கனடா சோம சச்சிதனாந்தன் அவர்களுக்கு, புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம் கௌரவிப்பு.. (படங்கள், வீடியோ)
கனடா சோம சச்சிதனாந்தன் அவர்களுக்கு, புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம் கௌரவிப்பு.. (படங்கள், வீடியோ)
கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய நிர்வாகசபை முக்கியஸ்தருமான திரு.சோம சச்சிதானந்தன் அவர்கள் தனிப்பட்ட விஜயமாக சுவிஸுக்கு வருகை தந்து உள்ள காரணத்தினால் அவரை சந்தித்து உரையாட புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம் விரும்பியது. ஏனெனில் மூன்று மாதங்களுக்கு முன்னர் புங்குடுதீவில் “அமைப்புக்களின் ஐக்கியம், புங்குடுதீவில் அபிவிருத்தித் திட்டங்கள்” குறித்து பல்வேறு நிகழ்வுகளை ஊரில் மேற்கொண்டு இருந்தமையால் “சுவிஸ் ஒன்றியத்தின் நிலைப்பாடு” குறித்து அவருக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்பதுக்காகவும், மற்றும் அவரது ஊர் நோக்கிய சேவையைப் பாராட்டிக் கௌரவிக்க வேண்டும் என்பதுக்காகவும் இன்றைய சந்திப்பை மேற்கொண்டோம்.
இதுகுறித்து புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய நிர்வாக சபையிடம், ஒன்றியத் தலைவர் சொக்கலிங்கம் ரஞ்சன் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதனை முழுமனதுடன் ஏற்றுக் கொண்ட சுவிஸ் ஒன்றிய நிர்வாகசபை இதில் அனைவரும் உடனடியாகக் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையைக் கூறி ஒன்றியத் தலைவரும், செயலாளரும் கலந்து சிறப்பிக்குமாறு கோரி இருந்தனர். ஏனெனில் திரு.சோம சச்சிதானந்தன் அவர்கள் தனிப்பட்ட விஜயமாக சுவிஸுக்கு வருகை தந்து மீண்டும் கனடாவில் உள்ள நிகழ்வுக்காக உடனடியாக திரும்பிச் செல்ல வேண்டி உள்ளதினால் அதாவது ஓரிரு நாட்களில் விடுமுறை எடுப்பது கடினம் என்பதை அவருக்கு விளங்கப்படுத்தி இருந்தோம்.
இன்றைய கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய நிர்வாகசபை முக்கியஸ்தருமான திரு.சோம சச்சிதானந்தன் அவர்களுடனான சந்திப்பில் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத் தலைவர் சொக்கலிங்கம் ரஞ்சன், செயலாளர் திருமதி செல்வி சுதாகரன், ஒன்றிய உறுப்பினர் திரு.சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டு புங்குடுதீவின் அபிவிருத்தி சம்பந்தமாகவும், புங்குடுதீவு புலம்பெயர் அமைப்புக்களின் நடவடிக்கை குறித்தும் உரையாடப்பட்டது.
அதேவேளை புங்குடுதீவு புலம்பெயர் அமைப்புக்களின் நடவடிக்கையில் “அரசியல் இருக்கக் கூடாது” என்பதையும், “சார்பு அரசியல் ஒற்றுமைக்கு குந்தகமாகவே அமையும்” என்பதையும் சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் சார்பில் தலைவர் சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களால் ஆணித்தரமாக தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட திரு.சோமா சச்ச்சிதானந்தன் அவர்கள் “எல்லா புங்குடுதீவு புலம்பெயர் அமைப்புக்களும் “ஊரின் அபிவிருத்தி, எமக்கிடையேயான ஒற்றுமை” ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட முன்வர வேண்டுமென” வலியுறுத்தினார்.
இதனைத் தொடந்து கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய நிர்வாகசபை முக்கியஸ்தருமான திரு.சோம சச்சிதானந்தன் அவர்களுக்கு, சுவிஸ் ஒன்றியத் தலைவர் சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்க, திரு.சுதாகரன் அவர்களால் சந்தனமாலை அணிவித்து, சுவிஸ் ஒன்றிய செயலாளர் திருமதி சுதாகரன் செல்வி அவர்களினால் வாழ்த்து மடல் வழங்கி புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம் சார்பில் கௌரவிக்கப்பட்டது.
கௌரவத்தை ஏற்றுக் கொண்டு நன்றியுரை ஆற்றிய கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய நிர்வாகசபை முக்கியஸ்தருமான திரு.சோம சச்சிதானந்தன் அவர்கள் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டியதுடன், “அனைத்து புலம்பெயர் அமைப்புக்களும் ஒரேகுடையின் கீழ் ஒன்றுபட்டு செயல்பட வேண்டுமெனவும், தன்னைக் கௌரவித்த சுவிஸ் ஒன்றியத்துக்கு நன்றி என்பதுடன், சுவிஸ் ஒன்றிய நிர்வாகசபை உறுப்பினர்கள் ஊர்நோக்கிய செயல்பாட்டில் திறம்பட செயல்படுவதுக்காக அனைத்து சுவிஸ் ஒன்றிய உறுப்பினர்களுக்கும் நன்றி” தெரிவித்துக் கொண்டார்.
கனடா சோம சச்சிதனாந்தன் அவர்களுக்கு, புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம் கௌரவிப்பு.. (வீடியோ)