சுவிஸில் இடதுசாரிகள், முற்போக்கு முன்னணிகளுடன் இணைந்து “புளொட்” சுவிஸ் கிளையின் மேதின ஊர்வலம்.. (படங்கள், வீடியோ)
சுவிஸில் இடதுசாரிகள், முற்போக்கு முன்னணிகளுடன் இணைந்து “புளொட்” சுவிஸ் கிளையின் மேதின ஊர்வலம்.. (படங்கள், வீடியோ)
சுவிஸ் சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் இன்றையதினம் பலத்த மழைக்கு மத்தியில் நிகழ்த்தப்பட்ட மே தின ஊர்வலம் சுவிஸ் இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகளுடன் சமூக அமைப்புகளுடனும், சுவிஸில் வாழும் பல நாட்டு மக்களின் விடுதலை அமைப்புகளும், சமூக மேம்பாட்டு அமைப்புகளும் இணைந்து நிகழ்த்தப்பட்டது.
புளொட் சுவிஸ் கிளையின் மேதின ஊர்வலம் ஆரம்பிப்பதுக்கு முன்பாக புளொட் எனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும், யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் “ஊர்வல ஏற்பாடுகள் குறித்துக் கேட்டறிந்ததுடன், ஊர்வலத்தில் கலந்து கொண்ட புளொட் தோழர்களுடன் உரையாடி அவர்களுக்கு நன்றியினையும், மேதின வாழ்த்துக்களையும்” தெரிவித்துக் கொண்டார்.
இவ்வூர்வலத்தில் “புளொட்” சுவிஸ் கிளை தோழர்கள் இணைந்து “இலங்கைத் தமிழ் மக்களின் விடிவுக்கும், அனைத்து இன மக்கள் மீதான அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்தெறிய அணிதிரளவும், அனைத்துலக ஆதரவு கோரியும் அறைகூவல் விடுக்கப்பட்டது.
இவ் ஊர்வலம் சுவிஸ் சூரிச் ஹெல்வெட்டியா பிளஸ் இல் தொடங்கி பெல்வி பிளாட்ஸ் வரை சூறிச் நகர மத்தியினூடாக நகர்ந்து சென்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து உணர்வுபூர்வ ஆதங்கத்தை தெரிவித்திருந்தனர்.
இதேவேளை வழமை போல் சுவிஸ் மேதின ஊர்வலத்தின் போது, அதிதீவிர இடதுசாரி கொள்கையுடைய சுவிஸ் நாட்டு இளையோர், யுவதிகளினால் சுவிஸ் வங்கிகள், சுவிஸில் உள்ள அந்நிய நாட்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவதினால், இம்முறையும் சுவிஸ் பொலிஸாரினால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலைமையிலும் சுவிஸ் வங்கிகள் மீது இவ்வூர்வலகத்தின் போது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஊர்வலத்தில் கலந்து கொண்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளைத் தோழர்கள் “அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்த்தெறிவோம்” உழைக்கும் மக்களின் உரிமைக்காக போராடுவோம்” போன்ற பல கோஷங்களுடன், உழைக்கும் வர்க்கத்தின் கொள்கை மீதான பற்றுதலுக்கு ஆதரவளித்து சென்றதைக் காணக் கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்.. – “புளொட்” சுவிஸ் கிளை.
சுவிஸில் இடதுசாரிகள், முற்போக்கு முன்னணிகளுடன் இணைந்து “புளொட்” சுவிஸ் கிளையின் மேதின ஊர்வலம்.. (வீடியோ)