;
Athirady Tamil News

“பெருக்குமரம்”: தொடரும் புங்குடுதீவு இறுப்பிட்டி கொம்மாபிட்டிப்பிள்ளையார் ஆலய அறநெறி மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு (படங்கள்)

0

“பெருக்குமரம்”: தொடரும் புங்குடுதீவு இறுப்பிட்டி கொம்மாபிட்டிப்பிள்ளையார் ஆலய அறநெறி மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு (படங்கள்)..

இலங்கை மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றும் புங்குடுதீவின் பெருமைமிகு சுற்றுலாத் தளமுமான “புங்குடுதீவு பெருக்குமரம், மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்கரைச் சூழல்” புங்குடுதீவு சுவிஸ் மக்கள் விழிப்புணர்வு ஓன்றியத்தினரால் பல இலட்சங்கள் செலவு செய்து பொதுமக்களின் பொழுதுபோக்கும் சூழலாகவும் மாற்றி அழகுபடுத்திய புங்குடுதீவு பெருக்குமரச் சூழலை தொடர்ந்தும் பராமரிக்கும் நோக்குடனும், அழகுபடுத்தும் நோக்குடனும் மேற்படி இறுப்பிட்டி கொம்மாபிட்டிப்பிள்ளையார் ஆலய அறநெறி மாணவர்களால் இன்றையதினம் (இன்று 17/09/2023) சிரமதானப் பணி மூலம் அழகுபடுத்தினர்,

சமய சமூக பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டு வருவது முன்னுதாரணமாக கருதப்படுகிறது. கொம்மாபிட்டி அறநெறிப் பாடசாலை இயக்குனர் திரு.சதாசிவம் வைகுந்தராசா அவர்களின் அனுமதியோடு அறநெறிப் பாடசாலை பொறுப்பாசிரியர்களின் வழிகாட்டுதல்களோடும் சிறப்பான பணி இன்று தொடங்கப்பட்டது.

இன்றைய சிரமதானப்பணியில் ஈடுபட்ட மாணவச்செல்வங்களுக்கான சிற்றுண்டி மற்றும் மதிய உணவுக்கான நிதி அனுசரணை வழங்கியிருந்தார்கள் இறைபணிச் செம்மல்கள் திரு திருமதி வைரவநாதன் திலகவதி தம்பதியினர் (புங்குடுதீவு – பிரான்ஸ்) என்பதுடன் அவர்களுக்கும், இதுக்கான ஒழுங்கை மாதத்தில் ஒன்று அன்றில் இரண்டு முறை மேற்கொள்வதாக புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்துக்கு உறுதிமொழி தந்தது போல் அதனை நடைமுறைப்படுத்திய இறுப்பிட்டி சனசமூக நிலைய செயலாளர் அண்ணா சின்னத்தம்பி எனும் திரு. பிள்ளைநாயகம் சதீஷ் அவர்களுக்கும் நன்றி.

தகவல்.. – புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய ஊடகப் பிரிவு.

மீண்டும் புதுப் பொலிவுடன், மக்களினால் வரவேற்கப்படும் புங்குடுதீவின் பெருமைமிகு “பெருக்கு மரம்” (படங்கள், வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.