;
Athirady Tamil News

அச்சுவேலி சுவிஸ் கேமேஸ்வரி அவர்களின் பிறந்த தினத்தில், முதியோருக்கு விசேட மதிய உணவுடன் அனைவருக்குமான உடுபுடைவைகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)

0

அச்சுவேலி சுவிஸ் கேமேஸ்வரி அவர்களின் பிறந்த தினத்தில், முதியோருக்கு விசேட மதிய உணவுடன் அனைவருக்குமான உடுபுடைவைகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)

யாழ் அச்சுவேலியில் பிறந்து சுவிஸ் நாட்டில் பேர்ண் மாநில தூண் பிரதேசத்தில் வதியும் திருமதி. கேமேஸ்வரி சுபாஸ்கரன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, வவுனியா சிவன் இல்லத்தில் வதியும் நோய்வாய்ப்பட்ட மற்றும் ஆதரவற்ற முதியோர்கள் சுமார் நூறு பேருக்கு விசேட மதிய உணவுடன் அனைவருக்குமான புத்தம்புதிய உடுபுடைவைகள் வழங்கி வைக்கப்பட்டது.

யாழ் அச்சுவேலியில் பிறந்து சுவிஸ் நாட்டில் பேர்ண் மாநில தூண் பிரதேசத்தில் வதியும் திருமதி. கேமேஸ்வரி சுபாஸ்கரன் (ராஜு) அவர்கள் அவரது குடும்ப உறுப்பினர்களால் “ராசா” எனவும்; நண்பர்கள், உறவினர்களால் “கேமேஷ்” எனவும் அன்புடன் அழைக்கப்படும் இவர் சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய தீவிர தொண்டரும் ஆவார்.

இவரது பிறந்ததினத்தை முன்னிட்டு, அவரது கனிஷ்ட புதல்வியின் விருப்பத்துக்கு இணங்க அவரது அக்காவுடன் இணைந்து (பிள்ளைகளின்) நிதிப் பங்களிப்பில், “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக முதல் நிகழ்வாக பிறந்தநாள் கேக் வெட்டி, வாழ்த்துப்பா பாடிக் கொண்டாடப்பட்டதுடன், அடுத்து அனைத்து முதியோருக்குமான விசேட மதிய உணவுடன் அனைவருக்குமான புத்தம்புதிய உடுபுடைவைகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில், வவுனியா சிவன் முதியோர் இல்ல மேற்பார்வையாளர் அகிலாண்டேஸ்வரியுடன், “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வேண்டுகோளுக்கு இணங்க திருமதி.பிரியங்கா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

தாயக சொந்தங்களின் தற்போதைய வாழ்வியல் சூழ்நிலையில், அவர்களின் வாழ்வியல் ஆதாரமாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தொடர்ந்து தனது பங்களிப்பினை செய்து வருகிறது.

அந்தவகையில் இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி கேமேஸ்வரி சுபாஸ்கரன் அவர்களை தாயக உறவுகளோடு இணைந்து, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் “தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி சந்தோஷமடைவதுடன், நிதிப்பங்களிப்பு வழங்கிய சுவிஸில் வசிக்கும் திரு.திருமதி.சுபாஸ்கரன் (ராஜு) பிள்ளைகளுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்,
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
25.06.2023

அச்சுவேலி சுவிஸ் கேமேஸ்வரி அவர்களின் பிறந்த தினத்தில், முதியோருக்கு விசேட மதிய உணவுடன் அனைவருக்குமான உடுபுடைவைகள் வழங்கல்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.