சுவிஸ் திரு.திருமதி. “ஈழதர்சன் லெவீனா” தம்பதிகளின் திருமண நிகழ்வை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பாதணிகள் வழங்கல்..(படங்கள் வீடியோ)
சுவிஸ் திரு.திருமதி. “ஈழதர்சன் லெவீனா” தம்பதிகளின் திருமண நிகழ்வை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பாதணிகள் வழங்கல்..(படங்கள் வீடியோ)
#############################
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்..
“ஈழதர்சன் லெவீனா”
குறையாத அன்பும்,
புரிந்து கொள்ளும் அன்பும்,
விட்டுக் கொடுக்காத
பண்பும் கொண்டு
இன்று போல் என்றும்
சந்தோசமாக இருக்க
நீங்கள் ஒருவர் மீது
ஒருவர் வைத்திருக்கும்
அன்பும் காதலும் என்று
தொடர்ந்து வளரட்டும்..!
இணைந்த இரு கரம்
அன்பில் எழுதிய காவியம்
இல்லறம்..!
இன்று போல என்றும்
இல்லறம் சிறப்பாக
இருக்க இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்..!
21.10.2023 சனிக்கிழமை அன்று திருமண பந்தத்தில் இணையும் ஈழதர்சன் லெவீனா தம்பதிகள் இமை போல் வாழ்ந்து இமயம் போல் வளர்ந்து என்றும் இணை பிரியாமல் வாழ வாழ்த்துகின்றோம்.
சுவிஸில் பிறந்து, வளர்ந்து மூன்று தினத்துக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகளான “ஈழதர்சன் லெவீனா” ஆகியோரின் திருமண நன்னாளை முன்னிட்டு அவர்கள் வழங்கிய நிதிப் பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக வவுனியா எல்லைக் கிராமத்தில் விசேட மதியஉணவு வழங்கப்பட்டது நீங்கள் அறிந்ததே
தாயக பிரதேசங்களான சாவகச்சேரி, கோண்டாவில் பிரதேங்களைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளின் திருமண நிகழ்வு சுவிஸ் நாட்டில் கடந்த 20.10.2023 இடம்பெற்றதும், இதனை முன்னிட்டு முதல் நிகழ்வாக திரு.திருமதி ஈழதர்சன் லெவீனா திருமண வைபவம் சிறப்பாக அமைய வேண்டி விசேட பூசையினையும் கலந்து கொண்ட மக்களுக்கு திருமண விருந்துபசாரமும் தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கப்பட்டது. அந்நிகழ்வில் மாணவ மாணவிகள், சிறுவர், சிறுமிகள் அவர்களின் பெற்றோர்கள், அங்கு வாழும் குடும்பங்களுக்கு விசேட மதிய உணவு வழங்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தனர் என்பதும் நீங்கள் அறிந்ததே.
யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் சொலத்தூண் பிரதேசத்தில் வசிப்பவர்களுமான திரு.திருமதி லெனின் எனும் செல்வபாலன், சசி எனும் மனோகரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரன் செல்வன்.ஈழதர்சன், கோண்டாவில் குமரக்கோட்டம் பிரதேசத்தை சேர்ந்தவர்களும், சுவிஸ் நாட்டில் வசிப்பவர்களுமான திரு.திருமதி.மயில்வாகனம் தயாபரன் வாகினி தம்பதிகளின் அன்புப்புதல்வி செல்வி. லெவீனா ஆகிய இருவருக்கும் பெற்றோரின் முன்னிலையில் 20.10.2023 அன்று திருமணம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்றையதினம் மாணவ, மாணவிகளுக்கு பெறுமதியான பாதணிகளை புதுமணத் தம்பதிகள் வழங்கி வைத்தனர். வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அறநெறிப் பாடசாலை பொறுப்பாசிரியர் திருமதி.க.இந்திரகுமாரி அவர்கள் புதுமணத் தம்பதிகளிடம் நேரடியாக முன்வைத்த கோரிக்கையான “வவுனியா விபுலானந்தா மகா வித்தியாலயம், மற்றும் வவுனியா நெளுக்குளம் மகா வித்தியாலயம் போன்றவற்றில் கல்வி பயிலும் தேவையுடைய மாணவ, மாணவிகளுக்கு பாதணிகளை நெளுக்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அறநெறிப் பாடசாலை சார்பில் வழங்கி உதவுமாறு முன்வைத்த கோரிக்கையை ஏற்று, புதுமணத் தம்பதிகளான திரு.திருமதி.ஈழதர்சன் லெவீனா வழங்கிய நிதிப் பங்களிப்பில் கல்வி பயிலும் தேவையுடைய மாணவ, மாணவிகளுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மேற்படி நிகழ்வானது மாணிக்கதாசன் நற்பணி மன்ற முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி.நவரெட்ணம் பவளராணி அவர்களின் ஒழுங்கமைப்பில், மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் தலைமையில் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அறநெறிப் பாடசாலை ஆசிரியைகள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள சிறப்பாக நடைபெற்றது.
முதலில் மாணவ,மாணவிகளினால் மண்டபம் அழகுபடுத்தப்பட்டு, திருமண வாழ்த்துக்களுடன் தேவாரம் பாடப்பட்டு நிகழ்வு ஆரம்பமாகியது. இதனைத் தொடர்ந்து ஈழதர்சன் லெவீனாவின் திருமணநாள் கேக் வெட்டப்பட்டு மாணவ, மாணவிகளின் ஆரவார வாழ்த்துக்களுடன் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் பெற்றோர் ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் சிற்றுண்டிகளும் குளிர்பானமும் வழங்கப்பட்டதுடன், கலந்து கொண்ட விருந்தினர்களினால் கல்வி பயிலும் தேவையுடைய மாணவ, மாணவிகளுக்கு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக பலதரப்பட்ட சமூகப் பங்களிப்பினை தொடர்ந்து செய்து வருகின்ற திரு.திருமதி. செல்வபாலன் மனோகரி தம்பதிகளின் சிரேஷ்டபுதல்வன் செல்வன்.ஈழதர்சன் லெவீனா தம்பதிகள் திருமண நிகழ்வினை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைப்பில் முதல்நிகழ்வான விசேட மதிய உணவு வழங்குதல் சிறப்பாக நடைபெற்றது போல் இன்றைய மாணவ மாணவிகளுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
செல்வன்.ஈழதர்சன் அவர்களின் தந்தை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எனும் புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினர் என்பதுடன் புளொட் சுவிஸ் கிளையின் முக்கியஸ்தர்களில் ஒருவருமான தோழர்.லெனின் எனும் திரு.செல்வபாலன் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். தந்தையைப் போன்றே சமூகத் தொண்டில் என்றும் முன்னின்று தனயனும் செயலாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுத் தம்பதிகளான திரு.திருமதி ஈழதர்சன் லெவீனா தம்பதிகள் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ்கவென தாயக உறவுகளோடு இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” வாழ்த்துகிறது.
அத்தோடு தமது திருமண நாளினை முன்னிட்டு தாயக உறவுகளுக்கு விசேட உணவினை வழங்குவதற்கும் மாணவ, மாணவிகளுக்கு பாதணிகள் வழங்குவதுக்கும் நிதிப்பங்களிப்பு செய்தமைக்காகவும் ஈழதர்சன் லெவீனா தம்பதிகளுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்களையும் மாணவ, மாணவிகள் ஆசிரியைகள் மற்றும் தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
24.10.2023
சுவிஸ் திரு.திருமதி. “ஈழதர்சன் லெவீனா” தம்பதிகளின் திருமண நிகழ்வை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பாதணிகள் வழங்கல்..(வீடியோ)
தாயக உறவுகளோடு சுவிஸ் திரு.திருமதி. “ஈழதர்சன் லெவீனா” தம்பதிகளின் திருமணக் கொண்டாட்டம்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos