சிறப்பாக நடைபெற்ற, “புளொட் பிரான்ஸ் கிளையின் 35 வது வீரமக்கள் தின” -2024- நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
சிறப்பாக நடைபெற்ற, “புளொட் பிரான்ஸ் கிளையின் 35 வது வீரமக்கள் தின” -2024- நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) பிரான்ஸ் கிளையின் வீரமக்கள் தின நிகழ்வானது நேற்றையதினம் பாரிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
புளொட் பிரான்ஸ் கிளையின் பொறுப்பாளர் தோழர் சுகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் மூத்த உறுப்பினர் தோழர்.ரங்கா ஈகைச்ச்சுடரை ஏற்றி வைத்து ஆரம்பித்து வைக்க, புளொட் பிரான்ஸ் கிளையின் நிர்வாகப் பொறுப்பாளரான தோழர் தயாளன் மலர்நசாலியை செலுத்தி ஆரம்பித்து வைக்க பிரான்ஸ் தோழர்களான ஜெயந்தன், சசி முல்லை, சசி வவுனியா, தயா மடடு, உதயன், தீபன், சுதா, யூட் யேர்மன் மற்றும் கயூரன் உட்பட ஆதரவாளர்கள் சிலரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
நிகழ்வில் “மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழக ஸ்தாபகர்களில் ஒருவரும், மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதியும், கழகத்தின் செயலதிபருமான தோழர்.உமாமகேஸ்வரன் அவர்களையும், அவரது வழிகாட்டலில் தம்முயிரை ஈர்ந்த கழகக் கண்மணிகளையும் மற்றும் அனைத்து இயக்கப் போராளிகளையும், பொதுமக்களையும் நினைவுகூர்ந்து வருடாவருடம் நடாத்தப்படும் வீரமக்கள் தின நிகழ்வானது வழமை போல் இவ்வருடமும் புளொட் பிரான்ஸ் கிளையின் சார்பில் நேற்றையதினம் இங்கு நினைவு கூறப்பட்டது .
இதன் முதல்நிகழ்வாக “ஆகுதியாகிய அனைவருக்குமான” தீபச்சுடரேற்றல், ஈகைச்சுடரேற்றல் நிகழ்வு நடைபெற்றது. அடுத்து மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த அனைத்து வீரமக்களும் ஆத்மா சாந்தியடைய வேண்டி ஒருநிமிட அமைதி வணக்கம் நடைபெற்றது.தொடர்ந்து கலந்து கொண்டோரினால் நினைவுத்தீபம் ஏற்றி வைக்கப்பட்டதுடன், மலரஞ்சலியும் மறைந்த வீரமக்களுக்கு செலுத்தப்பட்டது. இறுதியாக நன்றியுரையுடன் நிகழ்வு சிறப்பாக நிறைவு பெற்றது.
சிறப்பாக நடைபெற்ற, “புளொட் பிரான்ஸ் கிளையின் 35 வது வீரமக்கள் தின” -2024- நிகழ்வு.. (வீடியோ)