திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களின் பிறந்த நாளில், மாணவர்களுக்கு கற்றல் வசதி வழங்கல்.. (படங்கள், வீடியோ)
திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களின் பிறந்த நாளில், மாணவர்களுக்கு கற்றல் வசதி வழங்கல்.. (படங்கள், வீடியோ)
###################################
லண்டனில் வசிக்கும் திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களுடைய பிறந்தநாள் இன்றாகும் .இதனை முன்னிட்டு பிறந்தநாள் நிகழ்வும் மாலைநேர வகுப்புகைக்கு செல்லும் மாணவர்களுக்காள இடர்கால கற்றலுக்கான வசதிக்கு அப்பியாசக் கொப்பிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
புங்குடுதீவைச் பூர்வீகமாக் கொண்ட அமரர்கள் சொக்கர் நாகேஷ் பரம்பரையில் வந்துதித்த வழித்தோன்றல்களில் ஒருவரும் லண்டனில் வசிக்கும் ஆனந்தன் என அழைக்கப்படும் ஆனந்தலிங்கம் அவர்களின் மனைவியும், அக்குடும்பத்தின் மருமகளுமான லண்டனில் வசிக்கும் திருமதி.கிரிஷா ஆனந்தலிங்கம் அவர்களின் இன்றைய பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் நிதிப் பங்களிப்பில் கிராமமொன்றில் சிறுவர் சிறுமியர்கள் ஒன்று கூடி பிறந்தநாள் நிகழ்வை ஒழுங்குபடுத்தி கொண்டாடினார்கள்.
அதேநேரம் திருமதி கிரிஷா ஆனந்தலிங்கம் அவர்களது நிதிப் பங்களிப்பில் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கும், பாலர் பாடசாலை குழந்தைகளுக்கும் கற்றல் உபகரணங்களாக அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது..
பிறந்தநாளான இன்று வன்னி எல்லைக் கிராமமொன்றில் அப்பிரதேச மாணவமாணவிகள் சிலரும் அவரது பெற்றோர்களும் இணைந்து பிறந்தநாள் கேக் வெட்டி, வாழ்த்துப் பாடி சந்தோஷமாகக் கொண்டாடப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது, “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” முக்கியஸ்தர்களில் ஒருவரான மன்றத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களின் ஒழுங்கமைப்பில் சிறப்பாக நடைபெற்றது.
இன்றைய நாளில் லண்டனில் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி கிரிஷா ஆனந்தலிங்கம் அவர்கள் தேக ஆரோக்கியத்துடன் நோய்நொடியின்றி சந்தோசமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழகவென தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றம் வாழ்த்தும் அதேவேளை,
தனது பிறந்த நாளை முன்னிட்டு தாயக உறவுகளின் பாடசாலை மாணவச் செல்வங்களுக்கு தமது நிதிப் பங்களிப்பில் அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைத்தமைக்காகவும் மதிப்புமிகு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
11.11.2023.
திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களின் பிறந்த நாளில், மாணவர்களுக்கு கற்றல் வசதி வழங்கல்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos