புங்குடுதீவு அமரர் சுவிஸ் சாராதாம்பிகை அவர்களின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவாக விசேட மதிய உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ) பகுதி -2
புங்குடுதீவு அமரர் சுவிஸ் சாராதாம்பிகை அவர்களின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவாக விசேட மதிய உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ) பகுதி -2
############################################
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்..
மண் விட்டு மறைந்து -நீங்கள்
விண்நோக்கிச் சென்றாலும்
மனம் விட்டு மறையாமல்
எந்நாளும் வாழ்வீர்கள்..
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கலட்டி வரசித்தி விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சாரதா என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் அமரர் திருமதி.சாரதாம்பிகை பேரின்பநாதன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தாயக பிரதேசங்களில் பல்வேறுதரப்பட்ட பணிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினரால் இன்றுகாலை முன்னெடுக்கப்பட்டது.
அமரர் சாரதாம்பிகை பேரின்பநாதன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவாக அன்னாரின் கணவர் பேரின்பநாதன் மகன்மார், மருமக்கள் பேரப்பிள்ளை மற்றும் உறவுகள் சார்பாக அக்குடும்பத்தின் முழுமையான நிதிப் பங்களிப்பில் இன்றுகாலை முதல் நிகழ்வாக எல்லைக் கிராமத்தில் வதியும் வறுமைக் கோட்டில் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை சேர்ந்த சிலருக்கு வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதும். அத்துடன் அவரது நினைவாக பயன்தரு நல்லின தென்னை மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டதும் நீங்கள் அறிந்ததே..
அந்த நிகழ்வில் அமரர் திருமதி. சாராதாம்பிகை பேரின்பநாதன் அவர்களின் திருவுருவப் படத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு, மலரஞ்சலி செய்யப்பட்டு, தேவாரபாராயணம் பாடப்பட்டு நினைவஞ்சலி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கிராமத்தில் வதியும் வறுமைக் கோட்டில் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை சேர்ந்த சிலருக்கு வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொதிகளும், பயன்தரு நல்லின தென்னை மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டதும் நீங்கள் அறிந்ததே..
இதனைத் தொடர்ந்து இரண்டாவது நிகழ்வாக அவரது திதிநாளை முன்னிட்டு இன்றுமதியம் வன்னி எல்லைக் கிராமமொன்றில் அமரர் சாராதாம்பிகை பேரின்பநாதன் அவர்களின் நினைவாக விசேட மதிய உணவும் வழங்கப்பட்டது. முதலில் நிகழ்வில் அமரர் திருமதி. சாராதாம்பிகை பேரின்பநாதன் அவர்களின் திருவுருவப் படத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு, மலரஞ்சலி செய்யப்பட்டு, தேவாரபாராயணம் பாடப்பட்டு நினைவஞ்சலி செய்யப்பட்டது.
மேற்படி நிகழ்வானது மாணிக்கதாசன் நற்பணி மன்ற முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி. நவரெட்ணம் பவளராணி அவர்களின் விசேட ஒழுங்கமைப்பில் கிராமிய ஒருங்கிணைப்பாளர்கள் பங்களிப்பில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்ள மண்டபம், முற்றம், என ஒரே நேரத்தில் அனைத்து மக்களுக்குமான விசேட மதிய உணவு வழங்கப்பட்டது.
அமரத்துவமடைந்த அமரர் திருமதி சாராதாம்பிகை பேரின்பநாதன் அவர்களுக்கு தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு அஞ்சலி செலுத்துவதோடு அமரர் திருமதி சாராதாம்பிகை பேரின்பநாதன் அவர்களின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவு நிகழ்வுக்கு நிதிப் பங்களிப்பினை வழங்கிய அவரது குடும்பத்தினருக்கு தாயக உறவுகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” தனது மேலான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
13.06.2023
புங்குடுதீவு அமரர் சுவிஸ் சாராதாம்பிகை அவர்களின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவாக விசேட மதிய உணவு வழங்கல்.. (வீடியோ) பகுதி -2
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos