புங்குடுதீவு “நாகேஷ் அக்காவின்” பன்னிரெண்டாவது நினைவாண்டு நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
புங்குடுதீவு “நாகேஷ் அக்காவின்” பன்னிரெண்டாவது நினைவாண்டு நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
ஆண்டுபல இப்புவியில்
அமைதியாய் வாழ்ந்திருந்து
உறவுகளை ஆறாத்துயரில் தவிக்கவிட்டு
ஆலாலகண்டனவன் பாதமதில் வாழ
விதியின் விதிப்படி விண்ணுலகம் போனீரோ!
நல்லொழுக்க நாயகர்களாய்
பிள்ளைகளை வளர்த்தெடுத்து
அயல் வீட்டுப் பிள்ளைகளையும்
பாசத்தோடு அரவணைத்து,
மருமக்கள் எங்களுக்கும் பாசம் காட்டி
பாரினிலே பாசத்திற்கு உதாரணமாய்
வாழ்ந்த தாயே..
உம் பிரிவினை எம்முள்ளம்
எப்படித்தான் ஏற்கும்?..
மண்ணுலகில் பிறந்தோர் மாய்வது
இயற்கையே என்றாலும்
உங்கள் உறவு என்பது
தனித்துவமான ஒன்றுதானே!
ஏழுலகம் ஓடியும்
எங்களால் உம்மைப் போல்
ஓர் உறவை தேடிப்பெறுவது
இயலுமான காரியமோ?
என்ன செய்வோம் நாங்கள்
கனத்த உள்ளத்தோடு
உங்களை வழி அனுப்பிவிட்டு
தூய்மையான உங்கள் ஆன்மா சாந்திபெற
கரம் கூப்பி இறைவனை கண்ணீர்மல்க
பிரார்த்திக்கின்றோம்..
புங்குடுதீவைச் சேர்ந்தவரும், லண்டனில் வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான “நாகேஷ் அக்கா” எனும் திருமதி. சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை அவர்களின் பன்னிரெண்டாவது நினைவாண்டில் மோட்ஷ பிரார்த்தனையுடன் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் “நினைவுக் கஞ்சியும்” வழங்கி வைக்கப்பட்டது.
புங்குடுதீவு மண்ணை பூர்வீகமாகக் கொண்டவரும், லண்டனில் அமரத்துவமடைந்தவர்களுமான கொழும்பு மருதானை பிரபல வர்த்தகருமான “சொக்கர்” என அன்போடு அழைக்கப்படும் அமரர் திரு.முருகேசு சொக்கலிங்கம் அவர்களினது பாரியாரான நாகேஷ் அக்கா என அன்போடு அழைக்கப்படும் அமரர் திருமதி சீதேவிப்பிள்ளை சொக்கலிங்கம் அவர்களின் பன்னிரெண்டாம் ஆண்டு நினைவாக, அக்குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக மேற்படி நிகழ்வு நடைபெற்றது.
மேற்படி நிகழ்வானது, மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவட்ட அமைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் தலைமையில் மாணிக்கதாசன் நற்பணி மன்ற கிராமிய ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாட்டில் மேற்படி நிகழ்வு நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் மாணவ,மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் அக்கிராம மக்கள் கலந்து கொண்டு இருந்தனர். முதலில் அமரத்துவமடைந்த திருமதி.சீதேவிப்பிள்ளை சொக்கலிங்கம் அவாக்ளின் திருவுருவப் படத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு தேவார பாராயணத்துடன் அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டி வணங்கினர். அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் “நினைவுக்கஞ்சியும்” வழங்கி வைக்கப்பட்டது.
“மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” இன, மத, பிரதேச வேறுபாடுகளை மட்டுமல்ல அரசியல் வேறுபாடுகளையும் கடந்து நடுநிலைமையுடன் அனைத்து மக்களையும் வாழ்வாதாரத்தில் முன்னேற்றவும், மற்றும் மாணவ மாணவிகளின் கல்விக்கு கரம் கொடுக்கவும் வேண்டுமெனும் ஒரே நோக்கில் செயல்பட்டு “தடைகளைத் தகர்த்து சமூகத்தை உயர்த்து” எனும் குறிக்கோளில் செயலாற்றுவது நீங்கள் அறிந்ததே..
தொடர்ந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தோடு நிதிப்பங்களிப்பு தந்து, சமூகப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அமரர்.சொக்கலிங்கம் குடும்பத்தினருக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தாயக சொந்தங்களோடு இணைந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, இறையடி சேர்ந்த “நாகேஷ் அக்கா” எனும் அமரர் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை அவர்களின் ஆத்மா சாந்தியடைய எந்நாளும் இறைவனை இறைஞ்சு வேண்டுகிறோம்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
21.08.2023
புங்குடுதீவு “நாகேஷ் அக்காவின்” பன்னிரெண்டாவது நினைவாண்டு நிகழ்வு.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos