புங்குடுதீவு அமரர்.வீடியோசுதா அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவாக விசேட உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ)
புங்குடுதீவு அமரர்.வீடியோசுதா அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவாக விசேட உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ)
அழியா நினைவுடன் ஒன்பதாவது ஆண்டு விழிநீர் அஞ்சலி..
அமரர். ஐயாத்துரை சுகதரன்..
வெள்ளை உடல் கொண்டாய்
வெள்ளை உள்ளம் கொண்டாய்
வெள்ளை மனம் கொண்டாய்
வெள்ளை நட்புத் தந்தாய்
விதியின் விளைவென – இன்று நீ
விதையாகி விட்டாய் – எம்
கண்ணை இன்று நீ
கலங்கடித்து விட்டாய் – எம்
உள்ளத் துணர்வை
ஊமையாக்கி விட்டாய்.
புங்குடுதீவில் பிறந்து, சுவிஸ் சூரிச்சில் வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான வீடியோ சுதா என அன்புடன் அழைக்கப்படும் அமரர். ஐயாத்துரை சுகதரன் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவாக இன்று மதியம் வன்னி எல்லைக் கிராமத்தில் உள்ள இடமொன்றில் தேவையுடையோர், நோய்வாய்ப்பட்டோர், முதியோர் உட்பட அனைவருக்கும் விசேட சைவ மதிய உணவு வழங்கி நினைவு கூறப்பட்டது.
புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த திரு.திருமதி ஐயாத்துரை முத்தம்மா அவர்களின் மகனும், திருமதி.கிறிஸ்பின் அவர்களின் அன்புக் கணவரும், அன்பு செல்வங்களான சிந்து, சீனு ஆகியோரின் பாசமிகு அப்பாவும், செல்வன் சேஷ் அர்சூனின் அன்புத் தாத்தாவுமான வீடியோ சுதா என அன்புடன் அழைக்கப்படும் அமரர். ஐயாத்துரை சுகதரன் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவாக அவரது மனைவி பிள்ளைகளின் முழுமையான நிதி பங்களிப்பில் மேற்படி நிகழ்வு நடைபெற்றது.
அமரத்துவமடைந்த வீடியோ சுதா என அன்புடன் அழைக்கப்படும் அமரர். ஐயாத்துரை சுகதரன் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவாகவும், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் முதலில் அன்னாரின் திருவுருவப் படத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு, தேவாரபாராயணம் பாடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வீடியோ சுதா என அன்புடன் அழைக்கப்படும் அமரர். ஐயாத்துரை சுகதரன் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவாக, இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் “விசேட மதிய உணவும்” வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது..
மேற்படி நிகழ்வானது மாணிக்கதாசன் நற்பணி மன்ற முக்கியஸ்தரான திருமதி.நவரெட்ணம் பவளராணி ஒழுங்கமைப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் கிராமிய ஒருங்கிணைப்பாளர்கள் விருந்தினராகக் கலந்து சிறப்பிக்க நடைபெற்றது.
இதேவேளை நாளையதினம் வீடியோ சுதா என அன்புடன் அழைக்கப்படும் அமரர். ஐயாத்துரை சுகதரன் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவாகவும், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் இரண்டாவது நிகழ்வாக மிகவும் கஷ்ரமான சூழ்நிலையில் வாழும் தேவையுடைய சிலருக்கு பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற மதிய விசேட உணவு வழங்கும் நிகழ்வும் நாளை வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட உள்ளதும், அன்னாரின் குடும்பம் மற்றும் உற்றார் உறவுகள் சார்பாக அன்னாரின் குடும்பத்தின் சார்பில் வழங்கப்பட்ட நிதிப் பங்களிப்பில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அமரத்துவமடைந்த வீடியோ சுதா என அன்புடன் அழைக்கப்படும் அமரர். ஐயாத்துரை சுகதரன் அவர்களுக்கு தாயக உறவுகளோடு, இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு “அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி” அஞ்சலி செலுத்துவதோடு
அமரர். ஐயாத்துரை சுகதரன் அவர்களது ஒன்பதாம் ஆண்டு நினைவாக அனுஸ்டிக்கப்பட்ட, நிகழ்வுக்கு நிதிப்பங்களிப்பினை வழங்கிய அன்னாரின் மனைவி, பிள்ளைகள் ஆகியோருக்கு பயனாளிகள் மற்றும் தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
08.01 2023.
புங்குடுதீவு அமரர்.வீடியோசுதா அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவாக விசேட உணவு வழங்கல்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos