சுவிஸ் குத்வில் செல்லப்பா அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)
சுவிஸ் குத்வில் செல்லப்பா அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)
##############################
யாழ் புங்குடுதீவு மடத்துவெளிப் பிரதேசத்தைப் பூர்வீகமாக கொண்டவரும் சுவிஸ் குத்வில் மாநிலத்தில் வசிப்பவருமான குகன் அன்றில் செல்லப்பா என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு இராசதுரை பாலகுகன் அவர்களது அறுபதாவது மணிவிழா பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது.
மேற்படி இன்றைய நிகழ்வானது எல்லைக் கிராமப் பிரதேசத்தில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” கேட்டுக் கொண்டதுக்கு இணங்க, உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டு “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இன்றைய நிகழ்வு நடைபெற்றவேளை பலத்த மழை பெய்த போதிலும், காலதாமதமாகி நடைபெற்ற இந்நிகழ்வில் மாணிக்கதாசன் நற்பணி மன்ற கிராமிய ஒருங்கிணைப்பாளர்களும் விருந்தினர்களாகக் கலந்து நிகழ்வைச் சிறப்பித்து இருந்தனர்.
அந்த வகையில் இன்றைய தினம் வவுனியா எல்லைக் கிராமப் பிரதேசத்தில் மாணவர்கள் சிறுவர், சிறுமியர் அவர்களின் பெற்றோர்கள், அக்கிராம பொதுமக்கள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டு திரு பாலகுகன் அவர்களது அறுபதாவது மணிவிழா பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் பங்கு கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட கிராம மக்கள் சிறியோர் முதல், பெரியோர் வரை குகன் அன்றில் செல்லப்பா என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு இராசதுரை பாலகுகன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும்முகமாக கேக் வெட்டி பிறந்தநாள் பாட்டுப்பாடி தமது பிறந்த நாள் வாழ்த்தினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்துக் கொண்டனர்.
இதேவேளை குகன் அன்றில் செல்லப்பா என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு இராசதுரை பாலகுகன் அவர்களது குடும்பத்தின் முழுமையான நிதிப் பங்களிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டதுடன், மாலைநேர வகுப்புக்கு செல்வோருக்கான உதவியாக அப்பியாசக் கொப்பிகளும், அக்கிராமத்தவரின் வேண்டுகோளுக்கு இணங்க பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் அக்கிராம மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்துக்கு இறுதிநேரத்தில் உடனடியாக அறிவித்தல் தந்து இந்நிகழ்வை செய்த வேளையிலும் மிகவிரைவில் திரு.பாலகுகனின் பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட அசைவ உணவு விருந்தும் வழங்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் பாலகுகன் அவர்களுக்கு நிகழ்வில் கலந்து கொண்ட சிறியோர் முதல் பெரியோர் வரையான தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக வாழ்வாதார உதவிகள் வழங்கி தாயக மக்களுடன் இணைந்து முன்னெடுத்து வரும் சமூக நற்பணிகளுக்காக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
இதேவேளை இறுதிநேரத்தில் அறிந்தும் உடனடியாக நிகழ்வில் கலந்து சிறப்பித்த கிராம மக்கள் வாழ்த்துரையின் போது, “பாலகுகன் அண்ணா சிறப்பாக நீடூழி வாழ்வதுடன், அவரும், அவரது குடும்பத்தினரும் நோய்நொடியின்றி வாழ வாழ்த்துவதுடன் அவர்கள் செய்த இவ்வுதவிக்கு மனதார நன்றி தெரிவிப்பதுடன், இதுபோன்ற புலம்பெயர் உறவுகளின் உதவிகளுக்கு நன்றிகளையும் தெரிவிப்பதுடன், மாணிக்கதாசன் நற்பணி மன்றம் இதுபோன்ற சேவைகளை தொடர்ந்தும் சிறப்பாக செய்ய வேண்டும்” எனவும் வாழ்த்தினர்.
இதேவேளை திரு.நாலகுகன் அவர்களது அறுபதாவது மணிவிழா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் தாயக உறவுகளுக்கு வழங்கிய வாழ்வாதார உதவிகளுக்கு நிதிப் பங்களிப்பு வழங்கிய திரு.திருமதி. பாலகுகன் குடும்பத்தினருக்கு இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட சிறியோர் முதல் பெரியோர் வரையான தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்..
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
23.08.2023
சுவிஸ் குத்வில் செல்லப்பா அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos