;
Athirady Tamil News

புளொட் முள்ளிக்குள மோதலில் பலியானவர்கள் நினைவாக, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.. (படங்கள், வீடியோ)

0

புளொட் முள்ளிக்குள மோதலில் பலியானவர்கள் நினைவாக, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.. (படங்கள், வீடியோ)

புளொட் அமைப்பின் வீரமிகு தளபதிகளில் ஒருவரும், புளொட் செயலதிபர் தோழர் உமா மகேஸ்வரனின் மிகவும் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராகத் திகழ்ந்து புளொட் அமைப்பின் சார்பில் பல களமுனைகளை சந்தித்து சாதித்தவரும், சகோதர படுகொலையால் பலியெடுக்கப்பட்டவருமான “சங்கிலியன்” என புளொட் தோழர்களால் அன்புடன் அழைக்கப்படும் தோழர் கந்தசாமி கதிர்காமராஜா உட்பட முப்பத்திநான்கு தோழர்களின் 34 வது வருட நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் வன்னியின் பல இடங்களில் நடத்தப்பட்டது.

28.05.1989 இல் முள்ளிக்குளத்தில் மரணித்த கழகத்தின் தென்னிலங்கைப் பொறுப்பாளர் சங்கிலி எனும் கந்தசாமி கதிர்காமராஜன் (சுழிபுரம்), வரதப்பா (முல்லைத்தீவு), வசந்த் (யாழ்ப்பாணம்), மாதவன் (“ரெலா” TELA அமைப்பின் தலைவர்), சேவற்கொடி (க.ரூபகாந்தன் – தள இராணுவப் பொறுப்பாளர்), சாமி எனும் தம்பியப்பா பாஸ்கரன் (யாழ்ப்பாணம்), சைமன் (யாழ்ப்பாணம்), பிரபு (முல்லைத்தீவு), மரியான் (மன்னார்), பாபு (ஜெஸ்மின்- திருமலை), ரவீந்திரன் (மன்னார்), நந்தீஸ் (மன்னார்), சிறி (முசுறி -மன்னார்), சுதன் (வவுனியா), சுகுணன் (வவுனியா), யூலி (மன்னார்), பி.எல்.ஓ (வவுனியா), பேணாட் (வவுனியா), சீலன் (மன்னார்), சசி (வவுனியா), அத்தான் (யாழ்ப்பாணம்), தேவன் (கிளிநொச்சி), கமலன் (மன்னார்), மார்க்ஸ் (யாழ்ப்பாணம்), லிங்கம் (வவுனியா), வே.சுரேஸ் (யாழ்ப்பாணம்),

குகன் (கிளிநொச்சி), சாந்தன் (மன்னார்), ரகு (மட்டக்களப்பு), கோம்ஸ் (அம்பாறை), செல்லக்கிளி (மதன் -யாழ்ப்பாணம்), ஐயர் (சித்திரா -யாழ்ப்பாணம்), விக்கிரம் (யாழ்ப்பாணம்), ஜம்புலிங்கம் (ரமேஷ்) ஆகிய 34 தோழர்களின் 34ஆம் ஆண்டு நினைவுநாள் அன்று புளொட் தோழர்கள், ஆதரவாளர்கள் சார்பில் புளொட் மூத்த தோழர் ஜாஸ்மின் அக்கா எனும் திருமதி.ஜெயபாலினி ஹென்றிபெரேரா அவர்களின் நிதிப் பங்களிப்பில், மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டது.

இன்றையதினம் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி பவளராணி நவரெட்ணம் மற்றும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் கிராமிய ஒருங்கிணைப்பாளர்கள் ஒழுங்கமைப்பில் வன்னி மாவட்ட சில எல்லைக் கிராமங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டது. இதில் புளொட் அமைப்பின் மூத்த தோழர் ஜாஸ்மின் அக்கா என்பவரும் சிறப்பு விருந்தினராகக் கலந்து இருந்தார்.

மேற்படி நிகழ்வுகளில் மறைந்த புளொட் தோழர்களின் நினைவாக நினைவுக் கஞ்சி, நினைவுக்கூழ் போன்றவை வழங்கப்பட்டதுடன், மாலைநேர வகுப்புக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கான கற்றல் உபகாரணமான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்ட்து.

மேற்படி பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களினால் முள்ளிக்குள மோதலில் மரணித்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வாக தீபாராதனை காடடப்பட்டு, தேவாரபாராயணம் படிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் முள்ளிக்குள மோதலில் மரணித்தவர்களுக்கான அஞ்சலிகளையும் செலுத்தினர்.

தாயக உறவுகளுடன் இணைந்து “மரணித்தவர்கள் ஆத்மா சாந்தியடைய” “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” பிரார்த்திப்பதுடன், மேற்படி நிகழ்வுக்கு நிதி உதவி வழங்கிய புளொட் மூத்த தோழர் ஜாஸ்மின் அக்கா எனும் திருமதி.ஜெயபாலினி ஹென்றிபெரேரா அவர்களுக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சார்பில் நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

28.05.2023

புளொட் முள்ளிக்குள மோதலில் பலியானவர்கள் நினைவாக, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.