சுவிஸ் “செல்வி.ஜெசிக்காவின்” பிறந்தநாள், தாயகத்தில் “விசேட மதியஉணவு” வழங்கி இனிதாகக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)
சுவிஸ் “செல்வி.ஜெசிக்காவின்” பிறந்தநாள், தாயகத்தில் “விசேட மதியஉணவு” வழங்கி இனிதாகக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)
##############################
புங்குடுதீவு வல்லன் பிரதேசத்தைப் பூர்வீகமாக் கொண்ட சுவிஸில் தூண் பிரதேசத்தில் வாழும் ஜெகன் மற்றும் சசி என அன்புடன் அழைக்கப்படும் திரு.திருமதி. ஜெகேந்திரராஜா சசிகலா தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி.ஜெசிக்கா அவர்களின் ஆறாவது பிறந்ததினம் தாயகத்தில் சிறுவர் சிறுமிகளோடு இனிதாக இன்றைய நாளில் கொண்டாடப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான பொருளாதார சூழ்நிலையால் மிகவும் கஸ்ரத்துக்கு மத்தியில் வாழும் கிராமங்களை சேர்ந்த மக்களை கணக்கில் கொண்டு வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலய ஆசிரியர் சமூகத்தின் வேண்டுகோளை ஏற்று, விசேட மதிய உணவு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஏற்பாட்டில் செல்வி. ஜெசிக்காவின் பெற்றோரின் நிதிப் பங்களிப்பில் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
இன்றைய நாளில் பிறந்தநாளைக் கொண்டாடும் செல்வி.ஜெசிக்கா ஜெகன் அவர்களின் ஆறாவது பிறந்தநாளை முன்னிட்டு அப்பாடசாலை தாரம் ஆறு முதல் பதினொன்று வரை கல்வி பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியுடன் பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்து தத்தமது சந்தோசத்தையும், மகிழ்ச்சினையும் செல்வி.ஜெசிக்கா ஜெகன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தினையும் தெரிவித்தனர். அத்துடன் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் அனைவருக்கும் சிற்றுண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் விசேட மதிய உணவும், குளிர்பானமும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக வழங்கி வைத்தனர்.
மேற்படி நிகழ்வானது மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் முக்கியஸ்தர்களில் திருமதி.பவளராணி நவரெட்ணம் அவர்களின் ஒழுங்கமைப்பில், மாணிக்கதாசன் நற்பணி மன்ற கிராமிய இணைப்பாளர்களும் இணைந்து சிறப்பாக நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வானது அப்பாடசாலை மாணவ மாணவிகளுடன் அப்பாடசாலை அதிபர் திருமதி.ம.திருவருள்நேசன் தலைமையில், ஆசிரியர்களான திருமதி.செ. ஜெகநாதன், திருமதி.ர. நிமலதாசன், திருமதி.த. சுரேந்திரகுமார், திருமதி.செ. சுதாத்தரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள சிறப்பாக நடைபெற்றது.
இவ்வாறாக காலத்தின் தேவை கருதி உடனடியாக இந்த உதவியினை செய்ய முன் வந்த செல்வி.ஜெசிக்கா ஜெகன் அவர்களின் பெற்றோர்களான திரு.திருமதி.ஜெகன் சசிகலா தம்பதிகளுக்கு ஆசிரிய சமூகம் மற்றும் தாயகத்தின் உறவுகளுடன் இணைந்து, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் நன்றி கூறுவதோடு
இன்றைய நாளில் இனிய ஆறாவது பிறந்தநாளைக் கொண்டாடும் “செல்வி.ஜெசிக்கா ஜெகன்” அவர்கள் தேக ஆரோக்கியத்துடன், கலைகளில், கல்வியில் சிறந்து உயர்வடையவும், சீரிய பண்புகளோடு, நல்ல மனிதமுள்ள புரட்சிப் பெண்ணாக பெற்றோருக்கு பேரும் புகழும் சேர்க்க வேண்டும்” என தாயக உறவுகளோடு, இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாயார வாழ்த்தி பெருமை கொள்கிறது..
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
20.11.2023
சுவிஸ் “செல்வி.ஜெசிக்காவின்” பிறந்தநாள், தாயகத்தில் “விசேட மதியஉணவு” வழங்கி இனிதாகக் கொண்டாட்டம்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos