர் திரு.பழனியாண்டி மனோகரன் ஆகியோரும் விருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர்.
தாயக மக்களின் சுதந்திர வாழ்வுக்காக தமது இளமைக் காலத்தை சுதந்திர போராட்டத்தில் இணைந்து தம்முயிரை இந்த மண்ணுக்கும் மக்கள் சுக வாழ்வுக்கும் அர்ப்பணித்த வீரபுருசர்களை நாம் வணங்குவோம் தாம் உயிரோடு வாழ்ந்த காலத்தில் எதற்காக போராடினார்களோ, அதை தாம் இறந்த பின்னும் தாம் உயிருக்குயிராக நேசித்த இந்த மக்கள் பெற வேண்டும் என்பதற்காக “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” வாழ்வாதார மற்றும் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற நிகழ்ச்சித் திட்டங்கள் வழியாக தம் எண்ணத்தை புலம்பெயர்ந்து வாழும் மக்கள் நிறைவேற்றி வருகின்றனர்.
அந்தவகையில் தான் இன்றைய நிகழ்வும் இன்றைய பொருளாதாரத் தடைகளை உடைத்து மக்களின் வாழ்வாதாரத்தை தலை நிமிரச் செய்யும் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”. இன்றைய செட்டிக்குளம் நித்தியநகர் நிகழ்வில் கலந்து கொண்ட திருமதி. ஜெயகலாதேவி நாகராஜா, அவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையான மகாறம்பைக்குளத்தில் மரமேறும் போது தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவரின் குடும்பத்துக்கு உடனடித் தேவையான உலருணவுப் பொதியும் வழங்கி வைக்கப்பட்டது.
இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் அமரர் மாணிக்கதாசனின் பெருமைகளை நினைவு கூறியதுடன், அவரின் தலைமையில் உருவாக்கப்பட்ட மேற்படிக் கிராம மக்களை தேடிவந்து உதவியதுக்கும் நன்றி தெரிவித்தனர்.
புலம்பெயர்ந்து வாழும் புளொட் இயக்கத்தின் தோழர்களின் நிதிப் பங்களிப்பில் மேற்படி முதல் நிகழ்வானது சிறப்பாக நடைபெற்றது. மேற்படி நிகழ்வுக்கு லண்டன் தோழர்களான மணிவண்ணன், ஸ்கந்தா, லிவர்பூல் ரஞ்சன், நகுலன், நிரோஷன், மற்றும் கனடா தோழர்களான நிரஞ்சன், ஸ்ரீ எனும் கோபு, மற்றும் பிரான்ஸ் தோழர்களான மட்டக்களப்பு தயா, குறிஞ்சிக்குமரன், சார்லிரவி, தயாளன், ஆகியோருடன் சுவிஸ் தோழர்களான சித்தா, அசோக், பாபு, புவி, தேவண்ணர், ராசன், பிரபா, பேர்ண் சிவா, பேர்ண் தயா, குழந்தை, குமார், குணா, அன்ரன் எனும் லோகன், செல்வபாலன், சார்கன்ஸ் மோகன், மனோ, ரமணன், ரஞ்சன் ஆகியோருடன் பெயர் குறிப்பிட விரும்பாத சில தோழர்களும் நிதிப் பங்களிப்பு வழங்கி இருந்தனர்.
எமது “கல்விக்கு கரம் கொடுப்போம், மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல்” திட்டமானது, புளொட் உபதலைவர் அமரர் மாணிக்கதாசனின் ஜனனதினமான ஜனவரி 14 முதல், புளொட் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் ஜனனதினம் (பிப்ரவரி 18) வரை தொடர்ச்சியாக நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக காலத்தின் தேவை கருதி உடனடியாக இந்த உதவியினை செய்ய முன் வந்த புலம்பெயர் புளொட் தோழர்களுக்கு தாயகத்தின் உறவுகளுடன் இணைந்து, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் நன்றி கூறுவதோடு,
இன்றைய நாளில் ஜனன தினத்தை காணும் அமரர்.மாணிக்கதாசன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என தாயக உறவுகளோடு, இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாயார வேண்டி பெருமை கொள்கிறது..
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்,
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
14.01.2023
“புளொட்” அமரர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்தநாளில் வாழ்வாதார உதவிகள்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos