;
Athirady Tamil News

புளொட் சுவிஸ் கிளையினரால் புலோலி கந்த முருகேசனார் முன்பள்ளி மற்றும் நூலகத்துக்கு நிதியுதவி – நேரில் கையளித்த புளொட் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. (Video, Photos)

0

புளொட் சுவிஸ் கிளையினரால் புலோலி கந்த முருகேசனார் முன்பள்ளி மற்றும் நூலகத்துக்கு நிதியுதவி – நேரில் கையளித்த புளொட் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி.

மறைந்த புளொட் அமைப்பின் சுவிஸ்கிளை உறுப்பினரான மனோகரன் முருகதாசன் அவர்களின் நினைவாக அவரது பிறந்த ஊரான புலோலியில் அமைந்துள்ள கந்த முருகேசனார் சனசமூக நிலையத்துக்கு புளொட் அமைப்பின் சுவிஸ் கிளையின் நிதியுதவியின் கீழ் நூலகக் கட்டிடத் திருத்தத்துக்கான நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

27.01.2024 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் புலோலி கந்த முருகேசனார் முன்பள்ளியிலே, குறித்த முன்பள்ளியின் முகாமைத்துவக் குழுவின் தலைவர் மு.ஜெகதேவன் அவர்கள் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. தலைமையுரை, பிரதம விருந்தினர் உரை, சிறப்பு விருந்தினர்கள் உரை, நன்றியுரை ஆகியவற்றுடன் இந்நிகழ்வு நடைபெற்றது.

தோழர். மனோகரன் முருகதாஸ் அவர்கள் நினைவாக சுவிஸ் கிளையினரால் வழங்கிய நிதியின் ஒரு பகுதி புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினரும் ஓய்வுபெற்ற புலோலி வாழ் தபாலதிபர் சந்திரமோகன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தோழர்.முருகதாஸின் சகோதரர் முன்னிலையில் இவ்வுதவி செய்யப்பட்டது.

நிகழ்வில் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டு மேற்படி நூலகக் கட்டிடத் திருத்தத்துக்கான நிதியுதவியினை நேரில் வழங்கி வைத்திருந்தார்.

மேற்படி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினருடன் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும், புளொட் யாழ் மாவட்ட அமைப்பாளருமான பா.கஜதீபன், முன்னாள் யாழ்.மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந், முன்னாள் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் க.பரஞ்சோதி, புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினர் ஓய்வுபெற்ற தபாலதிபர் சந்திரமோகன், மனோகரன் முருகதாசன் அவர்களின் சகோதரர் மற்றும் முன்பள்ளிச் சிறார்கள் மற்றும் பெற்றோர்கள், ஊரவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மிகவும் பழுதடைந்த நிலையிலுள்ள மேற்படி நூலகத்தினை புனரமைப்புக்கான உதவியினை வழங்கியதுக்காக பாராளுமன்ற உறுப்பினருக்கும், புளொட் அமைப்பின் சுவிஸ் கிளையினருக்கும் முன்பள்ளியினர் மிகுந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

மேற்படி நிகழ்வுக்கு பிரித்தானியா வாழ் புளொட் லண்டன் பாலா அண்ணர் அவர்களுடன் இணைந்து புளொட் சுவிஸ் கிளையின் தோழர்களான புளொட் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் ரஞ்சன், நிர்வாகப் பொறுப்பாளர் செல்வபாலன், நிதிப் பொறுப்பாளர் வரதன், உப நிர்வாகப் பொறுப்பாளர் ரமணன், நிர்வாகசபை உறுப்பினர் அன்ரன், சுவிஸ் கிளை தோழர்களான பாபு, காந்தன், மனோ, ஆனந்தன், பிரபா, ராசன், புவி, ரூபன், மோகன் ஆகியோர் நிதி உதவி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தகவல் & படங்கள், வீடியோ.. – புளொட் ஊடகப் பிரிவு, யாழ்.மாவட்டம்.

புளொட் சுவிஸ் கிளையினரால் புலோலி கந்த முருகேசனார் முன்பள்ளி மற்றும் நூலகத்துக்கு நிதியுதவி – நேரில் கையளித்த புளொட் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.