புங்குடுதீவில் நாய்களை கொடூரமாக வெட்டி காணொளியாக்கிய நபர் கைது.. (படங்கள் இணைப்பு)
புங்குடுதீவில் நாய்களை கொடூரமாக வெட்டி காணொளியாக்கிய நபர் கைது.. (படங்கள் இணைப்பு)
நேற்றிரவு ஊர்காவற்துறை தலைமை பொலிஸ் அதிகாரி விதான பத்திரன தலைமையிலான பொலிஸ் குழுவினரால் புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரம் வல்லன் பகுதியிலுள்ள வீடொன்று சுற்றி வளைக்கப்பட்ட போது இரண்டு வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் தனுஜன் (கில்லி) எனப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அங்கிருந்து தப்பியோடிய மற்றொரு நபரான பாலசுதர்சன் (மாட்டு பாலா) என்பவரை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .
கைதுசெய்யப்பட்ட நபர் மற்றும் தப்பியோடிய நபர் மீது உயிரோடு நாய் ஒன்றை சித்திரவதை செய்து வெட்டிக் கொன்ற வழக்கு மற்றும் சட்டவிரோதமாக கால்நடைகளை இறைச்சியாக்கியமை உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்பாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் காணப்படுவதாகவும் பொலிஸ் தரப்பு கூறுகின்றது.
பெற்றோர்களின் தகுந்த பராமரிப்பின்றி வளர்ந்த இந்நபர்களின் மனநிலை தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்குரிய வைத்தியசாலைகளில் நீண்டகாலத்திற்கு அனுமதித்து சிகிச்சை வழங்குவதே பொருத்தமான செயற்பாடு என்றும் அதனூடாகவேனும் புங்குடுதீவு பிரதேசத்தில் வன்முறை மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியுமென்றும் புங்குடுதீவு கிராமத்தில் கடமையாற்றுகின்ற அரச அதிகாரியொருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.