கனடாவில் வசிக்கும் புங்குடுதீவு “ராஜா ரதீஷ்” திருமண நாளில் வழங்கப்பட்ட “கற்றல் உபகரணங்கள், தென்னைமரக் கன்றுகள்” வழங்கல்.. (படங்கள், வீடியோ)
கனடாவில் வசிக்கும் புங்குடுதீவு “ராஜா ரதீஷ்” திருமண நாளில் வழங்கப்பட்ட “கற்றல், தென்னைமரக் கன்றுகள்” வழங்கல்.. (படங்கள், வீடியோ)
##########################
புங்குடுதீவு, அனலைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட, கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவுகளான திரு.திருமதி உதயராஜா ரதீஷ்வரி தம்பதிகளின் இருபத்திநான்காவது திருமண நாளை முன்னிட்டு, தமிழர் தாயக பிரதேசத்தில் பல்வேறு உதவிநலத் திட்டங்களை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஊடாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வறிய குடும்பங்களில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் மாலைநேர வகுப்புக்குச் செல்லும் மாணவர்களுக்கான கற்றல் வசதியினை மேம்படுத்தும் வகையில், கற்றலுக்கு தேவையான அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டது.
கனடா வாழ் வர்த்தகர்களில் ஒருவரும், மாணிக்கதாசன் நற்பணி மன்ற சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான “உதயராஜா ரதீஷ்வரி தம்பதிகளின் திருமண நாளை” சிறப்பிக்கும் முகமாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களும் கலந்து கொண்டு “தம்பதிகளான” திரு.திருமதி. உதயராஜா ரதீஷ்வரி அவர்களது திருமண நாளை கொண்டாடும் வகையில் அவர்களால் வழங்கப்பட்ட நிதிப்பங்களிப்பில் கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகளையும், பயன்தரு நல்லிண தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைத்தனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில், திரு.திருமதி.உதயராஜா ரதீஸ்வரி தம்பதிகளின் இன்றைய திருமணநாள் முன்னிட்டு அவர்களின் நிதிப் பங்களிப்பில் கிராமமொன்றில் சிறுவர் சிறுமியர்கள் ஒன்றுகூடி நிகழ்வை ஒழுங்குபடுத்தி கொண்டாடினார்கள்.
இன்றைய இத்திருமணநாள் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கும், பாலர் பாடசாலை குழந்தைகளுக்கும் கற்றல் உபகரணங்களாக அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது..
இன்று வன்னி எல்லைக் கிராமமொன்றில் அப்பிரதேச மாணவமாணவிகள் சிலரும் அவரது பெற்றோர்களும் இணைந்து திருமணநாள் கேக் வெட்டி, வாழ்த்துப் பாடி சந்தோஷமாகக் கொண்டாடப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் “தம்பதிகளான” திரு.திருமதி. உதயராஜா ரதீஷ்வரி அவர்களது திருமண நாளை கொண்டாடும் வகையில் அவர்களால் வழங்கப்பட்ட நிதிப்பங்களிப்பில் கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகளையும், பயன்தரு நல்லிண தென்னைமரக் கன்றுகளும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால் வழங்கி வைத்தனர்.
நிகழ்வில் வாழ்த்துத் தெரிவித்த பயனாளர்களை ஒருவர் “இவ்வாறான புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பானது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் போற்றத்தக்கது, வரவேற்கத்தக்கதாகும். இதனை ஒழுங்குபடுத்துவதென்பது மிகவும் சிரமமான விடயமாகும்” என வாழ்த்துரைத்தார்.
முடிவாக உதவி பெற்றுக் கொண்ட மாணவர்களும், தாய்மார்களும் விருந்தினர்களுக்கும், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கும்” நன்றி கூறி விடை பெற்றனர்.
மேற்படி “திரு.திருமதி உதயராஜா ரதீஷ்வரி தம்பதிகளின் திருமணநாளை” முன்னிட்டு, வாழ்வாதார உதவிகள் வழங்கி வைத்தமைக்காக அவர்களுக்கு நன்றிகளை பயனாளர்களுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தெரிவித்துக் கொள்வதுடன்,
திருமண நாளைக் கொண்டாடும் மேற்படி கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவுகளான புங்குடுதீவைச் சேர்ந்த உதயராஜா ரதீஸ்வரி தம்பதிகள் செரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவென தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கத்துடன் நற்பணி மன்றமும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொளகிறது.
“நலிவுற்றவர்களுக்கே நற்பணி மன்றம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
31.01.2023
கனடாவில் வசிக்கும் புங்குடுதீவு “ராஜா ரதீஷ்” திருமண நாளில் வழங்கப்பட்ட “கற்றல், தென்னைமரக் கன்றுகள்” வழங்கல்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos