சுவிஸ் வாழ் புங்குடுதீவு லுக்ஸ் அவர்களின் பிறந்த நாளில், வாழ்வாதார உதவியாக கோழிக்கூடும், கோழிகளும் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ)
சுவிஸ் வாழ் புங்குடுதீவு லுக்ஸ் அவர்களின் பிறந்த நாளில், வாழ்வாதார உதவியாக கோழிக்கூடும், கோழிகளும் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ)
###################################
புங்குடுதீவைச் சேர்ந்தவரும் சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் வசிப்பவருமான திரு சின்னத்துரை இலக்ஸ்மணன் தனது பிறந்தநாளை தாயக உறவுகளோடு இனிதாக கொண்டாடினார்.
வவுனியா கோவில்குளம் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வாக தேவையுடைய இரண்டு குடும்பங்களைத் தெரிவு செய்து, அக்குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக கோழிக்கூடும், கோழிகளும் வழங்கி வைக்கப்பட வேண்டுமென அவரது குடும்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்க முதல் நிகழ்வாக இன்றையதினம் நடைபெற்றது.
திரு.லுக்ஸ் அண்ணன் என அழைக்கப்படும் திரு சின்னத்துரை இலக்ஸ்மணன் அவர்கள் தமிழர்களின் வாழ்வியலில் அக்கறையுடன் செயற்பட்டு தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றத்தை கல்வியால் மட்டுமே இலக்கை நோக்கி பயணிக்க முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு பாடுபட்டவர்.. பாடுபட்டு வருபவர். அதேபோல் புங்குடுதீவு ஊர் நோக்கிய சேவையில் சுவிஸ் ஒன்றியம், மண்ணின் மைந்தர்கள், வட்டார அமைப்பு என்று பல்வேறு அமைப்புகள் ஊடாக ஊருக்காகவும், ஊரில் வாழும் மக்களின் நலனுக்காகவும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருபவர்.
அந்தவகையில் திரு லுக்ஸ் அண்ணனின் பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு மேற்படி வாழ்வாதார உதவிகளாக கோழிக்கூடும் கோழிகளும் வழங்கி வைக்கும் நிகழ்வின் முதல் நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது, அடுத்தநிகழ்வு நாளை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய முதல் நிகழ்வில், வவுனியா கோவில்குளத்தில் கடும் சுகவீனத்தால் பாதிக்கப்பட்டு நான்கு பிள்ளைகளுடன் வசிக்கும் திருமதி சிவராசா அமராவதி என்பவருக்கு கோழிக்கூடும், கோழிகளும் வழங்கி வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்வுக்கான முழுமையான ஏற்பாடடையும் ஒழுங்குபடுத்தலையும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழக தொழிற்சங்கப் பிரிவுப் பொறுப்பாளருமான திரு.காண்டீபன் மேற்கொண்டு இருந்தார். பயனாளிகளை மாதர் சங்க சமாஷனம் தெரிவு செய்து இருந்தனர்.
மேற்படி நிகழ்வில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக வவுனியா மாவட்டப் பொறுப்பாளருமான திரு.சந்திரகுலசிங்கம் மோகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கோழிக்கூட்டையும், கோழிகளையும் வழங்கி வைத்தார். அவருடன் கோவில்குளம் மாதர் சுய உதவிக் குழுவின் தலைவி, மற்றும் மாதர் சுய உதவிக் குழு சம்மேளனத்தின் வவுனியா மாவட்ட தலைவி ஆகியோரும் இணைந்து கலந்து சிறப்பித்து இருந்தனர்.
“லுக்ஸ்” என அன்புடன் அழைக்கப்படும் சின்னத்துரை இலக்ஸ்மணன் புங்குடுதீவில் வல்லன்,வீராமலைப் பிரதேசத்தில் பிறந்து சுவிஸில் வாழ்ந்த போதிலும் சமூகநலத் தொண்டில் தன்னார்வமுடன் செயற்படுபவர். குறிப்பாக தமிழ் கல்விச்சேவையின் முக்கிய செற்பாடடாளர்களில் ஒருவராகவும், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் முன்னாள் பொருளாளராகவும், மற்றும் பல்வேறு சமூக, மக்கள் நலத் தொண்டிலும், தன்னார்வமுடன் பல அமைப்புக்களில் இணைந்து செயல்படுபவர்.
இதேவேளை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” செயற்பாடுகளை சமூகவலைத் தளங்களில் பார்வையிட்ட இவரது குடும்பத்தினர், இவரது பிறந்தநாளை எமது மன்றத்தின் ஊடாக மக்களுக்கு வாழ்வாதார உதவியை செய்யுமாறு கூறி வழங்கிய நிதிப்பங்களிப்பில் இன்றையதினம் தேவையுடைய இரண்டு குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக கோழிக்கூடும், கோழிகளும் வழங்கப்பட்டது.
இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடிய லுக்ஸ் அண்ணர் அவர்களின் குடும்பத்தினர் வழங்கிய நிதிப்பங்களிப்புக்காக நன்றியினைத் தெரிவிப்பதோடு, தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
02.08.2024
சுவிஸ் வாழ் புங்குடுதீவு லுக்ஸ் அவர்களின் பிறந்த நாளில், வாழ்வாதார உதவியாக கோழிக்கூடும், கோழிகளும் வழங்கி வைப்பு.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos