மட்டக்களப்பில் புளொட் 35 வது வீர மக்கள் தினம் அனுஸ்டிப்பு..
மட்டக்களப்பில் 35 வது வீர மக்கள் தினம் அனுஸ்டிப்பு
தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் உமாமகேஸ்வரன், கழகக் கண்மணிகள், சக அமைப்புப் போராளிகள்,ஆதரவாளர்கள்,மற்றும் அனைத்து பொதுமக்களையும் நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு புளொட் அமைப்பின் அரசிசாள் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் கிரான்குளம் சீமூன் கோட்டல் மண்டபத்தில் இன்று (14-07-2024) மாலை 3மணியளவில் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.
உயிர்நீத்த தோழர்களுக்கு மலர் மாலை அணிவித்தும்,விளக்கேற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அஞ்சலி உரைகளும் நிகழ்த்தப்பட்டது.
இன் நிகழ்வை நடத்துவதற்காக ஜெர்மன்கிளையினர் கழக சுவீஸ் உறுப்பினர்கள் தோழர்கள் ரஞ்சன், செல்வபாலன், றமணன்,அன்ரன், பேர்ண் தயா, சித்தா,பிரான்ஸ் தயாளன் ஜெர்மனி யூட் ஆகியோர் வழங்கியமை குறிப்பிடதக்கது.
ஐம்பது உயிர்நீத்த கழக உறுப்பினர்களின் உறவினர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் உதவுவதற்காக ஜெர்மன் கிளையினர் 150000/வும், சுவீஸ் உறுப்பினர்கள் தேவண்ணர்,சிவகுரு,ஆகியோர் மாணவர்களுக்கு வழங்குவதற்காக மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக வழங்கிய இரண்டு துவிச்சக்கர வண்டிகளும் நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் உயிர்நீத்தஅரசியல்துறைசெயலாளர் வாசுதேவாவின் சகோதரி அருந்ததி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நா.இரத்தினலிங்கம்(குரு) புளொட் அமைப்பின் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் சிறிஸ்கந்தராஜா (பீற்றர்), கட்சியின் சமுக மேம்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளர் ந.ராகவன், மத்தியகுழு உறுப்பினர் சாரதா கழகத்தின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் மதி, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கா.கமலநாதன், பொருளாளர் கிருஸ்ணராஜாஜி, இளைஞர் அணிப் பொறுப்பாளர் லோகநாதன், மகளிர் அணிப்பொறுப்பாளர் இந்திராணி, கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்கள் அருணாசலம், சங்கரப்பிள்ளை ஆகியோரும் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.