;
Athirady Tamil News

சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ படங்கள்) -பகுதி -1

0

சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ படங்கள்) -பகுதி -1
##################################

சுவிஸைச் சேர்ந்த அபி, அனு இரட்டைச் சகோதரிகளின் பிறந்தநாள் தாயகத்தில் சந்தோசமாக கொண்டாடப்பட்டது. சுவிசில் வசிக்கும் திரு திருமதி. சுதாகரன் செல்வி தம்பதிகளின் செல்வப் புதல்விகளான அபி, அனு இரட்டைச் சகோதரிகளின் பிறந்தநாள் கொண்டாட்டம் எளிமையாக அதேநேரம் சந்தோசமாக தாயக உறவுகளினால் பல்வேறு கிராமங்களில் கொண்டாடப்பட்டது.

கடந்த வருடம் பிறந்தநாளுக்கு சில வாரங்களுக்கு முன்னர் பெற்றோருடன் இலங்கை சென்ற அன்புச்செல்வங்களான செல்விகள் அபி அனு ஆகியோர் பல நூற்றுக்கணக்கான பல்வேறு விதமான பெறுமதியான உடுப்புக்களை தமது செலவிலேயே இலங்கைக்கு கொண்டு சென்று மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் ஒப்படைத்து இருந்தார்கள்.

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஊடாக, குறிப்பாக பல்வேறு வாழ்வாதார உதவிகள் உட்பட பல்வேறு நற்பணிகளை, தொடர்ச்சியாக தாயக உறவுகளுக்கு உதவி வரும் சுவிஸ் வாழ் உறவுகளான “சமய, சமூக தொண்டர்களான” திரு திருமதி சுதாகரன் செல்வி தம்பதிகள் போன்றே அவரது பிள்ளைகளான மகன் ஆதி மட்டுமல்லாது, மகள்களான இரட்டை சகோதரிகளான செல்விகள் அபி, அனு ஆகியோரும் பொதுச்சேவையில் குறிப்பாக சமய, சமூக செயல்பாட்டில் சிரித்த முகத்துடன் பங்களித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் வாழ் உறவுகளான “சமய, சமூக தொண்டர்களான” திரு திருமதி சுதாகரன் செல்வி தம்பதிகள் இன்றைய நாளில் தமது இரட்டைச் செல்வங்களான செல்வி அபி, செல்வி அனு ஆகியோரின் பிறந்தநாளை தாயக சிறுவர் சிறுமியர் பெரியோர்களுடன் பிறந்த நாள் கேக் வெட்டி வாழ்த்துப்பா பாட்டுப் பாடி குதூகலமாக கொண்டாடினார்கள்.

அத்துடன் இரட்டை சகோதரிகளான செல்விகள் அபி, அனு ஆகியோரின் பெற்றோரின் நிதி பங்களிப்பில் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வன்னியின் இரண்டு கிராமங்களில் வழங்கி வைக்கப்பட உள்ளன, அதன் முதலாவது நிகழ்வாக இன்றையதினம் சமனங்குளம் கிராம வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதனை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்* வேண்டுகோளுக்கு இணங்க சமூக செயற்பாட்டாளரான திருமதி பிரியங்கா அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைத்து நடத்தி இருந்தார். இந்நிகழ்வில் சமனங்குளம் கிராம கோவில் தலைவி திருமதி. சுதாகரன் சுதாமினி கிராம சமூக செயற்பாட்டாளர் திருமதி கதிர்வேல் விஜயா மற்றும் கிராம மக்கள் சிறுவர்கள் கலந்து கொண்டார்கள்

இதேவேளை திரு. திருமதி சுதாகரன் செல்வி தம்பதிகள் தமது இரட்டைப் புதல்விகளின் பதினெட்டாவது பிறந்தநாளில், இன்றைய நாட்டின் மிகவும் இக்கட்டான பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மேலதிக வாழ்வாதார உதவிகளை வழங்குமாறும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” கோரி நிதிப் பங்களிப்பு வழங்கி உள்ளனர். அதுக்குரிய இரண்டாவது நிகழ்வாக பெறுமதியான உலருணவுப் பொருட்களும், இன்றைய பிறந்ததின நிகழ்வை முன்னிட்டு நாளை வழங்கி வைக்கப்பட உள்ளது.

குறிப்பாக வாழ்வாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளோர், விசேட தேவைக்குட்பட்ட குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என பல தரப்பட்ட குடும்பங்களுக்கு பெறுமதியான உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கும்படி “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” கேட்டு கொண்டதிற்கிணங்க பெறுமதியான உலருணவுப் பொதிகளும், இன்றும் நாளையும் வழங்கி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல்வேறு வகைகளில் திரு. திருமதி சுதாகரன் செல்வி தம்பதிகள் தாயக உறவுகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே பல்வேறு வகைகளில், இவ்வாறான பணிகளை செய்து வருகின்றார்கள். அந்தவகையில் இன்றைய நாளில் பிறந்தநாள் கொண்டாடும் அவர்களின் இரட்டைச் செல்வங்களான அபி அனு ஆகியோரை, அவரது அம்மா, அப்பா, அண்ணன் ஆதி மற்றும் அவர்களின் உறவுகள் ஆகியோருடன், தாயக உறவுகளும், “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” இணைந்து பல்கலையும் கற்று, அனைத்து செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவென இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
27.06.2024

சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ) -பகுதி -1

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.