;
Athirady Tamil News

கற்றல் உபகரணங்கள் வழங்கி, புங்குடுதீவு லண்டன் ரோகிணியின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)

0

கற்றல் உபகரணங்கள் வழங்கி புங்குடுதீவு லண்டன் ரோகிணியின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)

லண்டனில் வசிக்கும் ரோகிணி என அழைக்கப்படும் திருமதி. விஜயகுமாரி பரமகுமரன் அவர்களது பிறந்தநாள் வன்னி எல்லைக் கிராமமொன்றில் தாயக கிராமத்து உறவுகளினால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்டவரும், கொழும்பு மருதானை பிரபல வர்த்தகருமான சொக்கர் மற்றும் நாகேஷ் என அன்புடன் அழைக்கப்படும் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியான லண்டனில் வசிக்கும் ரோகிணி என அழைக்கப்படும் திருமதி.விஜயகுமாரி பரமகுமரன் அவர்களது பிறந்தநாள் அவரது கணவர் பரமகுமரன், மகன் கிஷாந்த், மற்றும் அவரது உறவுகளின் வாழ்த்துக்களுடன் வவுனியாவில் உள்ள சமலன்குளம் அந்தோனியார் முன்பள்ளி பாடசாலை மண்டபத்தில் சமலன்குளம் அறநெறிப பாடசாலை ஆசிரியை திருமதி வசந்தமலர் கலாநீதன் அவர்களது நேர்த்தியான ஒழுங்கமைப்பில் அந்தோனியார் முன்பள்ளி பாடசாலை ஆசிரியை திருமதி.K.சர்மிளா அவர்களது தலைமையில் கற்றல் உபகரணங்களாக அப்பியாசக் கொப்பிகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது..

வவுனியா சமலன்குளம் பகுதியில் வசிக்கும் மழலைச் சிறுவர் சிறுமியர்கள் அவர்களின் பெற்றோர் என பலரும் ஒன்றுகூடி பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக்வெட்டி கொண்டாடினார்கள். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

இதனைவிட அக்கிராமத்தில் மாலைநேர வகுப்புக்கு செல்லும் மாணவ,மாணவிகளுக்கு கற்றலுக்கு உதவியாக அப்பியாசக் கொப்பிகளும் வழங்கி வைத்ததும் சிறப்பம்சமாகும்.

இன்றைய நாளில் தமது பிறந்த நாளைக் கொண்டாடும் லண்டன் வாழ் ரோகினி பரமகுமரன் புங்குடுதீவு பிரபல வர்த்தகர் சொக்கர் என அழைக்கப்படும் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் மூத்தமகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களது குடும்பத்தின் எந்தவிதமான நிகழ்வு என்றாலும் அந்நிகழ்வினை தாயக உறவுகளோடு இணைந்து கொண்டாடி உதவி செய்து வருபவர்கள் என்பதை கட்டாயம் சொல்ல வேண்டும். அதுவும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக இவர்கள் பலவேறு வாழ்வாதார மற்றும் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற நிகழ்ச்சி திட்டத்தினூடாக தொடர்ச்சியாக உதவி செய்து வருவது சிறப்பாக குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இன்றையதினம் பிறந்தநாளைக் கொண்டாடும் திருமதி. ரோகினி பரமகுமரன் அவர்களுக்கு அவரது கணவர் மகன் ஹிஷாந் ஆகியோருடன் உறவுகள் நண்பர்களுடன் இணைந்து தாயக உறவுகளோடு இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ச்சியாக தாயக உறவுகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக நிதிப் பங்களிப்பினை வழங்கி வருவதற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி மன்றம்..என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
04.03 2024.

கற்றல் உபகரணங்கள் வழங்கி புங்குடுதீவு லண்டன் ரோகிணியின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.