;
Athirady Tamil News

அகவை நாளில் வவு.சைவப்பிரகாச கல்லூரிக்கு உதவி வழங்கிய, சுவிஸ் திருமதி.செல்வி சுதாகரன்.. (வீடியோ, படங்கள்)

0

அகவை நாளில் வவு.சைவப்பிரகாச கல்லூரிக்கு உதவி வழங்கிய, சுவிஸ் திருமதி.செல்வி சுதாகரன்.. (வீடியோ, படங்கள்)
######################

புங்கையூர் செல்வியே,
புன்சிரிப்பு நாயகியே
ஊர் ஒன்றியத்தின் செயல்வீரராய்
ஒளி வீசும் அற்புதமே..

மேல்மருவட்டத்தூர் அம்மன் மீது,
பேரன்பு கொண்டு வாழும்
சுதாகரன் செலவியரே..

இன்றைய பிறந்தநாளில்
இங்கிதமான நல் வாழ்த்துக்கள்..

இன்றைய நாளில் சுவிஸ் நாட்டில் பிறந்தநாள் காணும் செல்வி என அன்பாக எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி. சுதாகரன் கிருபாதேவி அவர்கள் தனது நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு “பாடசாலை உபயோகத்துக்கென, பெறுமதியான அலுமாரி” வழங்கி வைத்தார்.

“பாடசாலை உபயோகத்துக்கென அலுமாரிக்கான” கோரிக்கையை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் திருமதி.P.கமலேஸ்வரி அவர்கள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழக மத்தியகுழு உறுப்பினரும் வவுனியா மாநகர சபை உறுப்பினருமான திரு.காண்டீபன் ஊடாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” முன்வைத்த கோரிக்கையை இன்றைய பிறந்தநாள் காணும் செல்வி என அன்புடன் அழைக்கப்படும் திருமதி.கிருபாதேவி சுதாகரன் அவர்களிடம் தெரிவித்த போது, அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டு இவ்வுதவியை வழங்கி வைத்தார்.

திரு.திருமதி சுதாகரண் செல்வி தம்பதிகள் தங்களின் குடும்பத்தின் எந்தவொரு நிகழ்வுகளையும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக தாயக உறவுகளுக்கு உதவிகள் வழங்கி தொடர்ச்சியாக சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தாங்கள் வாழும் சுவிஸ் தேசத்திலே பல்வேறு சமய, சமூகநல அமைப்புக்களின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து தன்னார்வத் தொண்டுகளையும், சமயத் தொண்டுகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இன்றைய பிறந்தநாள் காணும் செல்வி என அன்புடன் அழைக்கப்படும் திருமதி.கிருபாதேவி சுதாகரன் பிறந்தநாள் நிகழ்வானது முதலில் பூந்தோட்டம் பகுதியில் மாலைநேர வகுப்புக்கு செல்லும் மாணவர்களினால் அவரது பிறந்தநாளை கொண்டாடும்முகமாக கேக் வெட்டி பிறந்தநாள் பாட்டுப்பாடி தமது பிறந்த நாள் வாழ்த்தினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இன்றையதினம் மதியம் “பாடசாலை உபயோகத்துக்கென அலுமாரிக்கான” கோரிக்கையை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் திருமதி.P.கமலேஸ்வரி அவர்கள், முன்வைத்ததை ஏற்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழக மத்தியகுழு உறுப்பினரும் வவுனியா மாநகர சபை உறுப்பினருமான திரு.காண்டீபன் அவர்களினால் கையளிக்கப்பட்டது.

மேற்படிக் கோரிக்கையை பாடசாலை சமூகம் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” முன்வைத்ததை ஏற்று, இன்றைய பிறந்தநாள் காணும் செல்வி என அன்புடன் அழைக்கப்படும் திருமதி.கிருபாதேவி சுதாகரன் அவர்களின் நிதிப் பங்களிப்பில் இவ்வுதவியை வழங்கி வைத்தார்.

இறுதியாக இவ்வுதவியை பெற்றுக் கொண்ட மாணவர்கள் சார்பாகவும், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வேண்டுகோளை ஏற்று நிகழ்வில் கலந்து சிறப்பித்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழக மூத்த உறுப்பினரான திருமதி.ஜாஸ்மின் ஹென்றிபெரேராவும் பிறந்தநாளைக் காணும் திருமதி.செல்வி சுதாகரன் குடும்பத்தினருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதுடன், திருமதி.செல்வி சுதாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டனர்.

திருமதி சுதாகரன் செல்வி அவர்களுக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ச்சியாக தாயக உறவுகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக நிதிப்பங்களிப்பினை வழங்கி வருவதற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி மன்றம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

01.04 2023.

அகவை நாளில் வவு.சைவப்பிரகாச கல்லூரிக்கு உதவி வழங்கிய, சுவிஸ் திருமதி.செல்வி சுதாகரன்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.